குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஓர் சைவத்தமிழ் பொது மகன் பார்வையில் சிவசேனை.அறிவார்ந்த தமிழர் நெறிதான் தமிழர் தளம் இதுதான் உலகு!

13.11.2019 இலங்கைச் சிவசேனை தன்பால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு தனது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் கொண்டு பதிலளித்து வருகின்றமையை ஒவ்வொரு தமிழரும் வரவேற்க வேண்டும்.தமிழர் ஓர் கட்டமைப்பாக இல்லாதவரை தமிழகமாயினும் சரி, இலங்கையாயினும் சரி எதையும் சாதிக்க முடியாது. சைவசமயம் தமிழரைக் கட்டமைப்பதற்குரிய; தமிழ்த் தேசியத்துக்குரிய தளத்தைக் கொண்டது.

மணிப்பிரவாளத்தில் மயக்கிப்போயிருந்த தமிழருக்கு நாவலர்,சி.வை.தாமோதரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர் என்று தமிழை இலக்கண இலக்கியரீதியில் புத்துயிர் அளித்து, மங்கிப் போயிருந்த தமிழ்த் தேசியத்துக்கு மீண்டும் வீறுகொண்டெழ களம் அமைத்துக் கொடுத்தனர்.அந்தக் களத்தை மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கமாக வளர்த்து, மணிப்பிரவாளத்திலிருந்து தமிழை மீட்டெடுத்ததோடு, தமிழ்த் தேசியத்தையும் படைத்தார் என்றால் அது மிகையில்லை.

தமிழ் சைவத்தோடு இணைந்திருந்தபோது அது மங்காப் புகழோடுதான் இருந்தது. தமிழ்த் தேசியமாயும் உருவெடுத்தது. எப்போது திராவிட இயக்கங்கள் செல்வாக்குப் பெற்றனவோ அன்று சைவத்தை தமிழில் இருந்து ஒதுக்கினர். தமிழ்த் தேசியமும் தமிழகத்தில் மங்கிற்று.

இலங்கையில் தமிழர் சைவத்தில் இரண்டற கலந்திருந்தமையால் தமிழ்த் தேசியத்துக்குரிய கருவை பேணியே வந்தனர். கிருஷ்தவரான தந்தை செல்வா தமிழ்த் தேசத்தின் கொடியாக நந்திக்கொடியையே அங்கிகரித்தார். அதே நேரத்தில் கிருஷ்தவரான தந்தை செல்வாவை தமிழர் தந்தையாய் அனைத்துத் தமிழரும் கொண்டாடுவதற்குரிய மனவளத்தையும் "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொருபாகனாரே வருவர்" என்கின்ற சைவ சமயம் கொடுத்திருந்தது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சைவத்தைப் புறக்கணிக்க, அது தமிழ்த் தேசியத்துக்கு பாதகமான விளைவுகளையே உருவாக்கியது.

இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை திராவிடவாதிகள் தமது கருத்துசார் ஆளுமையில்க் கொண்டுவந்ததும் பழனியில் மொட்டைபோடுதல், கோயிலில்த் திருமணம் செய்தல், வற்றாப்பளையில் பொங்கல் என்று சைவசமயத்தைப் வெளிப்படையாகப் பேணி வந்த தமிழ் இளைஞர், சமய நடவடிக்கைகள் மூலம் சமயத்தைப் பிரநிதித்துவப்படுத்துவதிலிருந்து ஒதுங்கினர்.

அதன் பின்னரான தமிழ்த் தேசியம் சைவசமயத்திலிருந்து ஒதுங்கியே அல்லது சைவ சமயத்தை ஒதுக்கியே பேணப்பட்டது. ஆனால் ஆக்கபூர்வமான முன்னேற்றங்களைச் சந்திக்கவில்லை.

தமிழ்த் தேசியமானது சைவசமயத்தை தன்னோடு இணைத்து நடைபோடுமாயின் அது இன்னும் ஆணித்தரமானதாக வலுப்பெறும்.

இராச இராச சோழன் சைவத்தோடு தமிழைக் கண்டபோது மலேசியாவரை ஆதிக்கம் செலுத்தினான். அதே நேரத்தில் சமண,பௌத்த,வைணவ சமயங்களையும் அரவணைத்தான். இராச இராசனின் பல்சமய அரவணைப்பு சைவ சமயம் கொடுத்த சால்பு.

ஆக, சைவசமயமே( இடைச்செருகல்தமிழர்நெறியே )தமிழ்த் தேசியத்தின் உரமும் உயிர்நாடியும்!!!

