குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 25 ம் திகதி புதன் கிழமை .

அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா கம்போடியாவில் இராந்திர சோழனுக்கு சிலை ஏன்?

13.08.2019-இராயேந்திர சோழனுக்கு சிலை, அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பாடம்... வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சி கம்போடியாவின் பெரும்பான்மையான தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த இளவரசிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேர ஏற்பட்டது. அடிப்படையில் நாட்டியம் அறிந்த இளவரசி, கம்போடியாவின் பாரம்பர்ய நடனமான அப்சராவும், இந்த நடனமும் ஒன்றுபோல இருப்பதாக உணர்ந்தார்.

அப்சரா

கலை என்பது ஒரு சமூகத்தின் கலாசார பண்பாட்டின் வெளிப்பாடு. எனவே, இந்த நடனம் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கம்போடிய அமைச்சரைத் தொடர்புகொண்டு, `இது என்ன நடனம்? இதை ஆடும் மக்கள் யார்?' என்பதான கேள்விகளை முன்வைத்தார். மேலும், இதுகுறித்து அறிந்து தகவல்கள் தருமாறு தன் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டனர்.

கோயிலின் விளிம்புகளில் மன்னனின் முகத்தைப் பதிப்பது பல்லவர்களின் வழக்கம். அப்படி வைகுண்ட பெருமாள் கோயிலில், மன்னன் ஒருவனின் முகமும், ஒரு சிறுவனின் முகமும் பொறிக்கப்பட்டிருந்த சிற்பங்களைக் கண்ட கம்போடிய அதிகாரிகள், `எங்கள் நாட்டு மன்னன் உட்காருவதும், இந்த சிற்பங்களில் மன்னர் உட்கார்ந்திருப்பதும் ஒரே மாதிரியாக இருக்கிறது' என ஆச்சர்யப்பட்டுக்கொண்டனர்.

அங்கோர் தமிழ் சங்கம்

பரதநாட்டியம்

அது ஒரு பரதநாட்டிய நிகழ்வு. அதை பன்னாட்டு தமிழர் நடுவமும் `அங்கோர்வாட்' தமிழ்ச்சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் நடனம் குறித்தும், நடனத்தின் தாயகமான தமிழகத்தின் பண்பாடு குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், தகவல்கள் அறிய அவர்கள் தமிழகத்துக்கு வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்களின் தொப்புள்கொடி உறவு உள்ள நிலம் என்பதை அறிந்து வியந்தனர். பயணம் முடிந்து கிளம்புவதற்கு முன்பாக, `கம்போடியாவில் ராயேந்திரனுக்கு சிலை நிறுவுவோம்' என உறுதி தந்து செல்கிறார்கள்.

அன்று இளவரசியின் ஆழமனத்தில் உருவான அந்தத் தேடல், இன்று கம்போடியாவில் இராயேந்திர சோழனுக்கு சிலை எழுப்புமளவுக்கு வந்து நிற்கிறது.

அப்படி கம்போடியர்களுக்கு என்ன செய்தார் இராயேந்திரன்?

கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தியவரும், பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவருமான திருத்தணிகாசலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

"கடந்த ஆண்டு கம்போடியாவில், `உலகத் தமிழர் மாநாடு' நடத்தினோம். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதத்தில் சர்வதேச நாட்டியாஞ்சலி விழாவை நடத்தினோம். அதைத் தொலைக்காட்சியில் கண்ட இளவரசி, கலாசாரத்துறை அதிகாரிகளை அனுப்பி பரதநாட்டியம் குறித்த விவரங்களை அறிந்து வரச் சொல்லியிருந்தார். அவர்களிடம் பேசத் தொடங்கிய பின்னர்தான், அவர்களின் வரலாறும் நம்முடைய வரலாறும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம். அங்கோர் தமிழ் சங்கம்

நண்பனின், கோரிக்கையை ஏற்று, ஏறத்தாழ ஆயிரம் கப்பல்களில், ஒரு இலட்சம் போர்வீரர்களை கடாரத்தின் மீது ஏவி போர் நடத்தினான் இராயேந்திரன். ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை அடித்து காலிசெய்து, போரில், கடாரத்தையும், அதன் கடைசி மன்னனான சங்கரமன வியயேந்திரனையும் அடிமைப்படுத்தினான்.

