குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 4 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிலிருந்து தப்பிக்க இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்

27.01.2020 உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முன்னெச்சரிக்கையாக செயற்பட வைத்துள்ளது. உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானால் எப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும் என்று பார்க்கலாம்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும்.

இவ்வைர தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.

சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.

இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரசு தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.

சீனாவுக்கு செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் சிறப்பு கவனம் செலுத்துகின்றன.

இதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வைரச தாக்கம் காரணமாக உலக நாடுகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வட கொரியா தமது எல்லைப் பகுதிக்கு வரவென சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியிருந்த அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அத்தோடு அவுசுதிரேலியாவுக்கு அதிகளவு உல்லாசப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருவதால் அந்நாடு தம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 2002இல் தென் சீனாவில் தோற்றம் பெற்று உலகை உலுக்கிய சார்சு வைரசு காரணமாக 800 பேர் உயிரிழந்தனர். 5000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 650 பேர் சீனா, கொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் கனடாவில் 44 பேரும், தாய்வானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் என்றபடி இறந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே சீனாவில் தோற்றம் பெற்று உலக மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கும் 2019 – நொவல் கொரோனா வைரச தொற்றைத் தவிர்த்து கொள்வதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்படுவது மக்களின் பொறுப்பாகும்.

இதே வேளை இலங்கையிலும் இந்த வைரசு தொற்றுக்கு உள்ளான சீன நாட்டு பெண்ணொருவர் உட்பட இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.