குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யேர்மனியில் முதலில் தமிழ்ப்பாடசாலை ஆரம்பித்தவர்கள் திருகோணமலை பரமேசு,கோணேசு அவர்கள்,இரத்தினேசு,

குகதாசன் பூநகரான்.18.12.2019 நன்றி எம்.பி கோணேசு இணையம்.புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ்ப் பாடசாலை யேர்மனியில்  முதலில் தமிழ்ப்பாடசாலை ஆரம்பித்தவர்கள் திருகோணமலை பரமேசு,கோணேசு அவர்கள்,இரத்தினேசு,நண்பர் குகதாசன் பூநகரான்.18.12.2019 நன்றி எம்.பி கோணேச இணையம். மொழியுடன் வளர்ச்சியும் அதன் கலை பண்பாட்டு விழுமியங்களும் அதைப் பேசும் இனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை பறை சாற்ற வல்லன.

ஒரு இனத்தின் பண்பாட்டு வரட்சிக்கு வளர்ச்சியடையாத அதன் மொழியூம்இ கலையூமே காரணமென மானிடவியலாளர் கூறுவர். வளர்ச்சி பெற்ற பெறுகின்ற எந்த இனமும் மொழிவளமும் கலை வளமும் கொண்டதாகவே மிளிரும். அதற்கேற்ப அன்று யேர்மனியில் மொழிவளத்திற்காகவும் கலை வளத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட அரங்கேற்றம் என்ற பாடசாலையைப் பற்றியும் அதன் சேவை பற்றியும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

மேற்கு யேர்மனியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தழிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கலையை கற்பிக்க முடியவில்லையே என்று ஏங்கித்தவித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் மக்களுக்காக ஒரு தமிழ்ப்பாடசாலையை உருவாக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பலரை நாடி உதவி கேட்ட பொழுது ஒருதரும் பொறுப்பேற்க வராத இடத்தில் தானே முன்னின்று துணிந்து அரங்கேற்றம் என்ற பாடசாலையை 23.3.1986ஆம் ஆண்டு எந்த உதவியூம் இல்லாது ஒரு தனிநபரால் அவரின் மொழியினதும் கலையினதும் ஆர்வத்தினால் தமிழ் சிறார்கள் தமிழையும் தமிழ்க் கலையயும் கற்க வேண்டும் என்ற நோக்குடன் எந்த ஒரு தமிழ் கற்கும் பாடசாலைகள் இல்லாத நேரத்தில் தமிழ் மக்களுக்காக மேற்கு யேர்மனியில் முதன் முதலில் தமிழ்ப் பாடசாலை அமைத்தவர் தான் திரு. எம். பி. கோணேஸ் அவர்கள். அவரும் அவரின் குடும்பத்தினரும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதன் வளர்ச்சி கண்டு பின்பு அங்கே வாழும் தமிழ் மக்களும் யேர்மன் மக்களும் ஆதரவு நல்க அந்தப் பாடசாலை வெற்றி நடை போட்டது ஒரு வரலாறு தான்.

நூறுக்கும் மேற்பட்ட சிறார்கள்இ தமிழ்மொழிஇ நடனம்இ சங்கீதம்இ மிருதங்கம்இ வீணைஇசுருதித்தட்டு (கீபோட்) எனப் பல கலைகளையும் ஒரே இடத்தில் கற்றார்கள். சிறார்கள் மட்டுல்ல பெரியவர்கள் கூடப் பலர் எலக்டோனிக் கீபோட் கற்றார்கள். நொய்சு(ஸ்) முன்சன்கிளட்பாக் யுக்சன், கிறவன்புறௌச் மற்றும் சுற்றாடலில் வாழும் தமிழ் மக்களின் நலன் கருதி கொர்ச்சன்புறௌச்சில் அமைக்கப்பட்டதே இந்த அரங்கேற்றப் பாடசாலையாகும்;. இந்தப் பாடசாலைக்கு அங்கே அமைந்திருந்த கத்தோலிக்க ஆலயத்தின் திரு. கிறாப்போல் அவர்களும் கறிற்றாஸ் செல்வி ஸாப் அவர்களும் மிகவும் உதவி புரிந்ததை மறக்க முடியாது.

