குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 15 ம் திகதி புதன் கிழமை .

வீறுகவியரசர் முடியரசனார்

 

நெருப்புக்குச் சூல்கொடுத்த நேர்மைக் கோடு

நெய்துவைத்த பாக்களெலாம் கொள்கைப் பீடு !

கருஞ்சட்டை!வெளிச்சத்தை விதைத்து வென்ற

கைத்தடியின் ஒளிவிளக்கு !கவிதைக் காடு !

*

துருப்பிடிக்காக் கொள்கைகொண்ட தூய ஏடு !

துணிச்சலுக்கு துரைராசன் என்றே பீடு !

குருத்துவரை நிமிர்ந்திருக்கும் மானத் தேக்கின்

குழந்தைமனம் !முடியரசன் !புலமை வீடு !

°


கரிகாலன் போல்பார்வை !கனத்த மீசை !

கனிவயிர நெஞ்சுறுதி கிளைத்த மார்பன் !

அரிமாவே கடன்கேற்கும் அரிய தோற்றம் !

ஆர்க்காத நடுக்கடல்போல் அறிவின் ஆழம் !

..


விரிவானம் நகலெடுத்த பரந்த உள்ளம் !

விளைநிலத்து முதிர்கதிர்போல் பதரைத் தள்ளும் !

செரிவான தமிழ்ச்செருக்கன் ! பாவேந் தன்போல்

செந்தமிழின் தலைப்பிள்ளை !வணங்கு கின்றோம் !


°

முடியரசன் !தமிழ்த்தாயின் முத்த ஈரம் !

முதற்படையின் முன்நிற்கும் மூத்த வீரன் !

விடிவதற்காய்ச் சூரியனே ஒளிப்பி ழம்பை

விதைத்துவைத்த கவிதைவயல் !வெளிச்சச் சோறு !

*

இடிமின்னல் வெடிமழையால் இருட்ட கற்றி

ஈரநிலம் உழக்கற்ற கொள்கை ஏறு !

அடிவானச் சூரியனை எழுப்பி வைத்த

அடையாளக் கவிதைகளின் சூட்டுக் கோல்!ஆம்

°


வேடங்கள் தாங்காத வேடந் தாங்கல் !

வெறுங்கூச்சல் போடாத வெற்றிப் பாய்ச்சல் !

ஓடங்கள் ஓடிவிளை யாடும் ஆறு !

ஒளிவுமறை வில்லாத உள்ளக் கூடம் !

*

மூடங்கள் ஒழிக்கவந்த பெரியார் நெஞ்சை

மோனையெனச் செயல்படுத்த முந்தும் வேகம் !

மூடவழி தானறியா அன்பின் ஊற்று!

முடியரசர் தேனருவி சுமந்த காற்று !

°


விலைபோகா உயிரெழுத்து !பெரியார் பெற்ற

விழுதுகளின் உயிலெழுத்து !தன்மா னத்தின்

மலையெழுத்து ! வானத்தைக் குள்ள மாக்கி

மழைக்குடைபோல் மடக்கிவைக்கும் ஆற்ற லாளன் !

*

நிலைத்தபுகழ் நூற்றாண்டில் கவிஞர்க் கெல்லாம்

நெஞ்சுரத்தைப் பரிசளித்தார்!இனிமே லேனும்

வலைக்குள்ளே சிக்காமல் வாழக் கற்போம்!

வலையறுத்தும் தன்மானம் நிமிர நிற்போம் !

°


அவர்கொள்கை தமிழ்காத்தல் தமிழர் காத்தல் !

அறஞ்செய்தல்!மறஞ்செய்தல் ! உட்பு குந்த

உவர்நீரை நன்னீராய் மாற்று தற்கே

உயிர்க்கொள்கை பெரியாரைத் துணைக்கோ டல்!நேர்


எவர்வரினும் எதிர்க்கின்ற நேர்மைச் சீற்றம்!

எதுவரினும் கலங்காத இதய ஆற்றல் !

சுவராக முடியரசர் நமக்கு வாய்த்தார்

சித்திரங்கள்எழுதிவைப்போம் !சிறக்க வாழ்வோம் !

°


...........................................................

கவிக்கோ துரைவசந்தராசன்

..........................................................................


(வீறுகவியரசர் நூற்றாண்டுத் தொடக்கம் 7.10.19)

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.