குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழரின் அடையாளமான " சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைப்பு - பெருந்திரளானோர்

11.01.2051...26.01.2020பங்கேற்பு! குமரிக்கண்டம் பற்ொறிய யன இடம்பெறாமையால்,தமிழின் தொன்மை எண்ணப்படத்தக்கவாறும் ,முதன்மை கொள்ளத்தக்கவாறும்  எண்ணப்படாமை தமிழரின் பத்தோடு பதின்றாக்கும் தவறும் உள்ளதோ என எண்ணத்தோன்றுகின்றது!யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" இன்று சனிக்கிழமை மாலை 3 . 30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது. தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு , விநாயகர் வழிபாடு, அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் இடம்பெற்று சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் - கலாநிதிகள், தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளைத் திறந்துவைத்தனர்.

அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் திறந்துவைக்கப்பட்டது. கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால் அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்துவைத்தார். கந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார்.

தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசன் அவர்களின் நினைவுப் பதிவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார்.

சர்வமதத் தலைவர்கள் , கற்றறிந்தவர்கள் எனப் பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்றிருந்தனர். சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகளும் முற்றத்தில் யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் . இதுவரை சங்கிலியன், எல்லாளன் பண்டாரவன்னின் ஆகிய மன்னர்களின் உருவச் சிலைகளே அமைக்கப்பட்டுள்ளன என்று கலாநிதி , செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளில் அவர்களது பெயர்கள் - ஆட்சி செய்த ஆண்டு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரும்பொருள் காட்சியகத்துக்குள் வண்டிகள் - கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உள்பட முன்னோர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 சிற்றுந்துகள்...மகிழுந்துங்கள்.(மோட்டார்க் கார்கள்) இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது தளத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பித்தளைப் பாத்திரங்கள், பழமைவாய்ந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவை எல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இரண்டாவது தளத்தில் ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள் , பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் இந்து சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், கீரிமலை நகுலேசுவரம், திருக்கேதீசுவரம், முன்னேசுவரம், கோணேசுவரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பழைய பத்திரிகைகள் - 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியில் வரலாற்று அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் - தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. "இந்த அரும்பொருள் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு இன்று தொடக்கம் மூன்று நாள்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.

அதன் பின்னர் இந்த அரும்பொருள் காட்சியகத்தை செயற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாய் அனுமதிச் சீட்டும் ஏனையோருக்கு 100 ரூபாய் அனுமதிச் சீட்டும் வழங்கப்படும் என்று சிவபூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது" என்று சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.