அரங்கேற்றப் பாடசாலையில் தமிழ் கற்பித்த பல ஆசிரியர்களுள் திருமதி. முத்துக்குமார் அவர்களின் சேவை அளப்பரியது. பரமேஸ், கோணேஸ் எனப் பரலாலும் புகழப்பட்டவர்கள் மெல்லிசையில் புகழ் சேர்த்தவர்கள் அவர்களில் திரு. கோணேஸ் அவர்கள் எலக்ரிக் கீபோட் இசையைக் கற்பித்தார். தங்கள் சிறுவயது ஆசையை நிறைவேற்ற பல பெரியவர்கள் கூட கீபோர்ட் இசையைக் கற்றார்கள். பரதநாட்டியம் கற்பித்தவர் திருமதி. கிருபாநிதி இரத்தினேசுவரன் அவர்கள். கர்நாடக சங்கீதம் வீணை கற்பித்தவர் திரு. செல்வசீராளன் அவர்கள். மிருதங்கம் திரு. முருகதாசன் அவர்கள். இந்த ஆசிரியர்கள் எல்லோரும் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பல சிரமங்களின் மத்தியிலும் இந்தச் சேவையினைப் புரிவதற்கு மனமுவந்து வந்தவர்கள். இவர்கள் யாவரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பாடசாலையின் ஆண்டுவிழா பெரும் அமர்க்களமாக நடைபெற்றது. இன்றும் மறக்க முடியாது. இன்றுபோல் அன்று இல்லை – எந்த ஒரு கலைப் பொருட்களும் இலகுவாக எடுக்க முடியாத அந்த நேரத்திலும் ஒவ்வொரு ஆசிரிiயினதும் விடாமுயற்சியினாலும் நல்ல ஆக்கங்களினாலும் மிகவூம் சிறப்பான படைப்புகள் அங்கே அரங்கேற்றப்பட்டன. திரு. சுதன் அவர்கள் மேடைக்கென அலங்காரமாக உருவாக்கிய நடேசர் சிலை மிகவும் அழகாகவவும் அருமையாகவும் இருந்தது. நாதசு(ஸ்)வரம் அளவெட்டி திரு. எம்.கே. பாலமுரளி தவில் நெல்லியடி கே.பி. செல்வநாயகம்அவர்கள்இ வயலின் திருமதி. ரஞ்சிதமலர் பரமானந்தன் அவர்கள்இ மொழிபெயர்ப்பாளர் திரு. எட்மன்ட் என எல்லோரும் தங்கள் திறமையினை அனைத்துக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக சிறந்த நிகழ்ச்சிகளை அளித்தார்கள். எல்லோரும் அடைந்த மகிழ்ச்சி அளவிடமுடியாதது. ஏன் அங்கே இப்போது போன்று வாரம் ஒரு மேடைநிகழ்ச்சி இருக்கவில்லை.

அனைத்துத் தமிழ் மக்களும் திரண்டு வந்திருந்து களித்தார்கள். தன்தன் நிகழ்ச்சி முடிய எழும்பிப் போகாமல் முடியும் வரை இருந்து நன்றாக நடந்ததை ஆனந்தத்துடன் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து எல்லாவற்றையும் திரும்பவும் ஒழுங்குபடுத்தி ஒரு குடும்பமாக இருந்தது இப்போதும் நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது. இவை எல்லாவற்றிற்கும் பக்கபலமாக இருந்து எல்லோருக்கும் உணவு அளித்து நாள் முழுக்க பயிற்சிகளுக்கு உதவி செய்து ஆசிரியைகளின் போக்குவரத்திற்கும் ஒழுங்கமைத்து உறுதுணையாக நின்றவர் அண்ணன் திரு. கோணேஸ் அவர்களும்இ பத்மனி அவர்களும்இ அவர்களின் பிள்ளைகளும் என்பது மறக்க முடியாது.

இப்படி நான் இதை முழுத்தரவுகளுடன் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் மாணவி இரம்மியா சிவா அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அன்று நடந்த விழாவின் மலர் விழாவின் கணொளி என இன்றும் அவர் அதைப் பத்திரமாக வைத்திருந்து பகிர்ந்து கொள்கிறார் என்றால் சிறிது யோசியூங்கள். எவ்வளவூ தூரம் அரங்கேற்றம் பாடசாலை எல்லோரையூம் உருவாக்கியூள்ளது. அதற்காக திரு. எம்.பி. கோணேஸ் அவர்களும் திருமதி. பத்மினி கோணேஸ் அவர்களும் அரும்பாடு பட்டது மறக்கப்படவில்லை. அவர்களின் சேவை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது திண்ணமாகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர்கள் சேவை வானொலி வண்ணமாக கனடாவிலும் தமிழ் மொழி மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பது பாராட்டப்படக் கூடியது.

