குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

களப்பிரர்கள் காலத்தை ஏன் இருண்டகாலமென தமிழர்கள் கற்பித்தனர்? தமிழால் வளர்ந்து தமிழுக்குதுரோமானவர் ?

களப்பிரர்கள் காலத்தை ஏன் இருண்டகாலமென  தமிழர்கள் கற்பித்தனர்? பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானமாகக் கொடுக்கப்ட்ட ஊரைத்திரும்பப்பெற்றதால் பிராமண ஆதிக்கர் களப்பிலர் காலத்தை தமிழ்வரலாற்றின் இருண்டகாலம் என தமிழர் தலையில் மிளகாய் அரைத்துள்ளனர்.தமிழர் இழந்தகாலம் பொற்காலம் பிராமணர் இழந்தகாலம் இருண்டகாலம். தமிழ்பல்கலைக்கழகங்கள் பட்ப்படிப்பாளர்கள்  பட்டம் பதவியில் மட்டும் உணர்வாயிருந்தனர்.!

வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ள விபரங்களைக் கொண்டுதான் களப்பிரர் வரலாறு ஆரம்பமாகிறது...

இச் செப்பேடு பற்றி முழுமையாக, எளிமையாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

களப்பிரர்களின் ஆட்சிமுறை கட்டமைப்பை தெரிந்துகொள்ள அல்லது உறுதி செய்ய அல்லது யூகிக்க, இச்செப்பேட்டின் தகவல்கள் வெகு அவசியமாகிறது.

வேள்விக்குடிச் செப்பேட்டில் மொத்தம் 10 இதழ்கள் ( Plates) உள்ளன. 8 இதழ்களின் இருபக்கமும், 2 இதழ்களில் ஒரு பக்கமும் எழுதப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 155 வரிகளில், 30 வரிகள் வடமொழியிலும் மீதம் உள்ள 125 வரிகள் தமிழ் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன.

பாண்டியமன்னன் பராந்தகன் நெடுஞ்சடையனின் 3ம் ஆட்சியாண்டில் இச்சாசனம் வெளியிடப்பட்டது.. காலம் கி.பி. 770 என்பதாக உறுதிசெய்யப்படுகிறது

வழக்கமான வாழ்த்துப் பாடல்களுடன் ஆரம்பித்து பாண்டியர்களின் பெருமை சொல்லப்படுகிறது..

பிறகு பாண்டிய வம்சம் பற்றி.. இவர்.. இவருக்குப் பிறகு இவர் என்று பாண்டியர்களின் வரிசை...

செப்பேட்டின் 31 - 37 ம் வரிகள் மிக முக்கியமானவை...

பாண்டிய அரசன் பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்பவர்,

பிராமணர்களின் வேண்டுகோளுக்கிணங்க , வேள்விக்குடி என்னும் கிராமத்தை ..

நற்கொற்றன் என்னும் பிராமணத்

தலைவனுக்கு இறையிலியாக வழங்கினார்.

 

கலியரசன் களப்பிரன், பாண்டிய நாட்டை கைப்பற்றினான். பாண்டியர்களின் தானத்தை விலக்கிக்கொண்டான்

. வேள்விக்குடித் தானமும் ரத்து செய்யப்பட்டது.

 

கடுங்கோன் பாண்டியன் களப்பிரனை தோற்கடித்து பாண்டிய நாட்டை மீட்டான்...

 

கடுங்கோனுக்குப்பிறகு அவனிசூளாமணி மாறவர்மன் பாண்டியநாட்டை ஆண்டார். பிறகு அரிகேசரி அசமசனன், சிறிரீமாறவர்மன், சடையன்,

 

இவ்வாறகத் தொடர்ந்து பாண்டியர்கள் மதுரையை ஆண்டனர்.

வரிசையின் இறுதியில் வரும் அரசன்தான் இச்செப்பேட்டை வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன்.

 

செப்பேட்டின் 103 வது வரி... ஒரு சம்பவம் போல் ஆரம்பம் ஆகிறது.

 

பாண்டினின் 3 ம் ஆட்சியாண்டில்...

கி.பி. 770

 

மதுரையின் மாட மாளிகைகள் நிறைந்த தெருவில் ஒருவன் கூச்சலிடுகிறான்..

 

*கொற்றவனே.....*

 

என்று உரக்கக் கூச்சல் இடுகிறான்.


உடனே அவன் அழைத்து வரப்பட்டு அரசன் முன் நிறுத்தப்பட்டான்.


