குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 9 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

`பெரியகோயில் கருவறையிலும் கோபுரத்திலும் பலநூறு ஆண்டுகளுக்குப் பின் தமிழ்!' - பெ.மணியரசன் பெருமிதம்.

03.02.2020 ......கு. இராமகிருசுணன்,ம.அரவிந்த் .கடந்த முறை நடந்த குடமுழுக்கின்போது பெரியகோயில் கருவறையிலும் கோபுர கலசத்திலும் சம்சுகிருதம் மட்டுமே ஒலித்தது. தமிழ் திருமுறைகள் கருவறைக்கு வெளியில்தான் ஓதப்பட்டன. கோபுரகலசத்தில் துாயநீர் ஊற்றியபோதும் தமிழ் ஒலிக்கவில்லை.தமிழர் அறியவேண்டியது நீர்வழிபாடு தமிழர் வழியானது, தீவழிபாடானது ஆரியர்முறையானது இரண்டை யும் இணைத்து ஒரு முறையை உருவாக்கி தமிழர் நிலையை திரிசங்கு நிலையில் விட்டதை உணர்தல் அறிவு!

தஞ்சை பெருவுடையார் கோயில்

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது. இது முதல்கட்ட வெற்றி... பலநூறு ஆண்டுகளுக்குப் பின் பெரியகோயில் கருவறைக்குள்ளும் கோபுர கலசத்திலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கயிருப்பதாகத் தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு குறித்தும் இன்று வழங்கப்பட்ட திர்ப்பு குறித்தும் நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், ``தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வழக்கு தொடுத்திருந்தோம். இக்கோரிக்கையை நாங்கள் வலியுறுத்த தொடங்கியபோது, குடமுழுக்கின்போது தமிழ் திருமுறைகளும் ஓதப்படும் என இந்துசமய அறநிலையத்துறையினர், ஒரு சமாளிப்பாகவே பதில் சொல்லி வந்தார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கருவறைக்குள்ளும் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும்போதும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

இந்நிலையில்தான் கடந்த 29.01.2020 அன்று தமிழ் குடமுழுக்குக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் நுணுக்கமான வாதங்களை முன் வைத்தார்கள். அப்போதுதான் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை கூடுதலாக ஒரு பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கலசம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ் மற்றும் சம்சுகிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான இடம் அளிக்கப்படும் என்றும், தமிழ் மந்திரங்களும் சம்சுகிருத மந்திரங்களும் சம அளவில் ஓதப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், `குடமுழுக்கின்போது இருமொழிச் சமத்துவம் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும், இத்தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்தியது பற்றிய அறிக்கையை குடமுழுக்கு முடிந்த ஒரு வாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றி; அயல் ஆதிக்க மொழியான சம்சுகிருதத்துக்குக் கிடைத்த முதல் தோல்வி. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு இத்தீர்ப்பை வரவேற்கிறது.

கடந்த முறை நடந்த குடமுழுக்கின்போது பெரியகோயில் கருவறையிலும் கோபுர கலசத்திலும் சம்சுகிருதம் மட்டுமே ஒலித்தது. பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சை பெரியகோயில் கருவறையிலும் கோபுர கலசத்திலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்போகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி குடமுழுக்கு நிகழ்ச்சி முழுவதிலும் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். சமயச் சான்றோர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் சமயச் சான்றோர்கள் சிலரை அக்குழுவில் இணைத்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இந்த முதல்கட்ட வெற்றிக்குக் காரணமானவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் பா.ய.க தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கை வெளியிட்டன. தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் படைப்பாளிகளும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு வடிவங்களில் தமிழ்க் குடமுழுக்குக்கு ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். தமிழ் வழிபாட்டுரிமைக்குத் தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் குரல் கொடுத்தார்கள். அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு, சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.