1990 களின் ஆரம்பத்தில் யேர்மன்நாட்டில் நொயிசு மேபுசில் வாழும்போது அண்ணா  பூநகரானின் யாழ் இந்துக்கால நட்பால் என்னையும் பார்க்கவந்தார் பரமேசு அவர்கள். அண்ணா அறிமுகம்செய்தார் அவர் தமிழில் சுருதித்தட்டு கற்பது எப்படி என்று எழுதிய தமிழ்நுாலையும் சுருதித்தட்டிற்கான தமிழ் பதிவு (தமிழ்நோட்சு )அவரால் முதலில் ஆக்கப்பட்ட நுாலினையும் காண்பித்தார்.

எனது அண்ணாவின் இருபிள்ளைகளும் தமிழையு,இங்கே கற்றனர். இணையர் இரட்ணேசுவரன் அவர்களிடம் ஆடற்கலையும்கற்றார்கள், கலைமகள் விழாவில் நடனமும் ஆடியுள்ளார்கள் அந்த ஒளிநாட இன்றும் என்னிடம் உண்டு.

தரமான நல்லெண்ணம் கொண்டவர்களின் முயற்சிகள் வெல்லும் தொடரும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை என்பதற்கு இந்தப்பதிவும்,நினைவுகளும் அடிப்படையானதுடன் இன்று யேர்மனியில் தமிழப்பாடசாலைகளின் வளர்ச்சியும் செயற்பாடுகளும் பாராட்டத்தக்கன. இன்று யேர்மனியில் தமிழ்ப்பாடசாலைகள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.

இவைதொடர்பான நேரடியாகவும்,தொலைபேசி மூலமும் நட்புரீதியாக நண்பர்களாக பரமேசு,கோணேசு,இரத்தினேசு, பூநகரான் குகதாசன் ஆகியோரின் உரையாடல்களை நடத்தியதை நேரில் பார்த்துள்ளேன், பாடசாலை ஆரம்பக்கல்வி தொடர்பாக அண்ணா என்னிடம் கேட்பதும் உண்டு.இந்தநிலைகளை அறிந்தவர்கள் எனக்குதெரிந்தவர்கள் யேர்மன்நாட்டில் பலர் இன்றும் உள்ளனர். திரு.இ.லோகேசுவரன்,திரு.த.தியாகராசா, திரு.த.யோகராசா ஆகியோரும் அவர்களளுடன்,இன்னும்பலர் இருக்கின்றார்கள்.

1990 களில் இரண்டாம்கட்ட ஈழப்போர் தொடங்கியதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று உண்ணாவிரதப்போராட்டம் மேபுசு தேவலயத்தில் இருந்தோம் யேர்மன் நாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அண்ணாவின் நண்பர் திரு.ரொபில்சு அவர்கள்   உதவினார்.  கழிவறைக்கு நாம் சென்றபோதும் கூடவே வந்தார் தன்முன்னிலையில் அன்று இவர்கள் உணவருந்தவில்லை என்பதை உத்தியோகபூர்வமாக நிறுவும் வண்ணம் செயற்பட்டார். எமது கோரிக்கைகள் மேபுசு தமிழச்சங்கம் மூலம் அன்றைய யேர்மன்நாட்டு தலைவர் கெல்மற்கோல் அவர்களுக்கு மனிதஉரிமைச்செயற்பாட்டாளர் அவர்களால்  அனுப்பிவைக்கப்பட்டது அவரின் செயயலாளரிடமிருந்து எமக்கு பதில் கடிதங்களும் கிடைக்கப்பெற்று மேபுசு தமிழச்சங்கத்தலைவர் அமரர் திரு.சோமசுந்தரம் அவர்களிடம் ஒருபிரதியும், செயலாளராகிய அண்ணன் பூநகரானிடம் ஒருபிரதியும் இருந்தன. நிர்வாக முறைப்படி அனுமதிபெற்று நடைபெற்றமை தேவலயம் முன்பாக காலையில் முதலில் இருந்தவர்கள் நானும்,திரு.இ.லோகேசுவரனும் யேர்மன்மொழியில் உண்ணாவிரம் எனறு ஒருமட்டையில் எழுதிவைத்திருந்தோம் .நடந்த நிகழ்வு நகைச்சுவையானது வெதுப்பகத்திற்கு சென்று ஒருவயதான பெண் காலைசாப்பாடு (மோச்சிலின்)  ஆளுக்கொன்று வாங்கிவந்து அங்குபசியில் இருக்கலாம் இங்கு பசியாக இருக்கக்கூடாது என்று எங்கள் முன்உணவைவைத்தார்,  கோபத்துடன் சென்றார் மனிதஉரிமைச்செயற்பாட்டாளர்  திரு.ரொபில்சு அவர்கள் நிலைமையை சமாளித்தார் என்றே சொல்லலாம்.  ...1990 களின் ஆரம்பம் என்ற பகுதியிலிருந்து  மிகுதி என்னால் இணைத்து எழுதப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.