குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பங்காளிகள் என்ன ஏமாளிகளா?

15.12.2019 நாடாளமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் என்று அரச தரப்பில் இருந்து அறிவிப்புகள் வர ஆரம்பித்தவுடன் கட்சிகளும் தமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளன. தமிழரசு கட்சியினை தனது ஆளுமைக்குள் வைத்திருக்கும் சுமந்திரன் தனது நகர்வினை முதலில் ஆரம்பித்து இருந்தார். மாற்று அணியினை உருவாக்கி அதனை பரீட்சித்து பார்க்கும் நேரம் இது அல்ல என்றும் அனைவரும் தமது தலமையில் இணைய வேண்டும் என்றும் பத்திரிகைகளை அழைத்து பகீரங்க அறிவுப்பு விடுத்திருந்தார். மாற்று அணிகுறித்து சிந்திப்தற்கு இது நெரம் அல்ல என்று தெரிவித்து மக்கள் மத்தியில் ஒரு பதட்ட சூழலை தோற்றுவிக்க முனைந்திருந்தார். ஏதோ மக்கள் மீண்டும் முல்லிவாய்க்காலில் கொலை களத்திற்குள் சிக்குண்டுள்ளது போன்றும், மாற்று அணி குறித்து யோசிக்காது அனைவரும் சென்று அவர்களை பாதுக்காக்க வேண்டும் என்பது போன்றும் ஒரு பிரம்மையை ஏற்படுத்த முனைந்திருந்தார்.

அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற அழைப்பினை ஏனைய தரப்புக்களுக்கு விடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் (த.தே.கூ) இருக்கும் பங்களாளி கட்சிகளுடன் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதனை கவனத்தில் எடுக்கவேண்டும். சமத்துவம், வெளிப்படதன்மை , பகிர்ந்தளிப்பு மற்றும் உள்ளக அதிகார பகிர்வு (equality, transparency, distribution, internal power sharing) போன்ற விடயங்ககளில் தமிழரசு கட்சி நிஞாயமாக நடந்து கொள்வதில்லை. அரச தரப்பினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்கள், உதவி தொகைகள் என்பனவற்ரை தமிழரசு கட்சி நாடாளமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெற்றுக் கொள்கின்றார்கள். மங்களசமரவீர அவர்களினால் வழங்கப்பட்ட சுமார் 30 இற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பினை சம்மந்தர் அவர்கள் ஏனைய த.தே. கூ நாடாளமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது கனடா குகதாசன் ஊடாக தனது தொகுதி பகுதிகளுக்கு மட்டுமே வழங்கியிருந்தார். கடந்த சனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது சம்மந்தமாக ரணில் மற்றும் மங்களா உடன் சந்தித்தபோது இந்த செய்தியானது பகீரங்கப்படுத்தப்பட்டது. இந்த வேளை ஏனைய த தே. கூ நாடாளமன்ற உறுப்பினர்கள் ஆச்சரியம் அடைந்துடன் ஆத்திரம் கொண்டார்கள். சிறீதரன் அவர்கள் சம்மந்தரை பார்த்து நீயும் ஒரு தலைவனா என்று முகத்திற்கு நேரே ஆவேசமாக கத்தியிருந்தார். இங்கே சம பகிர்ந்தளிப்பில் (equal distribution) எவ்வாறு தமிழரசு கட்சியின் தலமை வெட்கப்பட வேண்டிய அளவிற்கு கேவலமாக நடந்து கொண்டுள்ளது. கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டு தமிழரசு கட்சியின் தலைவரே கூட்டமைபின் தலைவராகவும், தமிழரசு கட்சியினை சேர்ந்த மற்றும் ஒருவரான சுமந்திரன் ஊடக பேச்சாளாராக இருக்கின்றார்கள். இங்கே எந்த அளவில் உள்ளக அதிகார பங்கீடு (internal power sharing) பேணப்படுகின்றது. த.தே. கூட்டமைப்பு என்ற முறையில் முல்லைதீவில் ஜனாதிபதி தேர்தல் பிரட்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்கென பங்காளி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இருந்தது. ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அங்கு சென்றபோது மிகவும் அதிர்ச்சியுற்று இருந்தார். மேடையின் அலங்கரிப்பில் தமிழரசு கட்சி தலைவர்களான சம்மந்தர் , சேனாதிராஜா, மற்றும் அந்த கட்சியின் நாடாளமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் படங்களே பிரகாசமாக வைக்கப்பட்டு இருந்தன. அங்கு செல்வம் அடைக்காலநாதனினின் படமோ அல்லது சித்தார்த்தனின் படமோ பெனரில் ( not printed ) அச்சிடப்பட்டு இருக்கவில்லை. புளொட் தலைவர் சித்தார்த்தன் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை. இதில் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், த.தே.கூட்டமைப்பின் கூட்டமென மக்களை அழைத்துவிட்டு பெனரில் தமிழரசு கட்சி என்று அச்சிடப்பட்டதோடு, அடைப்பு குறிக்குள் ( bracket) த. தே. கூட்டமைப்பின் பெயர் ஓரங்கம் கட்டப்பட்டு இருந்தது. பங்காளி கட்சிகளை புறந்தள்ளி தமது தமிழரசு கட்சியினை முன்னிலைப்படுத்தியவாறு நடந்துகொள்ளும் சுமந்திரனால் ஒற்றுமை குறித்தும் , மாற்று அணி குறித்தும் வாய் கூசாமலும் மனசாட்சி அற்றும் ஊடகத்தின் முன்னால் எவ்வாறு பேசமுடிந்திருக்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக பங்காளி கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது அவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயெ இந்த ஊடக சந்திப்பு சுமந்திரனால் நடத்தப்பட்டுள்ளது.

