குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சமசுகிருத மொழி பற்றி!

28.01.2020 ... சமசுகிருதம் என்ற வார்த்தைக்கே மூலச்சொல் சமசுகிருதத்தில் இல்லை. தமிழில் தான் உள்ளது. கிருதம் என்றால் மொழி, சம் என்றால் சமைக்கப்பட்டது, செய்யப்பட்டது, மேம்படுத்தப்பட்டது. ஆக சமசுகிருதம் என்றால் மேம்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்து மேம்பாடு, மாறுபாடு செய்யப்பட்டது என்று பொருளாகிறது. எது ஏற்கனவே இருந்தது? பிராகிருதம், அதாவது வட இந்தியத்தமிழ்.

பிராகிருதம் என்றால் முதலாவதாக செய்யப்பட்டது என்று பொருள். பிராகிருதம் என்றால் முதல் மொழி என்றே பொருள். தென்னிந்தியத்தமிழர் வட இந்தியத்தமிழ் மொழியை வடமொழி என்று அழைத்தனர். வட இந்தியத்தமிழர் வட இந்தியத்தமிழை பிராகிருதம் அதாவது முதல் மொழி என்று அழைத்தனர்.

2) தமிழில் மட்டுமே அதன் எல்லாச்சொற்களுக்கும் மூலச்சொல், வேர்ச்சொல் தமிழிலேயே உள்ளது. # தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 155 ல் தொல்காப்பியர் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதைப்போல தமிழின் எல்லாச்சொற்களும் பொருளோடு அர்த்தத்தோடு உள்ளவையே.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று

அணைத்தே செய்யுள் ஈட்டச்சொல்லே” – தொல். 880.

தொல்காப்பியம் என்பது இடைச்சங்க நூல் என்பதால் அதன் காலம் கி.மு. 3000 த்தைச் சேர்ந்தது. # தமிழே உலகின் முதல் மொழி என்பதற்கான 15 காரணங்களைக் கூறும் தமிழ் வேர்ச்சொல்லறிஞர் தேவநேயப்பாவாணர் 6 வது காரணமாய் சொல்வது: “ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல்.” :

3) வேதம் என்ற வார்த்தைக்கும் மூலச்சொல் தமிழில்தான் உள்ளது. வித்து, விதை என்பதே அம்மூலம். அதனால் கல்விச்சாலை வித்யாலயா எனப்படுகிறது. துாயதமிழ் வார்த்தை. (வித்து+ஆலயம்) – அகம் லயித்து, ஒருமனப்பட்டு விதை நாற்றங் காலாய் கல்வி பயிலுமிடம்.

4) சமசுகிருத வார்த்தைகளின் வேர்ச்சொற்கள் தமிழில்தான் உள்ளது. # மன்னுதல் என்றால் எண்ணுதல், சிந்தித்தல், பகுத்து ஆய்தல் என்று பொருள். : சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உயிரினம் மனிதன். அனுமன் என்றால் மனிதனைப் போன்றவன் என்று பொருள். எ. கா. பல்லவி, அனுபல்லவி. mon-key என்ற ஆங்கிலச்சொல்லும், மன்காட் என்ற இந்திச்சொல்லும் மனிதனைப்போன்றது என்றே பொருள் தரும். தமிழில் வானரம் என்று குரங்குக்கான வார்த்தை அறிவியல் பூர்வமானது. வானரம்=வால் + நரம், (நரன்=மனிதன்). இந்த வார்த்தை அப்படியே சமசுகிருதத்தில் வானர என உள்ளது. # கல்லிலிருந்து உருவான கலயம் என்ற தமிழ், சமசுகிருதத்தில் கலசம்ஆகிறது. # சொல், சொலவடை அப்படியே சுலோகம் ஆகிறது சமசுகிருதத்தில்.

5) சமசுகிருதம் என்ற மொழி பேசுகின்ற, பேசப்பட்ட ஒரு நாடோ, மாநிலமோ, ஊரோ, வீடோ எக்காலத்திலும் இருந்ததில்லை.

படகா,தோடா போன்ற சிறிய மொழிகள் கூட பேசப்படும் இடம், பேச மக்கள் என்று இருக்கும்போது சமசுகிருதத்திற்கு அப்படி பேசப்படும் ஒரே ஒரு ஊரோ ஒரு மக்கள் கூட்டமோ ஏன் ஒரு வீடோ கூட இல்லை என்பதே உண்மை.

செத்த மொழிகள்:

இலத்தீன், பழைய கிரேக்கம், பழைய ஹீப்ரு, அரமாய்க், சுமேரியன் போன்ற மொழிகள் செத்த மொழிகள் எனப்படுகின்றன என்றால் ஒரு காலத்தில் பேசப்பட்டது, இப்போது வழக்கில் இல்லை என்று அர்த்தம். அந்த வகையில் கூட சொல்லப்பட முடியாத ஒன்று இந்த சமசுகிருதம். காரணம் ஒருபோதும், எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு ஊரிலும்,

எந்தவொரு வீட்டிலும் பேசப்படவில்லையே.

சாத்தூர் சேகரன் சொல்லுவார், செத்த மொழி என்று சொல்வதற்குக்கூட

ஒரு சில இலக்கணங்கள், வரைமுறைகள் தேவை என்று. உதாரணமாக,

1. செத்த மொழியின் வாரிசாக ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டோ சில மொழிகள் இருக்க வேண்டும்.

2. வாரிசு மொழிகளில் செத்த மொழியின் சிறப்புக்குரிய மரபுகள் பல காணப்பட வேண்டும்.

சமசுகிருதத்திற்கு வாரிசு கிடையாது. அம்மா இருந்தாத்தானே பிள்ளைஙகள்.

தமிழோடு இணையாக அல்ல, ஒரு மொழியாகவே கருதப்பட தகுதியற்ற வார்த்தைத் தொகுப்புதான், வார்த்தைத் திணிப்புதான் சமசுகிருதம் என்பது.

அதேபோல வடமொழி என்று ஒன்று இல்லை. வடஇந்தியத் தமிழ் என்றே அது அழைக்கப்படவேண்டும்.

காரணம், சமசுகிருதம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்தான் செய்யப்பட்டது. ஆனால் வட இந்தியத்தமிழ் என்பது. கி.மு 5000 க்கு முன்பே வழக்கத்தில் இருந்த மொழியாகும். ஆரியர்களின் மோசடியான பரப்புரையால் வடமொழி சமசுகிருதமாக்கப்பட்டு இருக்கிறது.

6) சமசுகிருதம் என்பது ஓது மொழியே அன்றி எழுத்து மற்றும் பேச்சு மொழி அல்ல. சமசுகிருதம் என்பது ஸ்ருதி – வாயால் உச்சரிக்கப்பட வேண்டுமே ஒழிய எழுதப்பட முடியாத மொழி. சமசுகிருதம் என்பது ஸ்ம்ருதி – காதால் கேட்கப்படவேண்டுமே ஒழிய எழுதப்பட முடியாத மொழி. சமசுகிருதம் என்பது தேவ பாஷை – ஆதலால் “தேவர்களின் மொழி”? யே யன்றி மனிதரின் மொழியல்ல, கடவுள்களின் மொழியல்ல.

ஆக சமசுகிருதம் என்பது ஒரு மொழியே அல்ல.