குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

பெரியார் சிலதில் படுமூடர் என்பது நிறுவப்பட்டு விட்டது!விசுவா விசுவநாத்

06.11.2019 சுக்குநூறாக உடைந்த "தமிழர்கள் காட்டுமிராண்டிகள்" எனும் ஐயா ஈ.வே.ரா. பெரியாரின் கருத்து.

"ஐயா ஈ.வே.ரா, "தமிழர்கள் காட்டுமிராண்டிகள், தமிழ் படிச்சு என்ன கிழிக்கப்போறானுக, நானும் நாப்பது வருசமா தமிழர்கள் காட்டுமிராண்டிகள்ன்னு சொல்லிட்டு இருக்கேன்..ஒரு பய என் முன்னாடி நின்னு பேசலேயே" "தமிழர்கள தலைவன் எவன் இருக்கான்"?!

என்று அப்போது பெரியார் அவருக்கே உரிய மொழியில் பேசினாலும் கூட...இன்றுவரை அவரது பின்பற்றாளர்களால், அவரது கருத்துக்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் சிலரால் இந்தக்கருத்து "தமிழர்களுக்கு எதிரான வன்மத்தையே" விளைவாக உருவாக்கிவிட்டது.

இதன் காரணமாகவே, தமிழர்கள் என்று சொன்னாலே...நக்கல், நையாண்டி செய்வது, கேலி செய்வது, டம்ளர், டுமீளர்...என்றெல்லாம் கொச்சைப்படுத்தி பேசுவது, தமிழர்கள் என்று கூறினாலே அவர்களை "பார்ப்பனியக்கைக்கூலி" என்று பேசுவது, தமிழர் தலைவர்களை "சாதி வெறியர்களாக" சித்தரிப்பது என்பதை கடந்த சுமார் 60 ஆண்டுகளாக இந்த திராவிட அதிமேதாவிகள் பணம் செலவு செய்து பரப்புரையாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலை என்ன?...தமிழர்கள் காட்டுமிராண்டிகளா?!

தினத்தந்தி நாளிதழில் இன்று (6/11 /2019 ) அழகப்பா பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியர் முனைவர்.க.ராஜவேலு எழுதியுள்ள கட்டுரை ஒன்றில்....

"இந்தியாவில் இதுவரை மத்தியத் தொல்லியல் துறையினரால் ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். பாண்டிய நாட்டின் தலைநகரான "கொற்கையை" கால்டுவெல் அகழ்வாய்வு செய்ததை ஆராய்ந்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை...அங்கு கண்டுபிடிக்கப்பட்ட "தமிழி" எழுத்துக்களின் காலம் கி.மு.780 என்று முதலில் அறியப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் எழுத்துக்களின் பழமையை ஆராய சரியான அறிவியல் பூர்வ முறைகள் இல்லாதிருந்தது.

ஆனால் இன்று உலக அளவில் நிறைய முறைகள் வந்துவிட்டன. அந்த வகையில்...கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் 2600 ஆண்டுகள் முந்தையது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல....கிராமப்புற மக்களிடம்கூட இலக்கண அறிவோடு கூடிய எழுத்தறிவு 2600 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்கமுடியாது.

கீழடிக்கு முன்னரே கொடுமணலில் 800 க்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் எழுத்துருக்கள் கண்டுபிடிக்க்கப்பட்டுள்ளன. எனவே உலகின் முதன்மையான கல்வி அறிவு பெற்ற ஒரு இனமாக தமிழினம் இருந்துள்ளது" என்று ராஜவேலு சான்றுகள் அடிப்படையிலேயே தெரிவித்துள்ளார்.

அடிப்படையிலே நமக்கு ஒரு எளிதான புரிதல்தான். தொல்லியல்துறையினர் ஏற்றுக்கொண்ட 2600 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கணத்தோடு கூடிய எழுத்துமுறையை பானை ஓடுகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள் என பலவற்றிலும் எழுதி வைத்திருக்கும் தமிழர்கள் அவ்வாறு பேச, எழுத அவர்கள் பழக்கப்பட, அந்த எழுத்துக்களை உருவாக்க அதற்கும் முன்னர் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அவர்கள் நாகரிகம் பெற்ற இனமாக இருந்திருக்க வேண்டும்?!

எனவே...தமிழர்கள் காடுகளில் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் என்கிற ஈ.வே.ரா. பெரியாரின் கருத்து முற்றிலும் கற்பனை மட்டுமல்லாது, ஒரு அறிவு பெற்ற இனத்தை கொச்சைப்படுத்திய வன்ம குற்றச்சாட்டாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால், அதே பெரியார்..."என்னுடைய இன்றைய கருத்துக்கள் நாளை மாறலாம், ஒவ்வாமல் போகலாம். எனவே அவரவர் அறிவுக்கு ஏற்புடையதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியதன் அடிப்படையில்...பகுத்தறிவாளர்கள் சிந்தித்து...இனியாவது உண்மையான பகுத்தறிவாளர்களாக சிந்திப்பார்கள் என்று நம்புவோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.