குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 27 ம் திகதி திங்கட் கிழமை .

தமிழர்கள்_இந்துக்களே_அல்ல..!! தமிழர்களின் நிலத்திணைகள்!

05.11.2019

குறிஞ்சி மலையையும் மலைசார்ந்த இடத்தையும் தமிழர்கள் குறிஞ்சி என அழைத்தனர். அங்கு வாழ்ந்தவர்கள் 'குறவர்' என்ற பெயருடன் வலம் வந்தனர். கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல் முதலிய தொழில்களைக் குறவர்கள் செய்து வந்தனர். தினை, மலை நெல் ஆகியவற்றை உட்கொண்டு அவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் இருந்தான்.

மருதம்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். அந்நிலத்தில் வாழ்ந்தவர்கள் உழவர்கள் என அழைக்கப்பட்டனர். களை பறித்தல், நெல்லரிதல் ஆகியவை அவர்களின் வேலையாகத் திகழ்ந்தது. வெண்னெல், செந்நெல் ஆகியவை அவர்களின் உணவாக இருந்தது. மருத நிலத் தலைவனாக இந்திரன் இருந்தான்.

நெய்தல்

கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல். அங்கு வாழ்ந்தவர்கள் 'பரதன்' என அறியப்பட்டனர். உப்பு விளைவித்தல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நம்பி அவர்களின் வாழ்வாதரம் இருந்தது. மீன், உப்பு முதலியவற்றை அவர்கள் விற்பனை செய்தனர். அதன்மூலம் கிடைத்த பொருள்தான் அவர்களின் உணவு. நெய்தல் நிலத் தலைவனாக வருணன் இருந்தான்.

முல்லை

காடும், காடு சார்ந்த இடமும் முல்லை. அங்கு குடியிருந்த மக்கள் 'ஆயர்' என அடையாளப்படுத்தப்பட்டனர். நிரை மேய்த்தல், ஏறுதழுவுதல் ஆகியவை அவர்களின் பணியாகத் திகழ்ந்தது. சாமை, வரகு ஆகியவை அவர்களின் உணவாகும். முல்லை நிலத் தலைவனாக திருமால் இருந்தான்.

பாலை

மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை என வகைப்படுத்தப்பட்டது. அங்கு வசித்தோர் 'எயினர்' என அழைக்கப்பட்டனர். பாலை நிலத்தில் விவசாயம் செய்ய வழி இல்லாததால் அங்கு இருந்தவர்கள் வழிப்பறியைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். களவாடும் பொருளை வைத்து தங்கள் பசியைப் போக்கிக்கொண்டனர். பாலை நிலத் தலைவியாக கொற்றவை இருந்தாள்.

இந்த ஐவகை நிலங்களில் எங்கேயும் பார்ப்பனன் இல்லை, சத்திரியன் இல்லை, வைசியன் இல்லை, சூத்திரன் இல்லை, பஞ்சமன் இல்லை. அப்பறம் எப்படி நாலு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவதகீதையில் கண்ணன் சொல்ல முடியும்..? பிறப்பு அடிப்படையில் சாதி இல்லை, தொழில் அடிப்படையில்தான் சாதி என்றாலும் ஆரியர்கள் வந்து சாதியை பிரிக்கும் முன்பே இந்த மண்ணில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மைதானே..? தமிழனுக்கு பின்னால் தோன்றிய வேதங்கள் எப்படி தமிழர்களின் மூலமாகும்..! அதனால் தான் சொல்கிறோம் தமிழர்கள் இந்துக்களே அல்ல என்று...!

தொல்காப்பியம்

'மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்று தொல்காப்பியர் பாடுகிறார்.

இதிலே வரும், மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகியோரைத்தான் முறையே திருமால், முருகன், இந்திரன், வருணன் என்று வகைப்படுத்துகின்றனர். அப்புறம் பாலை நிலத்துக்கு கொற்றவையை கடவுளாக்கி, இந்தக் கடவுள்களுக்கெல்லாம் ஒரு லிங்க் கொடுத்து ஒரே சீரியலாக மாற்றி அங்கங்கே தங்கள் கைவண்ணங்களை கலந்து அதற்கு சனாதன வேதம் என்று பெயர் சூட்டியவன் பார்ப்பனன்.

இந்த ஐவகை நிலத் தலைவர்களுக்கும் அவர்களே கற்பனையில் திருமணம் செய்து வைத்து, உறவுமுறைகளாக்கி எல்லோரையும் மனிதப் பிறவிகளிலிருந்து பிரித்து தெய்வங்கள் என்ற பெயரைக் கொடுத்து , அவர்களுக்கு கோயில் கட்டி, அதனுள்ளே தான் மட்டும் நுழைய வழி செய்து கொண்டவர்கள் ஆரியப்பார்ப்பனர்கள். ஆதி தமிழர்கள் தங்கள் மூதாதையர் மேல் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மதச்சாயம் பூசிவிட்டவர்கள் பார்ப்பனர்கள்.

பண்டைய தமிழர்களோடு ஆரிய வந்தேறிகள் கலாச்சார உறவு கொண்ட போது தங்களை மேலானவர்கள் என்று நிறுவிக்கொள்ள வேத, புராணக்கதைகளை புனைந்து தமிழ் மரபையே அழித்து விட்டதால், இன்று தமிழர்கள் என்றாலே அது இந்துக்கள் தானோ என்று ஆய்வாளர்கள் குழம்பும் நிலைக்கு தமிழர்களின் நிலை வந்து விட்டது.

என்னதான் சொன்னாலும் ஆரியர்கள் தங்களை உயர்வென்று நிறுவ , தமிழர்களை அசுரர் என்று புனைந்து வைத்த அவர்களின் இதிகாச குப்பைகளே எடுத்து சொல்கிறது அவர்கள் வந்தேறிகள் என்பதை. இப்போது நம் முன் உள்ள கடமை ஆரியர் கலந்த நஞ்சை தமிழ் நிலத்திலிருந்து பிரித்தெடுப்பதே. அதற்கு பார்ப்பனர்கள் எதையெல்லாம் அவர்களின் உயர்வென்று சொல்லிக்கொள்கிறார்களோ அதையெல்லாம் கூராய்வு செய்து அவர்கள் வெறும் நாடோடிகள் மட்டுமே, தமிழர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பதை நிலைநாட்ட வேண்டியது தமிழக ஆட்சியாளர்களின், தமிழ் அறிஞர்களின் கடைமை..!

சீவா வனத்தையன் தமிழரிமா

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.