குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்த துணி 2020ல்..

08.01.2020 ... Taizé கிறிசுதவ ஒன்றிப்பு குழுமத்தின் ஐரோப்பிய இளைஞர்களின் அடுத்த கூட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் 28 முதல், 2021ம் ஆண்டு சனவரி 1 வரை இத்தாலியின் தூரின் நகரில் நடைபெறும்மேரி தெரேசா: வத்திக் கான் செய்திகள் இத்தாலியின் தூரின் நகர் பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்படும், இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி, 2020ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Taizé கிறிசுதவ ஒன்றிப்பு குழுமம், ஐரோப்பிய இளைஞர்கள் கூட்டத்தை, 2020ம் ஆண்டு டிசம்பரில், தூரின் நகரில் நடத்தவிருப்பதை முன்னிட்டு, அச்சமயத்தில் அந்த திருத்துணி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இப்பூமியில் நம்பிக்கை திருப்பயணம்” என்ற தலைப்பில், டிசம்பர் 28, கடந்த சனிக்கிழமை முதல், சனவரி 01, இப்புதன் வரை, போலந்து நாட்டின் Wroclaw நகரில் நடைபெற்ற Taizé கிறிசுதவ ஒன்றிப்பு குழுமத்தின், ஐரோப்பிய இளைஞர்கள் கூட்டத்தில், இதனை அறிவித்தார், தூரின் பேராயர் Cesare Nosiglia.

ஐரோப்பிய இளைஞர்களின் அடுத்த கூட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல், 2021ம் ஆண்டு சனவரி ஒன்றாந் தேதி வரை, இத்தாலியின் தூரின் நகரில் நடைபெறும் என்று, Taizé கிறிசுதவ ஒன்றிப்பு குழுமம் அறிவித்துள்ளது.

இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி, 2000மாம் யூபிலி ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின், ஐந்தாவது முறையாக, 2020ம் ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்படவுள்ளது.

2015ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதியிலிருந்து சூன் 24ம் தேதி வரை, தூரின் பேராலயத்தில் அத்திருத்துணி பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. அந்த ஆண்டு சூன் 21 முதல் 22 வரை தூரின் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிசு அவர்கள், அதைப் பார்வையிட்டு செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.