திருத்தணிகாசலம்

பிறகு, அதை முறையாகப் பதிவு செய்ய முடிவெடுத்து, தமிழகத்துக்கு வந்து பார்வையிடுமாறு, அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 30-ம் தேதி தொல்லியல் துறையைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் தமிழகத்துக்கு வந்தனர். அவர்களுடன் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானசேகரனும் உடன்வந்தார். அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயில், வைகுண்டப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கு முதலில் அழைத்துச் சென்றோம்.அங்கோர் தமிழ் சங்கம்

கோயிலின் விளிம்புகளில் மன்னனின் முகத்தைப் பதிப்பது பல்லவர்களின் வழக்கம். அப்படி வைகுண்ட பெருமாள் கோயிலில், மன்னன் ஒருவனின் முகமும், ஒரு சிறுவனின் முகமும் பொறிக்கப்பட்டிருந்த சிற்பங்களைக் கண்ட கம்போடிய அதிகாரிகள், `எங்கள் நாட்டு மன்னன் உட்காருவதும், இந்த சிற்பங்களில் மன்னர் உட்காந்திருப்பதும் ஒரே மாதிரியாக இருக்கிறது' என ஆச்சர்யபட்டுக் கொண்டனர். `ஏழாம் நூற்றாண்டில், பல்லவ தேசத்து மன்னருக்கு வாரிசு இல்லாத காரணத்தால், கம்போடியாவிலிருந்து 13 வயது சிறுவனான இரண்டாம் நந்திவர்மனை அழைத்துவந்து முடிசூட்டியிருக்கிறார்கள். அதுகுறித்த சிற்பம்தான் அது' என்பது தெரிந்த பின்னர் மிகுந்த ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

அன்றிரவு உணவு நேரத்தின்போது, `உங்கள் நாட்டை ஆண்ட மகேந்திவர்மனும், பல்லவ நாட்டை ஆட்சி செய்த மன்னனும் வேறு வேறு நபர்கள் அல்ல. ஒரே ஆள்தான். உங்கள் நாட்டு மன்னன்தான் அங்கேயும் ஆட்சி செய்திருக்கிறான். கீழக்கரையில் கம்பூசியம், மேலக்கரையில் காஞ்சிபுரம் நாம் எல்லாம் ஒரே நாட்டின் குடிமக்கள்' என்று சொன்னேன். உடனே இருவரும் `எசு, சேம் பிளட் வி ஆர் தமிழ்சு' என கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.அங்கோர் தமிழ் சங்கம்

அடுத்ததாக தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். இராயராயனின் சிலைக்கு அருகேயிருந்த கருவூராரின் சிலையைப் பார்த்தவர்கள், `இதே உருவத்தில் ஒரு சிலை அவர்கள் நாட்டின் கருவூலத்தில் உள்ளது' எனத் தெரிவித்தனர். `பெரிய கோயிலின் கும்பாபிசேகத்துக்கு உங்கள் நாட்டு மன்னர் வந்திருக்கலாம், அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக அந்தச் சிலை கொடுக்கப்பட்டிருக்கலாம்' எனச் சொன்னோம். ஆனால், அதுகுறித்த வரலாறுகளைச் சேகரித்து எங்களுக்கு வேறு சில தகவல்களைச் சொன்னார்கள். ராயேந்திரனுக்கு சிலை திறக்க ஆவலாக இருப்பதற்கும் அந்த வரலாறுதான் காரணம்.

