குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கையின் 3ஆவது பொதுத்தேர்தல் - 1956

21.12.2019 ஐம்பெரும் சக்திகளை அணிதிரட்டி ஆட்சியை கைப்பற்றிய எசு.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க.....

ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? 10 ஆசனங்களை கைப்பற்றி எழுச்சி பயணத்தை ஆரம்பித்த தமிழரசுக்கட்சி

சிறிலங்கா பொதுயன பெரமுன என்ற அரசியல் கட்சியை உருவாக்கி - மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அரியணையேறியுள்ளது இராயபக்ச அணி.

மகாநாயக்க தேரர்கள், சிங்கள், பௌத்த மக்கள் (பெரும்பாலானோர்), கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் என மிக முக்கிய சக்திகளெல்லாம் ஓரணியில் திரண்டு ‘மொட்டு ஆட்சியை’ மலரவைத்தன.

1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிங்கள, பௌத்த வாக்குகள் - ஒரு தரப்பை நோக்கி பெரும்பான்மையாக விழுந்த சந்தர்ப்பமாகவும் இது கருதப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய எசு.டிபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நான்கரை ஆண்டுகளுக்குள் அதாவது 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

ஐம்பெரும் சக்திகளையும் ஓரணியில் திரட்டினார். நடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலில் இராயபக்ச தரப்பும் இதற்கு நிகரானதொரு வியூகத்தையே கையாண்டது.

1956 பொதுத்தேர்தல்

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 3 ஆவது பொதுத்தேர்தல் தொடர்பில் அடுத்து பார்வையை செலுத்துவோம்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அமோக வெற்றிபெற்றிருந்தாலும், 1952 இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பாக அரிசி விலை அதிகரிப்பானது அரசாங்கத்துக்கு பேரிடியாக அமைந்தது. மறுபுறத்தில் இடதுசாரிகட்சிகளும் போராட்டங்கள்மூலம் ஆட்சி பீடத்துக்கு தலையிடிகொடுத்தன.

இதனால் 1953 ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியை டட்லி சேனாநாயக்க இராயினாமா செய்தார். புதிய பிரதமராக சேர் யோன் கொத்தலாவ நியமிக்கப்பட்டார். அவரும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.

எனினும், ஆங்கில மொழிக்கு முன்னுரிமை, பிக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாமை, முதலாளித்துவ கொள்கை உட்பட மேலும் சில காரணங்களால் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்மீது பெரும்பான்மையின மக்கள் கடும் அதிருப்தியில் காணப்பட்டனர்.

மறுபுறத்தில் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்திய சிறிலங்கா சுதந்திரக்கட்சியை மாற்று சக்தியாக பெரும்பான்மையின மக்கள் நம்பினர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் 3 ஆண்டுகளும் 8 மாதங்களும் நிறைவடைந்த நிலையில் பாராளுமன்றம் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.