குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலகம் தமிழனின் தொன்மையை ஒட்டு மொத்தமாக ஒப்புக்கொள்ளும் காலம் நெருங்கி வருகிறது கீழடி

09.10.209-ஒருவாறு தமிழி எனும் தமிழ் அசோகர்பிரா ம்மியில் இருந்து புத்தமத சமணமத துறவிகள் மூலம் தமிழகத்தில் பரவியது என்ற கூற்று தவறு என கீழடி நான்காம்கட்ட ஆய்வின் அறிக்கை மூலம் உறுதியாக நிறுவப்பட்டுவிட்டது .புத்தரின் பிறப்பு ஆனகி.மு 483க்கும் முன்பே தமிழ் நாட்டில் சமானியர்களால் தமிழி பேசப்பட்டு இருந்தது என்பது உறுதி ஆகிவிட்டது .கரிம சோதனைகள் மூலம் கிழடியில் கிடைத்த பானை ஓட்டில் வரையப்பட்டிருந்த பல்வேறு வகையான எழுத்து ஒழுங்கில் தமிழி பலராலும் 2600 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்தது உறுதி ஆகிவிட்டது .

ஆதன் என்னும் தொல் தமிழரின் பெயர் [இப்போது மீண்டும் உயிர் பெற்றுவிட்டது .பாத்திரத்தில் பெயர் பொறிக்கும் வழக்கம் நமது மரபு .1960 எனது அக்காவின் திருமண சீர்வரிசை சாமான்கள் அத்தனையிலும் பெயர் பொறித்து தந்தது எனக்கு நினைவில் உள்ளது .ஆனால் கிழடியில் வாங்கிய புதிய பானைகளில் அவரவர்கள் தங்கள் பெயர்களை பொறித்து வைத்திருந்திருக்கிறார்கள் .இத்தகைய பானை ஓடுகளில் எழுத்துப்பொறிப்பு தமிழ் நாட்டில் தான் அதிகம் கிடைக்கிறது .அது சாமானிய தொல் தமிழரும் எழுத்தறிவு பெற்றிருந்ததைக்காட்டுகிறது .

எனவே பரந்த பாரத தேசமெங்கும் வழங்கி இருந்த மொழிஆதியில் தமிழி ஆக இருக்கலாம் என்ற முடிவுக்கு விரைவில் வர இயலும் என்ற நம்பிக்கை பிறக்கிறது .வணிகத்தின் மூலம் உலகமெங்கும்தமிழர்களும் தமிழையும் பரவியிருந்ததற்கான சான்றுகளும் இப்போது பல்வேறு உலகின் பகுதியில் இருந்து கிடைக்கதொடங்கிவிட்டது

தற்போது கீழடி ஆய்வும் தொல் தமிழர் நகர வாழ்வை கி மு 600 என உறுதி செயகிறது இது நல்ல செய்திதான் .

கிழடியில் கரிம சோதனைக்கு உட்பட்ட பொருள்களின் அருகில் கிடைத்த பல்வேறு பொருள்களின் மூலம் அவைகளையும் அந்தக்காலத்திற்கு கிமு 600க்கு கொண்டு செல்கிறோம் .அதிலே எழுத்துக்களைக்கொண்ட பல நூறு பானை ஓ டுகளுடன் கிடைத்த தங்க ஆபரணங்கள் வியக்க வைக்கிறது .எத்தனை கலை நயம் ,வடிவமைப்பு அத்தனையும் 2600 ஆண்டுகளுக்கு முன் தொல் தமிழ்மகளிர் பயன்படுத்தினர் என்பது எத்தனை வியப்பிற்குரிய செய்தி இத்தனை நேர்த்தி வர முன்னே எத்தனை நூறு ஆண்டுகள் உழைப்பு இருந்திருக்கக்கூடும் என்பது புரிகிறது . .அந்த ஆபரணங்களை செய்ய எத்தனை நுட்பமானக்கருவிகள் தேவைப்பட்டிருக்கும் ,பொற்கொல்லர்உயரிய திறமை அந்த தங்கம் தங்கம் எங்கிருந்து கிடைத்தது ?இவைகள் இன்னமும்முந்தய தொல் பழங்காலத்திற்கு நம்மைக்கொண்டு செல்லும் .இன்றைய நவீன ஜூவல்லரி அடுக்கில் உள்ளது இன்றும்அவைகள் நவீனமாக ..தோன்றுகிறது .

