குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

இலங்கை தலைநகர் கொழும்பில் உயர்ந்த தாமரைக கோபுரம்பற்றி!

02.09.2019- கொழும்பு, டி. ஆர். விசயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய உயரமான தாமரைக் கோபுரம் ( Lotous Tower) எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை  சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த தாமரை கோபுரம் பற்றி தெரியுமா?

ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம். 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள்

90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்- 10 ஏக்கர் விஸ்தாரண நிலம்

1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி

50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது கொங்கிறீட் சுவர்களின் குழல் வடிவத்திலே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக்கட்டிடத்தின் 215 உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே சென்கின்றன.

இக்கோபுரத்தினூடாக எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகத் திகழும். உலக ரீதியில் வானத்தைத் தொடும் அளவில் பாரிய உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டுவரும் அதேநேரத்தில் பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது.

ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும். அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படும்.

இத்தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பு

மேல் பகுதியில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ல்க்ல்கட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்த்தாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைப்பு.

கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனருடன் இலஙகை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படு்ம் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாமரைத் கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதில் 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகன தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிப்பு.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

கட்டிட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 டொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகளுக்கு 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாமரை கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்படவுள்ளது.

பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இத்தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைப்பு

இந்த கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது.

இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.

நிலத்துக்குக் கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படும் அது 270 மீட்டர் வரை அதாவது 85 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில்வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக்கப்படும்.

இந்த ஒன்பது மாடிகளுக்கும் பார்வையாளர் கூடங்களும் அமைப்பு. இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான காலநிலையில் இலங்கை முழுவதையும் பார்க்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

அவ்வாறே சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்படவுள்ளன.

இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும். அத்துடன், இக்கோபுரமானது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கேபுரம் இலங்கையின் தொடர்பாடல் தொழில் நுட்பம் பன் மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.