கோயில்

கோயில்

அதன்படி, பத்தாம் நூற்றாண்டில் கம்புதேசத்து பேரரசன் முதலாம் சூர்யவர்மன், தாம்பரலிங்கா நாட்டின் மீது போர்த்தொடுக்க நினைத்தான். அப்போது, தாம்பரலிங்கா (மலேசியா) அரசனுக்கு உதவியாக கடாரத்து மன்னன் (மியான்மர்) சங்கரம விசயதுங்கவர்மன் வந்தான். அந்த சூழலில்தான், தன் நண்பனும், சோழப் பேரரசருமான இராயேந்திர சோழனை உதவிக்கு அழைத்தான் முதலாம் சூர்யவர்மன். நண்பனின், கோரிக்கையை ஏற்று, ஏறத்தாழ ஆயிரம் கப்பல்களில், ஒருலட்சம் போர்வீரர்களை கடாரத்தின் மீது ஏவி போர் நடத்தினான் இராயேந்திரன். ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை அடித்துக் காலிசெய்து, போரில், கடாரத்தையும், அதன் கடைசி மன்னனான சங்கரமன விசயேந்திரனையும்அடிமைப்படுத்தினான்.

கம்போடியாவில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்போவதாகவும் தமிழ் மொழிக்கும், கேமர் மொழிக்கும் டிக்‌ஷனரி தயாரிக்கவும் பள்ளிகளில் திருக்குறளைப் பாடமாக வைக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

அதோடு கம்புதேசத்துக்கு தலைவலியாக இருந்த கடாரம் முற்றோடு அழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை சீனப்பயணி ஒருவன் படமாக வரைந்திருக்கிறான். போரில் வெற்றி பெற உதவி செய்ததற்காக, நினைவுப் பரிசாக தங்கத்தேர் பரிசாக வழங்குகிறான். அந்த தங்கத்தேர் டெல்லியில் ஒரு கருவூலத்தில் இருக்கிறது. சோழர்களுக்கும், கம்போடியர்களுக்கும் மிக நீண்ட உறவு இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் அந்தச் சிலை என்ற தகவலையும் சொன்னார்கள்.

கம்போடியாவில் கண்டெடுக்கப்பட்ட சூர்யவர்மன் சிலை

அதற்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் சென்றோம். அங்கே, `மகேந்திரவர்மன்' என்கிற பெயரைப் பார்த்ததும், எங்கள் நாட்டிலும் `மகேந்திரவர்மன்' என்ற மன்னன் ஆட்சி செய்தான், அவன் ஆட்சி செய்ததும் ஆறாம் நூற்றாண்டில்தான் என்கிற தகவலைச் சொன்னார்கள். இங்கே இருக்கிற அனைத்துச் சிற்பங்களும், அங்கேயும் இருப்பதாக ஆய்வுசெய்து உறுதிபடுத்தினார்கள்.

அன்றிரவு உணவு நேரத்தின்போது, `உங்கள் நாட்டை ஆண்ட மகேந்திவர்மனும், பல்லவ நாட்டை ஆட்சிசெய்த மன்னனும் வேறு வேறு நபர்கள் அல்ல. ஒரே ஆள்தான். உங்கள் நாட்டு மன்னன்தான் அங்கேயும் ஆட்சி செய்திருக்கிறான். கீழக்கரையில் கம்பூசியம், மேலக்கரையில் காஞ்சிபுரம் நாம் எல்லாம் ஒரே நாட்டின் குடிமக்கள்' என்று சொன்னேன். உடனே இருவரும் `எசு, சேம் பிளட் வி ஆர் தமிழ்சு' என கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். தங்களுடைய பெயரையும் `சொக்கையா' என ஒருவரும், `இராயவணக்கம்' என்று மற்றொருவரும் மாற்றிக்கொண்டனர்.