அடுத்த வியப்பு கிழடியில் கிடைத்த 60க்கும் மேற்பட்டவிளையாட்டுப்பொருள்கள் , அவர்கள் வாழ்வில் ஒய்வு பெற கழிக்க நேரம் மிகுந்திருந்த செல்வ செழிப்பான வாழ்க்கை முறை அனுமானிக்க இயல்கிறது .வணிகமும் ,வேளாண்மையும் செழித்திருந்தன .ரோமுடனும் மற்றைய நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்ததும் தெரிய வருகிறது .எண்ணும் எழுத்தும் இல்லாமல் வாணிபம் ஏது ?சமீபத்திய அகழாய்வில் மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள், சமையல் செய்ய பயன்படும் மண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த மருந்து கிண்ணங்கள் அனைத்தும் புனல் போன்ற அமைப்பை கொண்டுள்ளன. ஒருசில பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் இவற்றை சமையலுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. பல மண்பாண்ட பொருட்கள் விரிசல்களுடன் இருந்தாலும் உடையாமல் காணப்படுகிறது.பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் இவற்றை சமையலுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என கருதலாம் என நக்கீரன் இதழ் கட்டுரை வெளியீட்டு இருக்கிறது .எனவே மருத்துவ அறிவும் நாம் பெற்றிருந்தோம் என்பதுவும் .சங்க இலக்கிய மருத்துவர் தாமோதரன் என்பதும் உண்மையாக இருக்க வாய்ப்பும் இப்போது கிடைத்துள்ளது .

எனவே நமது தொன்மை 2600 மட்டுமல்லஇது ஒரு ஆரம்பமே மிக சுலபமாக நம்மால் மிக விரைவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்ல இயலும் கிழடியிலேயே மீதம் இருக்கும் 110 ஏக்கருக்கு தோண்டப்படவேண்டும் .இன்னமும் ஆழமாக செல்ல வேண்டும் .உலகிலேயே தமிழ் நாட்டில் தான் மிக அதிகமான தொல்லியல் இடங்கள் இன்னமும் முழுமையாக ஆராயப்படாமல் இருக்கிறது .ஆதிச்சநல்லூர் , அரிக்க மேடு ,கொடுமணல் , புலிமான் கோம்பை ,கோதை என்ற பெயர் பொறித்த தங்கக்கட்டிகள் கிடைத்த தேனூர் , இனமும் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை நதிக்கரை ஓரமாக இடங்களும் , மிக நீண்ட நாட்களாக கடலில் மூழ்கிக்கிடக்கும் பூம்புகார் இவை அத்தனையும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆய்ந்து முடிவுகள் அறியப்படவேண்டும் .ஆய்வுக்கு உலகத்தரம் வாய்ந்த கரிம சோதனை ,மரபணு சோதனை இவைகள் முறையாக பயன் படுத்தி முடிவுக்கு வரவேண்டும் .நமது சங்க இலக்கியங்கள் வெற்று கற்பனைகள் அல்ல அவை அப்போதைய தமிழ் புலவர்கள் கண்ட. கேட்டறிந்த வரலாற்று தரவுகள் என்று நிறுவப்படவேண்டும்

சங்ககாலம் ஒரு ஆரம்பம் தானே தவிர அதுவே எல்லை இல்லை தமிழர் வரலாறு வணிகம் மூலம் உலகளாவிய அளவில் பரவியிருந்த சான்றுகளும் இப்போது உலகின் பல பகுதிகளில் கிடைக்கதொடங்கிவிட்டது .அவைகளை ஒருங்கிணைக்க வேண்டும் .2600 ஆண்டுகள் பழமை ஒரு ஆரம்பம் தான் எனவே இதற்க்கே அதிக கொண்டாட்டம் ஆர்பாட்டம் இருக்க தேவை இல்லை .தொல் தமிழர் மிக நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்கள் .எனவே இப்போது தமிழர் நாகரீகம்வெளிப்படத்தொடங்கியிருக்கிறது என்று மகிழ்ச்சி கொண்டு அமைதியாக மேலும் இதர இடங்களிலும் ஆய்வுகள் தொடர முன்னெடுப்பு கொண்டு விழிப்புடன் அமைதியாக இருக்க வேண்டும் .உலகம் தமிழனின் தொன்மையை ஒட்டு மொத்தமாக ஒப்புக்கொள்ளும் காலம் நெருங்கி வருகிறது .அது வரை நமக்குத் தேவைதமிழன் என்ற விழிப்பும் ஒற்றுமையும் மட்டுமே .ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !நம்மில் தமிழரிடம் ஒற்றுமை நீங்கில் நம்மால் இலக்கை அடைய இயலாது .நன்றி !

#அண்ணாமலைசுகுமாரன்

7/10/19

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.