குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சுவிற்சர்லாந்துவாழ் தமிழ்க் கலைஞர்களுக்கு விருது வழங்கும் STNAward சரித்திரம் நிகழ்வு.

11.01.2020 சுவிற்சர்லாந்துவாழ் தமிழ்க் கலைஞர்களுக்கு விருது வழங்கும் STNAward சரித்திரம் நிகழ்வில், இவ்வாண்டு பிரதம அதிதியாகக் கலந்து, சரித்திர நாயகர்களாக விருது பெற்ற மூவரையும் சிறப்புச் செய்யும் சந்தர்பம் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் அமைந்தது.

திரைத்துறைக் கலைஞர்களான திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் ( குத்துவிளக்கு ), திரு. குணபதி கந்தசாமி (வாடைக்காற்று), பரதக் கலைஞரும், ஆசிரியருமான, திருமதி. மதிவதனி சுதாகரன், ஆகியோர் சரித்திர நாயகர்களாக விருது பெற்றார்கள். இந்த மூவரும் ஏலவே எமக்கு இனிய நண்பர்கள். அவர்களைக் கௌரவித்து நாமும் மகிழ்ந்தோம்.

நீண்ட நாட்களின் பின் நண்பர்கள், சண். தவராஜா, வித்தகன் சுரேஸ், ஆசிரியர் முருகவேள், ஆசிரியர் விவேகானந்தன், சுவிஸ் அரசியலில் பங்குகொண்டு வரும், திருமதி. தர்சிகா கிருஷ்ணாந்தன், சிறி.இராசமாணிக்கம், ஆகியோரைச் சந்திக்கவும், அளவாவி மகிழவும் முடிந்தது.

விருது வழங்கலுக்கு முன்னதாக, சரித்திரம் நிகழ்வுகான அந்தெம் பாடலாக, சரித்திரம் ஏற்பாட்டாளர் வசியின் வரிகளில், டென்மார் வசந் செல்லத்துரையின் இசையில், கர்னாட்டிக் கபே கலைஞர்கள் பலர், பாடியும் இசைத்தும் உருவான அருமையான பாடல் நடனத்துத்துடன் வெளியிடப் பெற்றது.

இந்த விழாவில் விருதுபெற்ற இளையவர்கள் இருவர் எமது கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நம் கண் முன்னால் வளரந்த பிள்ளைகள். செல்வி: அகல்யா கணேசு(ஸ்) சிறந்த நடனக் கலைஞருக்கான விருதினையும், செல்வன்: மணிபரன் தங்கவேலாயுதம் சிறந்த பாடலுக்கான விருதினையும் பெற்றார்கள்.

அகல்யா; பரதம் பயின்றவள். அதே சமயம் மேற்கத்தேய நடனங்களிலும் நன்கு பரிச்சயமுள்ளவள். இலாவகமான உடல் மொழி வாய்க்கப் பெற்றவள். தென்னிந்தியச் சினிமா நடன இயக்குனர் கலா மாசு(ஸ்)டரின் கவனம் பெற்றவள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர், பெரியோர்களுக்கு, அவள் தரும் அன்பும் மரியாதையும் குறிப்பிடத்தக்கது.

பரன்; நாம் வளர்த்த பிள்ளையெனலாம். நல்ல நடனக் கலைஞன், இயக்கமும், எழுத்தும், பாடுந் திறனும், அதற்கும் மேலாக இயல்பான நகைச்சுவையும் இணைந்து வருகிறது. அவனது பேரன் பேத்தியை வைத்து இயக்கிய " அழகே .." பாடலுக்குத்தான் அவனுக்கான விருது கிடைத்தது என நினைக்கின்றேன். ஆனால் அவனது யாரி (Jaari ) பாடல்தான் எனக்குப் பிடித்தது. அது பலருக்கும் பிடித்திருப்பதால்தான் யூட்யுப்பில் 50000 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

இளம் அரசியலாளர் திருமதி. தர்சிகாகா கிருசுணானந்தனின் சுற்றுச் சூழல் குறித்த அக்கறை மிகு பேச்சு ஆர்வமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. இளைய தலைமுறையிடமிருந்து வரும் இவ்வாறான சிந்தனைகளே நாளை இந்த உலகைக் காத்து நிற்கும்.

தென்னிந்தியத் தொலைக்காட்சிகள் நடத்தும், விருது விழாக்களுக்கு இணையாகநடந்த இந்த விழாவின் மூலமும், மூளையுமாக இருந்த, சோலோ ஒளிப்பதிவு நிறுவனம் ஒளிப்பதிவுநிறுவனம்(மூவீஸ்) வசியினதும், அவர்கள் சார்ந்த குழுவினரது அர்ப்பணிப்பான உழைப்பும், காலத்தால் போற்றுதல் செய்யக் கூடியது. விழா ஏற்பாட்டளர் வரிசையில், வசியால் எனக்கு அறிமுகமாகிய கீரன் முதல், மண்டப முகப்பிலும், பின்னணியிலும், இருந்து செயலாற்றிய நண்பர்கள் வரை, அனைவரும், எம்மை வரவேற்று, பின் வழியனுப்பும் வரை காட்டிய பணிவும், பரிவும், அபரிமிதமானது.

குழுநிலைச் செயற்பாடு (Team Work ) என்பது எல்லா இடங்களிலும் சிறப்பினைத் தரக்கூடியது என்பதற்கு இந்த விழாவும் ஒரு நல்ல முன்னுதாரணம். ஒரு விழாவினை நடத்துவதில் இருக்கக் கூடிய அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, அற்புதமான விழாவாக ஆக்குவதில் வசிக்கு உதவியாக இருந்த, அவரது மனைவி குமாரி, மற்றும் நண்பர்கள், அனைவரும், தாங்கள் நிகழ்த்தியிருப்பதும் ஒரு சரித்திரம் என நிச்சயம் நிறைவு கொள்ளலாம்.

விழாவில் எமது உரையின தொகுப்பினை அடுத்து வரும் இணைப்பில் காணலாம்.

https://youtu.be/bhSPQ0O4Y9s        https://www.facebook.com/STNAwards/ தொகுப்பு கயேந்திரசர்மா ஐயா அவர்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.