குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

நம்மைத் தோண்டி எடுத்துத் திட்டக்கூட எந்தத் தலைமுறையும் மிஞ்சாது. சுபதராதேவி கீழடி அகழ்வாராய்ச்சி:

30.09.2019 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை ஆய்வு செய்ததில் எங்கும் கடவுள் சிலையோ கோயிலோ வழிபாட்டுத் தலமோ இதுவரை கிடைக்கவில்லை! நல்லது.வேறென்ன கிடைத்திருக்கிறது? அது என்ன சொல்கிறது?

அக்காலத்தின் பல தலைமுறைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த ஆய்வில் எனக்கு புரிவது என்னவென்றால் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்

தாத்தாக்களும் பாட்டிக்களும் அடுத்தடுத்த தலைமுறைகளை மிகவும் அக்கறையுடன் பார்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பின் என்ன? சும்மாவா 650 விளையாட்டு பொருட்கள் கிடைக்கும்? பெண்களையும் மிகவும் நேசித்தவர்களாக தெரிகிறார்கள். ஆம் பெண்களின் ஆபரணங்களும் நிறையவே கிடைத்திருக்கின்றனவே.

பெரியவர்கள் ஆடும் விளையாட்டு உபகரணங்களும் கிடைக்கின்றன. ஆக, பிசியாகவும் டென்சனாகவும் இல்லாமல் விளையாடி மகிழ்ந்தே இருந்திருக்கின்றனர் பொதுவாக மக்கள்.

எக்கச்சக்கமான எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. கல்வி எளிய மக்களுக்கு நன்றாகவே கிடைத்திருக்கிறது. நிச்சயம் இன்று போல போகப் பொருளாக இருந்திருக்கவில்லை.

சட்டைக்கு போடும் பொத்தான் தங்கத்தில் கிடைத்திருக்கிறது! ஆக மேல்சட்டை அணிந்து அருமையாகவே தோரணையாகவே இருந்திருக்கின்றனர்.

உரைக்கிணறு வைத்து கிணற்றுப் பாசனம் செய்தாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி தீர்க்காமல் அல்லது மீண்டும் நிறைத்து வைத்து, நம்மை கருத்தில் கொண்டே வாழ்ந்திருக்கின்றனர்.

ஒரு பெரிய மண் பாண்ட ஆலை மற்றும் நெசவாலைகள் ஒரே ஊரில் இருந்து இருக்கின்றன. பானை, வாட்டர் பாட்டில், விளையாட்டு சாமான், தாயம் போன்ற அனைத்தும் மண்பாண்டக் கலையாக இருப்பதைப் பார்த்தால் வீட்டுக்கு வீடு பாண்டங்களும் நெசவு செய்த உடைகளும் வாங்கித்தள்ளி இந்த இரு ஆலை வைத்திருந்தவர்களையும் இன்றைய அம்பானி அதானி ரேஞ்சுக்கு பணக்காரர்களாக்கி இருக்கக் கூடும்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.