ஒத்தோடிகளாக இருக்கும் பங்காளிகள்!

இவ்வாறாக தமிழரசு கட்சி நடந்துகொள்ளுகின்ற போதும், ஏன் இந்த இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக தமிழரசு கட்சியின் நிழலில் பயணித்து வருகின்றார்கள் என்ற கேள்வி இங்கே எழுகின்றது.ஒரு காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளை கொண்டிருந்த ரெலோ மற்றும் புளொட் கட்சியினர் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருக்கின்ற போதும் ஏன் தமிழரசு கட்சியின் நிழலில் நடக்க முயலுகின்றார்கள். ரோலொ கட்சியானது த. தே. கூட்டமைப்பு ஆரம்பிக்கும் பொழுது இருந்த கட்சிகளில் ஒன்றாகும், தமிழரசு கட்சியானது பின்னரே இணைக்கப்பட்டது. புளொட் கட்சியினை பொறுத்த மட்டில் கடந்த காலகட்டத்தில் வன்னியில் தனித்து போட்டியிட்டு மூன்று நாடாளமன்ற ஆசனங்களை கைப்பற்றியிருந்தார்கள். அவர்களின் வசம் வவுனியா நகரசபை இருந்த பொழுது வவுனியா நகரம் அழகுபெற்றதோடு பெருமளவில் அபிவிருந்தி செய்யப்பட்டும் இருந்தது. இன்று வவுனியா நகர் பகுதிகளில் காணப்படும் தமிழ் அறிஞர்களின் சிலைகள் யாவும் அவர்களினாலேயே நிறுவப்பட்டவையே ஆகும். அப்போது வவுனியாவின் நகரபிதாவாக இருந்தவர், புளொட் இயக்கத்தின் உபதலைவரும் முன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான லிங்கநாதாதன் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றாகும். வவுனியாவில் தமிழ் கிராமங்களில் பெரும்பாலானைவை உருவாக்கியவர்கள் புளொட் அமைப்பினரே ஆகும். அவர்களினால் 32 இற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வகையாக நிர்வாக திறன், ஆற்றல் , அர்ப்பணிப்பு , அரசியல், சமூக அக்கறையினை கொண்ட புளொட்டினர் ஏன் தமிழரசு கட்சியின் தயவில் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள்? சித்தார்த்தன் தனது தந்தையின் நண்பரான சம்மந்தர் அண்ணையின் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பதும், சேனாதி அண்ணா என்றும் உருகுவதும் அவரின் கட்சியின் உருவத்தினை கலைத்துவிடும் என்பதினை அவர் புரிந்து கொள்ளவேண்டும். ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்ளூராச்சி சபை உறுப்பினர்கள், குறிப்பிடதக்க அளவிலான ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்து வாழும் சுமார் ஆயிரம் பேர்வரையிலான முன்னாள் உறுப்பினர்கள் என்று அவர்களுக்கு சுமாரான பின்னணி உள்ளது. இவர்கள் எல்லோரும் கட்சியினை அடுத்த கட்டத்திற்கு காவிசெல்ல காத்திருக்கின்றார்கள் என்பதினை அவர் கவனத்தில் எடுக்கவேண்டும். சம்மந்தர் அண்ணர்மீதும், சேனாதி அண்ணர் மீதும் அவர் வைத்திருக்கு மரியாதைக்கு அவர்கள் பொருத்தமானவர்களா என்று அவர் அளவு செய்யவேண்டும்.