அரசன் அவனை நோக்கி, உனக்கு என்ன குறை..?


நீதி தவறா பாண்டியனே.. பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த வேள்விக்குடி கிராமத்தை உனது முன்னோரான பெருமன்னன் பல்யாக முதுகுடுமி பெருவழுதி பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்.

களப்பிரர்களின் பெரும்படையெடுப்புக்குபின் வேள்விக்குடித் தானம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அத்தானத்தை திரும்பபெறாமல் இருக்கிறோம். எனது பெயர் காமாக்கினி நற்சிங்கன்.

 

அரசனும் அவனிடம், என்ன ஆதாரம் உள்ளது என்று விசாரித்து சான்றுகளை சரிபார்த்து, அவனிடம்..

 

எனது முன்னோர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட தானம் என்னால் உறுதிசெய்யப்படும்..

என்று கூறி...

 

நீர்வார்த்து, அப்பிராமணருக்கு வேள்விக்குடி கிராமம் தானமாக வழங்கப்பட்டது.

 

அரசனின் ஆணை சாசனமாக செப்பேட்டில் பொறிக்கப்பட்டது.

 

இவ்வளவுதான்.. இச்செப்பேட்டின் தகவல் சுருக்கம்.

 

இச்செப்பேட்டில் இருக்கும் நான்கு செய்திகள் மட்டுமே நமக்குத் தேவையாகிறது.

 

1. பாண்டிய அரசன் ஒருவர் வேள்விக்குடி என்னும் கிராமத்தை பிராமணர்களுக்குத் தானமாக பிரம்மதேயமாக வழங்குகிறார்.

 

2. களப்பிர அரசன் பாண்டிய நாட்டை கைப்பற்றுகிறார். வேள்விக்குடித் தானத்தை ரத்து செய்கிறார்.

 

3. பாண்டியன் ஒருவர் களப்பிரர்களை தோற்கடித்து பாண்டியநாட்டை கைப்பற்றுகிறார்.

 

4. பாண்டிய அரசன் ஒருவர் களப்பிரர்களால் ரத்துசெய்யப்பட்ட தானத்தை மீண்டும் வழங்குகிறார்.

 

பிரம்மதேயத்தை களப்பிரர்கள் ரத்து செய்தார்கள் என்னும் ஒற்றை செய்தியைக் கொண்டுதான்... களப்பிரர்களைப் பற்றிய ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

 

பிராமணர்களை எதிர்த்தார்கள்.

 

பிரம்மதேயத்தை ஒழித்தார்கள்.

 

சமூகநீதிக் காத்தார்கள்.

 

வைதீக முறையை ஒடுக்கினார்கள்.

 

ஆகவேதான் பிராமண ஆய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்றார்கள்.

 

ஏதோ பிராமணர்களை ஒழிக்க வந்த அவதாரம் போல் களப்பிரர்களை கொண்டாடினார்கள் ஒரு சிலர்...

 

ஒரே ஒரு செய்தியைக் கொண்டு இம்முடிவை எடுப்பது சரிதானா..?

 

ஒரு வேளை, தானம் பெற்ற பிராமணர்கள் ஏதேனும் தவறு செய்து, அதனால் களப்பிரர் ரத்து செய்திருந்தால்..?

 

எத்தனையோ சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டில் பிராமணர்களின் தவறுகளுக்கு தண்டனைப் பெற்ற செய்தி உள்ளதே.

 

அப்போ.. சோழனும் பாண்டியனும் பிராமணர்களுக்கு எதிரானவர் என்று பொருளா..?

 

நீண்ட காலமாக களப்பிரர்களைப்பற்றி ஆய்வு செய்து வரும் ஒரு ஆய்வாளரிடம் விவாதித்தேன்..

 

வேள்விக்குடிச் செப்பேட்டின் ஒரு வாசகத்தை சான்றாகக் கொண்டு, களப்பிரர்கள் பிராமண விரோதி என்று கூறுவது சரியா.?

 

அவர் கூறினார்...

இந்த ஒரு சான்றுதான் என்றால்... என்னோட ஆய்வை தொடர்ந்திருக்கவே

மாட்டேன்.

 

தளவாய்புரம் செப்பேட்டைப் பாருங்கள் என்றார்.

 

தளவாய்புரம் செப்பேடு என்ன சொல்கிறது..?

 

தொடர்வோம்...

 

அன்புடன் ..

மா. மாரிராயான்...

 

 

பாண்டியர் செப்பேடுகள் பத்து...