கம்போடிய அதிகாரிகள்

அதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இராயேந்திரனுக்கு கம்போடியாவில் சிலை வைக்க ஏற்பாடு செய்வதாக அறிவிப்பு செய்தனர். சிலை வைப்பதோடு மட்டுமல்லாமல், மியூசியம், நூலகம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். கம்போடியாவில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்போவதாகவும் தமிழ் மொழிக்கும், கேமர் மொழிக்கும் டிக்‌சனரி தயாரிக்கவும் பள்ளிகளில் திருக்குறளைப் பாடமாக வைக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

அங்கோர் தமிழ் சங்கம்

கேமர் மக்களின் வரலாற்றில் `பிரபு' கவுடினியாட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் குமரி அரசு என ஆட்சியமைக்கிறான். அதுவே குமர் அரசாகி காலப்போக்கில் கெமர் அரசாகிறது. ஞானசேகரன்

இராயேந்திர சோழனுக்கு 2020 மே 20 -ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. சிலை திறப்புவிழாவில் கம்போடியா நாட்டு பிரதமர், சூன் சென் கலந்துகொள்கிறார். பிரதமர் மோடியை அழைக்கவிருக்கிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறோம்'' என்றார், மருத்துவர் திருத்தணிகாசலம்.

அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா

பத்திரிகையாளர் சந்திப்பு

அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசேகரனிடம் பேசினோம், "நானும் என் நண்பர் சீனிவாசனும் 2004-ம் ஆண்டு முதன்முறையாக கம்போடியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அங்கோர்வாட் கோயிலைப் பார்த்து வியந்தோம். பார்த்தவுடனேயே, அது தமிழர்களின் கலாசார அடையாளம்தான் எனத் தெரிந்துகொண்டோம். 2009-ம் ஆண்டில் மீண்டும் சென்று அங்கோர்வாட் கோயில் குறித்து ஒரு நூல் எழுதினோம்.

தமிழர்களுக்கும், கேமர் இன மக்களுக்கும் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனத் தெரிந்துகொண்ட பின்னர், அங்கோர்வாட்டிலேயே வாழலாம் என முடிவெடுத்து 2016-ம் ஆண்டு அங்கேயே செட்டில் ஆனோம். இரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ இளவரசன் பிரபு கவுண்டன், கம்போடியாவுக்குச் சென்று, `சோமா' என்ற அரசகுலப் பெண்ணை மணக்கிறான். அவனுக்குப் பரிசாகத் தனது நாட்டின் சிறு பகுதியை அரசன் பரிசளிக்கிறான். அந்தப் பகுதியை ஆட்சி செய்திருக்கிறான் பிரபு கவுண்டன். இதுகுறித்து, கேமர் மக்களின் வரலாற்றில் `பிரபு' கவுடினியாட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் குமரி அரசு என ஆட்சியமைக்கிறான். அதுவே குமர் அரசாகி காலப்போக்கில் கெமர் அரசாகிறது.

முதல்வருடன் சந்திப்பு

அந்த வரலாற்றுத் தொடர்ச்சிதான், ஆறாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மனை அழைத்து முடிசூட்டியிருக்கிறார்கள். முதலாம் சூர்யவர்மனுக்கு, இராயேந்திர சோழன் போரில் உதவிசெய்து வெல்ல வைத்திருக்கிறான். இப்படி வரலாற்று ரீதியாக பிணைந்து வாழும் தமிழர்களுக்கும், கெமர் மக்களுக்கும் இடையே சுமுக உறவை உண்டாக்குவதற்காக, பன்னாட்டு தமிழர் நடுவத்தின் சார்பாக உலகத் தமிழர் மாநாடு நடத்தினோம். நாட்டிய விழா நடத்தினோம். அதற்குப் பிறகு நடந்துதான் உங்களுக்குத் தெரியுமே?'' என்கிறார் ஞானசேகரன்.

திரு.சீனிவாசராவ்,

திரு. இரமேச்வாரன்

அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.