இரண்டு பங்காளி கட்சிகளும் தமிழரசு கட்சியினை சந்தித்து எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது மற்றும் உள்ளக அதிர்கார பகிர்வு குறித்து பேசுவதற்கு திகதி கேட்டு அனுமதி பெற்றும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் சம்மந்தரின் வாசல் தலத்திற்கு சென்ற போது சுமந்திரனும், சேனாதிராசாவும் சமூகம் தரவில்லை. சுமந்திரனுக்கு வைரஸ் காச்சல் என்றும் சேனாதிராசாவிற்கு செக்கப் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஒரு ஊடவியளார் கருத்து கூறுகையில் “ இதுவே ரணில் மீதான நம்பிக்கையில்லா பிரேனை வாக்கெடுப்போ அல்லது வரவு செலவு வாக்கெடுப்பாக இருந்தாலோ , சுமந்திரன் படுத்தபாயையோடு முதன்நாளே பாராளமன்றம் சென்று படுத்திருப்பார் “ என்று கொடுபிற்குள் சிரித்திருந்தார். எதிர்வரும் 17 ஆம் திகதி அனைவரும் யாழ்பாணத்தில் வைட்து சந்திப்பதாக சம்மந்தர் வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால் யாழ்பாணத்தில் இந்த சந்திப்பினை வைத்திருப்பதே சம்மந்தரின் முன் வியூகமாக இருக்குமென தோன்றுகின்றது. ஏனெனில் அவர் நடமாடுவதற்கு மற்றும் நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வதற்கு அவரின் உடல்நிலை இடம்கொடுகாது என்று மாவையோ அல்லது சுமந்திரனோ மீண்டும் ஒரு காரணம் கூறி இதனை ஒத்திவைக்க நேரிடலாம். அடுத்து சுமந்திரனுக்கு நத்தார் பண்டிகை , மாவைக்கும் சம்மந்தருக்கும் பொங்கல் பண்டிகையென தேர்தல் நெருங்குவரை இவர்களின் காரண பட்டியல் நீண்டு கொண்டே செல்ல கூடும். இறுதியில் இனி சிந்திப்பதற்கு நேரம் இல்லையென சம்மந்தர் காரணம் கூறும்போது சித்தார்த்தனும், செல்வமும் ஏமாளிகளாக்கப்போவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இடைக்காலதீர்வு, புதிய அரசியல் சட்டம் நிட்சயமாக கொண்டுவருவோம் என்று சுமந்திரனும் சம்மந்தனும் அடித்து கூறியபோதல்லாம், சித்தார்தனோ இதில் எனக்கு நம்பிக்கையில்லை ஆனால் சம்மந்தர் அண்ணர் நம்புகின்றார் என்று கூறிக்கொண்டே வந்துள்ளார். இவர் தனது பாதுகாப்பிற்காகவா அல்லது சிங்கள தலமைகளின் போக்குகளை நன்றாக அறிந்து பார்த்துவந்தர் என்ற முறையில் கூறினாரா என்பது தெரியவில்லை.

தமிழரசு கட்சியானது தமிழ்ர்களின் விடுதலைகான வியூகத்தினை வகித்தமையினை காட்டிலும் த.தே கூட்டமைப்பு என்ற போர்வையில் தமது கட்சியினை பலப்படுத்துவதிலேயே தமது முழுமையான கவனத்தினையும் செலவழித்து வந்துள்ளனர். உரிமைக்காக போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு காலத்தினை கடத்தி வந்தமைக்காக சம்மந்தர் , சுமந்திரன் மற்றும் மாவை ஆகியோரிற்கு அரசிடம் இருந்து பெருமளவிலான ஆசிகள் கிடைத்திருப்பதாக தமிழரசு கட்சியினரே தமக்குள் புலம்பி திரிகின்றனர். இந்த நிலையில் இவர்களை இறுதிவரை நம்பியிருக்காது இந்த இரண்டு கட்சிகளும் மாற்று தீர்வாக மாற்று அணி குறித்து விரைவாக சிந்திக்கவேண்டும். த. தே. கூட்டமைபானது ஆரம்பிக்கபட்ட வேளை ரெலோ, மற்றும் EPRLF ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து வந்துள்ளன. சுரேச் பிரேமசந்திரனை பொறுத்த மட்டில் சகோதரரிற்கு அமைச்சு பதவியை பெற்றுக் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் இருந்து வந்தாலும் நீண்ட காலமாக த,தே.கூட்டமைப்பினை பதிவு செய்யவேண்டுமென கடுமையான அழுத்தங்களை கொடுத்துவந்தவர். விடுதலை இயக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சிகள் தமிழர்கள் பட்ட அவலைங்களை கண்கூடாக பார்த்து அவர்களின் வலிகளை கண்டு வருந்தியவர்கள். சுமந்திரனை பொன்று தேசிய பட்டியல் மூலம் அவர்களுக்கு தேசப்பற்று வந்ததில்லை. ஆகவே இந்த மூன்று கட்சிகளும் , விக்கினேஸ்வரன் போற்றவர்களையும் இணைத்துக் கொண்டு உரிமைக்கான போராட்டத்தினை உத்வேகத்தோடும், உளதூய்மையோடு முன்னெடுக்க முயலவேண்டும்.

ஆரோக்கியன்.

14.டிசம்பர். 2019 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.