சிங்கள மக்கள், தமது வரலாற்று பகுத்தாய்வுகளில் ஈடுபட்டு தமது பண்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்காது, புத்தாண்டு நடைமுறைதொட்டு புத்தர் வரை எல்லோரையும் சிங்கள மயப்படுத்தி, பௌத்ததைத் தளமாகக் கொண்டு நன்கு தம்மைக் கட்டமைத்து சிங்களத் தேசியத்தைப் பேணுகின்றனர். அதுவே அவர்களின் வெற்றிகளுக்கு காரணமாயிற்று. இலங்கை இசுலாமிய அமைப்புக்கள் இலங்கையில் சமசுடியே தேவை இல்லை என்று கூறுவதோடு இலங்கை பௌத்த நாடு என்கின்றன. சிங்களப் பேராயர்கள் இலங்கை பௌத்த நாடு என்கின்றனர். இவை சிங்களத் தேசியத்தை, பௌத்தத்தைத் தளமாகக் கொண்டு சிங்கள மக்கள் கட்டமைத்தமையினால் அவர்கள் பெற்ற பலனாகும்!!!

ஆனால்த் தமிழர் திராவிட அரசியலில் வீழ்ந்து, அனைத்தையும் பகுத்தறிவு என்ற பெயரில்க் கேள்விக்குள்ளாக்கி, வெய்யில்த் தேசத்தில் கருப்பு ஆடைகளோடு அலையும் மந்தைகளாயினர். சைவசமயத்தை அந்நியப்படுத்தியபோதே தமிழ்த் தேசியத்துக்கும் சங்கு ஊதினர்.

சிலர் தமிழ்த் தேசியம் மதசார்ப்பற்றது என்கின்றனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தை வென்றெடுத்தால் மகிழ்ச்சி!!!ஆனால் எனது பங்கு, தமிழ்த் தேசியத்துக்குரிய உயிர் நாடியின் இருப்பை எப்போதும் உறுதிசெய்தல்!!!!

தமிழரின் சித்தாந்த சைவத்தில் தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடி பேணப்படுவதால், சைவசமயத்தை நாம் பேணி, அதனை நமது அடுத்த சந்ததிக்குக் கொடுத்தால், நிச்சயமாக தமிழ்த் தேசியம் மீண்டும் ஆலமரமாய் விருட்சம் கொள்ளும்.

புத்தளம்,சிலாபம்,நீர்கொழும்பு என்பவற்றில் சைவசமய வீழ்ச்சிதான் தமிழ்த்தேசியச் சிதைவை ஏற்படுத்தியது.தமிழ் பேசும் சிங்களவர் என்ற இனத்தையே உருவாக்கியது. எனவே, சைவசமயத்தின் இருப்பு தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியைப் பேணுவதற்கு பிரதானமானது.

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்......

விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்து, எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்றதாகும்.......

ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்.......

வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே........

ஆக தமிழரின் மதசார்ப்பு இன்மைக்குக்கு உயிர்நாடியாய் இருப்பதும் சைவசமயமே!!! சைவசமயத்திலிருந்து ஏனைய சமயங்களுக்கு மாறியவர்கள் "எம்மதமும் சம்மதம்" என்று கூறார்.

இனத்தை மதத்தோடு கட்டமைப்பதால் பெறக்கூடிய அனுகூலங்களின் சாலச்சிறந்த உதாரணம் சிங்கள மக்கள்தான்!!! அதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரண்டை ஒன்றாக்கிக் கட்டமைத்து பலனையும் நுகருகின்றனர்.

தமிழராகிய நாம், ஒன்றோடு ஒன்று இணைந்த சைவத்தையும் தமிழையும் இரண்டாகப் பிரித்து தேய்மானத்தைத்தான் ஈற்றில் கண்டுள்ளோம்.

இலங்கை பௌத்தநாடு என்பதனை ஏற்றுக்கொள்வதில் சிங்களப் பேராயர்மார்களுக்கும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் சம்மதம் தெரிவித்துள்ள இத்தருணத்தில், விசுயன் வரும்போதே இலங்கையின் நாற்திசைகளிலும் ஐந்து ஈசுவரங்களோடு விளங்கிய சைவசமயத்தை தமிழர் தமது தமிழ்த்தேசிய அடையாளமாகக் கொள்வதினைத் தமிழ் ஆயர்மார்கள் ஆதரித்தல் என்பது தமிழ் ஆயர்மார்களின் காலஞ்சார்ந்த பொறுப்புடமையாகும்.

ஆக எல்லா சமயங்களையும் அரவணைக்கக்கூடிய சைவசமயத்தைத் தளமாக்கி தமிழ்த் தேசியம் வளருமாயின் தாயோடு சேர்ந்த பிள்ளைபோல் தாய்ப்பால் பெற்று மேலும் ஆதீத வளர்ச்சி கொள்ளுமென்பதோடு, ஏனைய சமயங்களையும் அரவணைத்தே செல்லும்.

இப்பதிவு வைத்திய கலாநிதி கி.பிரதாபன்

அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது நன்றிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.