குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

அப்பாவி ஈழத்துப்பெண்களை கற்பழிக்கும் எம்.ஏ.யீ (MAG) நிறுவன அதிகாரிகள்; உடனடியாக அரசாங்கம் கைது செய்ய

வேண்டும் 24.01.2020 ....இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பல நிறுவனங்கள் இலங்கையின் தமிழர் பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் மனிதாபிமான செயலில் தன்னை ஈடுபடுத்திவரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவன மொன்றில் மனிதாபிமானமற்ற செயல்களில் அந்நிறு வனத்தின் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

தமிழர் தாயகப்பகுதியில் கடந்த காலங்களில் போரால் பல பெண்கள் தங்கள் கணவரை, தங்கள் குடும்பத்தை இழந்த நிலையில் தனியாகவும், கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தும் வருகின்றனர்.

இவர்கள் பொருளாதார வசதி இல்லாமல் சிக்கி தவித்து வருகின்ற நிலையில், பல வேலைகளுக்கு செல்கின்றனர், இப்படியான பெண்கள் சிலர்தான் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்படியான பெண்களைத்தான் இங்கு பிறந்து வளர்ந்த போரிற்குள் சிக்கிவந்த, போர் வலியை அனுபவித்த பல ஆண்கள் இந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி தற்போது குறித்த நிறுவனத்தில் பல இலட்சம வருமானத்தில் உயர் பதவி வகித்து வருகின்றனர்.

இப்படியாப்பட்ட அதிகாரிகளில் சிலர் அங்கு வறுமையை வெல்ல வேலைக்கு வரும் அப்பாவி தமிழ் பெண்களை, மிரட்டி, வேலையை விட்டு துரத்தி விடுவோம் என்னோடு வா என கட்டாயப்படுத்தி கூட்டாகவும், தனியாகவும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவருகின்றனர்.

இப்படி பல பெண்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளால் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர், இதனை அந்த பெண்கள் வறுமையின் காரணமாக, வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில், அவர்களின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து வெளியில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர்.

இப்படியான சூழ் நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளை, குறித்த அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பித்த அந்த பெண், அதனை தொடர்ந்து குறித்த அதிகாரிகள் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயல்படும் வெளிநாட்டவரிடம் முறையிட்டதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு மூன்று பேரை தற்காலிகமாக குறித்த நிறுனத்திலிருந்து நீக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.