குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

இலத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்கும்!

திராவிடர்" என்றால்

எது சரியான கூற்று..? 1 முதல் 9 வரை

உங்கள் பதில் என்ன..?

1, தென்னாட்டில் வாழும் கன்னடர், மலையாளி, தெலுங்கர், தமிழர் இவர்களுக்கான பொதுபெயர் "திராவிடர்". (திமுக கூற்று)

2, தென் இந்தியாவில் பேசும் ஒரேமாதிரியான 4 மொழிக் குடும்பத்தை சேர்ந்த மக்கள் "திராவிடர்". (கார்டுவெல் கூற்று)

3, தென் இந்திய நிலப்பகுதி சார்ந்து வாழும் மக்களின் பெயர் "திராவிடர்". (வரலாற்று ஆசிரியர்கள் கூற்று)

4, ஆங்கிலேயரின் தவறாக "தமிழர்" மொழி உச்சரிப்பால் உருவானது "திராவிடர்". (முற்போக்கு பத்திரிக்கையாளர் கூற்று)

5, தென் இந்தியாவில் வாழ்ந்த வடநாட்டு ஆரிய பிராமண இனத்தவரை குறிக்க ஆங்கிலேயர் பயன்படுத்திய சொல் "திராவிடர்". (தமிழ்தேசியர்களின் கூற்று)

6, பிராமணர்களின் சாதிய பட்டப்பெயர்களில் ஒன்று "திராவிடர்". (உதாரணம். ராகுல் திராவிட்- பெ.மணியரசன் கூற்று)

7, ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான "திரி- வடுகர்களே" திராவிடர்கள். பிராமண வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் "திராவிடர்" (சி.பா.ஆதித்தனார் கூற்று)

8, 1000 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த "குமாரில பட்டர்" என்ற வேதரிசி வேத மொழி சமஸ்க்ருதத்துக்கு துணையான ஒரு மனித மொழி "திராவிட மொழி" என்று இவ்விரண்டு மொழிகளுக்கும் தமிழிலிருந்து தான் ஆதாரம் காட்டியுள்ளார்...இவருடைய குறிப்பை வைத்தே ஆங்கிலேயர் கார்டுவெல் "திராவிடர்" என்றார்.

9, "#திராவிடர்" என்ற

***சொல்லே பொய்யானது,

அறிவுக்குப் புறம்பானது,

வரலாற்று பிழை என்கிறார்.***

(அகில உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான நொபோரு கராஷிமா)

திராவிடர் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியது "கால்டுவெல்"என்கிற வெள்ளைக்காரர். காஞ்சி ஆரிய குமாரில பட்டர் ஆய்வு கட்டுரையிலிருந்து தான் கண்டு பிடித்ததாக அவரே கூறியிருக்கிறார்.

ஆனால், 2000 ஆண்டுகள் முந்தைய எந்த தமிழ் இலக்கியத்திலும் "#திராவிடம்" என்ற சொல் கிடையவே கிடையாது. சைவ நாயன்மார்கள் அருளிய தேவார, திருவாசகம் உள்ளிட்ட பாசுரங்களைச் சொல்கையில், திராவிட வேதம் என்று சொல்வதில்லை. அவை தமிழ் மறை என்றே சொல்லப்படுகின்றன.

இரண்டுமே தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன.

ஆக, "#திராவிடம்" என்ற பெயரை சொல்லி திராவிட இயக்கங்கள் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஆனால் "திராவிடர், திராவிடம்" என்ற கருத்தியலே கிடையாது என்பது தான் உன்மை.

பிராமணர்களின் சாதி பெயர் தான் "திராவிடம்" இந்த சொல் மனுதர்மத்தில் உள்ள சொல்.!

பிறகு ஏன் "#பெரியாரும், #அண்ணாவும் இந்த பெயரில் கட்சி தொடங்கினர். அதுவும் பிராமண எதிரப்பு என்ற கொள்கையில்..?

புரியவில்லை..?

திராவிட அரசியல் இருக்கும் வரை சுடாலின்,கமல்,ரசினி,விசயகாந்த்,வைகோ, திருமுருகன் காந்தி எது செய்தாலும் சரி என ஊடகங்கள் தூக்கி பிடிக்கும்..! அதே,

சசிகலா, தினகரன், சீமான், திருமா, அன்புமணி, வேல்முருகன், மணியரசன், முகிலன் எது செய்தாலும் தவறு, தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகங்கள் இவர்களை புறக்கணிக்கும் ..!

(நேற்று கட்சி ஆரம்பித்த கமலுக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்)

நாம், கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும்.

அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா.?

ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதியா.?

** யாதும் ஊரே யாவரும் கேளிர் **

என்பதே தமிழர் மறை.

பெரியாரும் அண்ணாவும் செய்தது சரியா.?

இவண்

இர.பிரபு உவந்தான்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.