குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை!(ஆபரேசன்)

12.01.2020 2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை!(ஆபரேசன்) முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.

கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.

அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.

திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல்  (ஸ்டெர்லைஸ்) செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு (ஸ்டெர்லைஸ்) செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.

திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சர்யங்கள் விரியும்.