குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர்களே இந்தியாவின் பூர்வீகக்குடிகள் அழகிய தமிழ் இருக்கும் போது பிணமான சமசுகிருதம் ஏன்??

26.01.2020 சமசுகிருதத்தின் மீது கோபம் இல்லை குத்தூசி ஆரிய மாயை, சமசுகிருதம், சமசுகிருதத்தின் மீது எனக்கு கோபமோ, எதிர்ப்போ, நகைப்போ இல்லை எதுவரை என்றால் எந்த நாட்டிலும், ஊரிலும் வீட்டிலும் பேசப்படாத பிணமான சமசுகிருதம் கடவுள் மொழி தேவ மொழி என்று சொல்லாதவரைஎதுவரை என்றால் தமிழை அழித்து சமசுகிருதம் வாழவேண்டும் என்று நினைக்காதவரை.

எதுவரை என்றால் தமிழ் இலக்கியங்கள், மற்ற மொழி இலக்கியங்கள் தன் மொழியில் இருந்து தான் வந்தது என்று சொல்லாது இருக்கும் வரை

எதுவரை என்றால் தான் கட்டாத கோயிலை தாந்தான் கட்டியது என்றும், தான்சொல்லித்தான் கட்டியது என்றும் சொல்லாதவரை

எதுவரை என்றால் மனிதனை மனிதனாகவே மதிக்காத வர்ணாசிரம தர்மத்தை வைத்துக்கொண்டு அந்தணர் என்றால் பிறாமணன் என்று சொல்லாதவரை

எதுவரை என்றால் வாழும் போது நிறத்தால் பேதம் பார்த்துக்கும் வர்ண தர்மம் கண்ணனையும் இராமனையும் மற்ற பிறாமணரல்லாத கடவுளர்களை கும்பிடும் நாடகம் ஆடாதவரை

எதுவரை என்றால் தமிழரில் சிறந்தவர்களை(ஆதிசங்கரன், இராமானுசாச்சாரியார், அபிராமி பட்டர்) தன் இனத்தவன் என்று திருடிச் செல்லாதவரை.

எதுவரை என்றால் திருக்குறள் சமசுகிருத வேதத்தின் சாரம் என்று சொல்லாதவரை

எதுவரை என்றால் வேதம், ஆலயம், அருட்சினை, இலிங்கம், தேசு (தேசம்), மந்தரம், …… போன்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் சொற்களை தன்னகப்படுத்தாது இருக்கும் வரை

எதுவரை என்றால்  ”வசுதேவ குடும்பகம்” என்பதே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கு விதை என்று சொல்லாதவரை

எதுவரை என்றால் 63 நாயன்மார்களின் வரலாற்றை திருடி ”மகாதேவ பக்தவிசயம்” என்று கதாகாலட்சேபம் செய்யாதவரை

எதுவரை என்றால் ஆண்டாள் பாசுரத்தை, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சமசுகிரதத்தில்  மொழிப்பெயர்த்து அவை தன்னிடமிருந்தே தமிழுக்கு வந்தது என்று சொல்லாதவரை

எதுவரை என்றால் மனிதனை மனிதனாக பார்க்காத சனாதன தர்மமும் வர்ணாசிரம தர்மமும் மீண்டும் வேண்டும் என்று சொல்லாதவரை

எதுவரை என்றால் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும், சூட்டும் பெயரிலும் ஒருவரின் அடையாளத்தை தேடாத வரை

எதுவரை என்றால் கடவுளின் பெயரால் மற்றவர்கள் பலி கொடுத்தால் பாவம் சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லிவிட்டு தான் செய்யும் யாகத்தில் பலி கொடுக்காதவரை

எதுவரை என்றால் தேனினும் இனிய தமிழ் இருக்கும்பொழுது பிணமாகிய சமசுகிருதத்தை திணிக்காதவரை.

மேற்கூறிய அனைத்து செய்யத்தகாதவைகளை செய்துவிட்டு சமசுகிருதம் தேவ மொழி என்று கதை கட்டிவிடுகிறது குள்ள நரிகள்.  சித்தர்களின் சாபத்தால் இறந்து பிறந்த குழந்தைப்போன்று இன்றுவரை பேசப்படாது இருந்தாலும் அந்த பிணம் மனித வாழ்க்கையில் வாடை வீசு காற்றை மாசு படுத்தி உலகத்தை திசை திருப்புகிறது.

தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் துரோகத்தையும் செய்துவிட்டு இந்திய மொழிகளுக்கும் இனத்துக்கும் துரோகம் விளைவித்துவிட்டு பின்னர் உலக அரங்கில் இந்திய வரலாற்றைப் பற்றி பல கற்பனை கதைகளை கட்டிவிட்டு உலக மக்களுக்கும் துரோகம் விளைவித்துவிடும் சமசுகிருதம். இதனை சரி செய்ய மதம் கலை இலக்கியம் அரசியல் அனைத்திற்கும் தோற்றுவாயாக உள்ள தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தமிழகம், தென்னகம்,  இந்தியா பிறகு உலகோர் வரை சமசுகிருதத்தின் தீட்டு நிலைகளை உணர வைத்து தமிழால் அனைத்துக்கும் பரிகாரம் செய்யப்படவேண்டும்.

வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று நின்றிடாமல் ”இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்.” என்பதனையும் உரக்கச் சொல்வோம் உலகிற்கு