குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சயித்; ஒரு_கணிப்பு...... அடுத்த இலங்கைத் தலைவருக்கான தேர்தல் பற்றி ஓர் அலசல்!!

07.08.2019-கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த 57,680,00 (47%) வாக்குகளைப் பெற்ற அதே சந்தர்ப்பத்தில் மைத்ரி 62,17,000 (51%) வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார்.இதில் 58% மான சிங்களர்களின் வாக்குகளை மகிந்தவும், 41% மான சிங்களவர்களின் வாக்குகளை மைத்ரியும் பெற்றிருந்தனர்.

சிறுபான்மை இனத்தவரை பொறுத்தவரை, அவர்களின் வாக்குகளில் 84% மானவை மைத்ரிக்கும் 15% மான வாக்குகள் மகிந்தவிற்குமளிக்கப்பட்டிருந்தன.

மகிந்த 10 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். அவற்றில் எதுவும் தேர்தல் முடிவுகளில் பெருமளவில் தாக்கம் செலுத்துமளவு சிறுபான்மையினரை கொண்ட மாவட்டங்களாக இருக்கவில்லை. அவையாவன;

அனுராதபுரம், காலி, கம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, குருநாகல் , மாத்தறை, மொனறாகலை , இரத்னபுரி, மாத்தளை

அதேநேரம், மைத்ரி 12 மாவட்டங்களில் வென்றிருந்தார். அவற்றில் பொலன்னறுவை மற்றும் கம்பகா மாவட்டங்கள் மாத்திரம் சிங்களவர்களை அதிகம் கொண்ட பிரதேசங்களாகும். மீதி 10 மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக அமைந்திருந்தன. அவையாவன;

கொழும்பு, கண்டி , நுவரேலியா, புத்தளம், பதுளை, அம்பாரை (திகாமடுல்ல), மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம்

இந்த தேர்தல் முடிவுகளை வைத்து, எசு எல் பி பி (மகிந்த அணி) வேட்பாளராக கோட்டாபாய ராசபக்‌சவையும் - டி என எவ் (ஐக்கிய தேசிய கட்சி அணி) வேட்பாளராக சயித்தையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

கடந்த தேர்தலில் மகிந்தவால் வடக்கில் (Deep North) ஊடுருவ முடிந்திருக்கவில்லை. இந்த தேர்தலில் கோட்டாவாலும் ஊடுருவ முடியுமானதாக இருக்காது.

எனவே வடக்கு வாக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வழியில்லை.

கோட்டா வேட்பாளர் எனும் போது அவரை தோற்கடித்தே ஆகவேண்டுமென்ற வன்மம் கடந்த தேர்தலை விடவும் அதிகரிக்கலாம்.

அதனால், வாக்களிப்பு வீதம் அதிகரிக்கலாம். ஏனெனில், போரில் மிகமோசமாக தமிழர்களை கையாண்டவர் அவரே என்ற மனப்பதிவு வடக்கு தமிழர்களிடம் ஆழமாகவுள்ளது.

அதனால் சயித்திற்கு இது சாதகமாக அமைவதோடு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படாது என்பதை அறியலாம்.

அதேநேரம், கடந்த தேர்தலில் மகிந்தவின் கோட்டையாக இருந்தது தென்மாகாணமே (Deep South). அதாவது, காலி, மாத்தறை, கம்பாந்தோட்டை மாவட்டங்களே.

அங்கு மைத்ரியின் பலவீனம் வெளிப்படையாகவே தெரிந்தது.

அது மிகப்பெரும் பலமாக மகிந்தவிற்கு அமைந்திருந்தது.

ஆனால், சயித் வேட்பாளராக வரும்பட்சத்தில் அவருடைய தேர்தல் மாவட்டமும் தெற்கில் இருப்பதால், மிக இலகுவாக ஊடுருவி வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இது மகிந்த முகங்கொள்ளாத, கோட்டா முகங்கொள்ள வேண்டிய மிகப்பெரும் சவாலாக அமையும்.

இதனால், எசு எல் பி பி தனது மிகப்பலமான தளத்தில் (Strong hold) வீழ்ச்சியை சந்திக்கும். அல்லது சஜீத்திடம் குறிப்பிடத்தக்க ஆதரவு பலத்தை இழக்க நேரிடும்.

இது மகிந்த கடந்த தேர்தலில் தோற்கின்ற நிலையிலும் பாரியளவில் தோற்கவிடாமல் தடுத்த சிங்கள வாக்குகளில் பெரும்பங்கு வாக்குகளை கோட்டா இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளும்.

சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி களமிறங்கும் போது அடித்தளமே ஆட்டம் காணுகின்ற நிலையை உருவாக்கும்.

அது ஒருபுறமிருக்க, கடந்த தேர்தலில் மகிந்தவை பௌத்த மத காவலனாகவும் மைத்ரியை மேற்கத்தியத்தின் ஏnaன்டாகவும் பார்த்த சிங்கள கடும்போக்குவாதிகள்,

சயித் வேட்பாளராக வருகின்ற நிலையில் அந்த மனப்பதிவிலிருந்து விடுபட அல்லது அமைதியடைய வேண்டிய நிலைக்கு வருவர்.

ஏன்எனில், சapத் மீது மட்டுமல்ல அவரது தந்தை பிரேமதாச மீதும் சிங்கள பௌத கடும்பார்வை என்றும் திரும்பியதில்லை என்பதே வரலாறு. எனவே, கோட்டாவிற்கு பௌத்த கடும்போக்குவாத முன்தள்ளு வாக்குகள், மகிந்தவிற்கு கிடைத்ததை போன்று கிடைக்காது என்பதை இப்போதே அவதானிக்கலாம்.

சிறுபான்மையை பொறுத்தவரை, ஈசுடர் குண்டுவெடிப்பிற்கு பின்னர் முசுலிம்களின் உடமை, உயிர், வர்த்தக மையங்கள், மத தலங்கள் என்பவற்றின் மீதான தாக்குதலின் பின்னணியிலும், முசுலிம் விரோத பிரச்சாரத்தின் பின்னணியிலும் மகிந்த அணியின் கை நேரடியாகவும் மறைமுகமாகவுமிருந்த விடயம் தொடர்பில் எசு எல் பி பி யின் வேட்பாளரை ஆதரிக்க முனைய மாட்டார்கள். அதே நேரம், கோட்டாவின் பௌத்த கடும்போக்குவாத பின்னணி மற்றும் இராணுவ கையோங்கல் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு அந்தப்புறம் திரும்பி பார்க்காத மனநிலையில் இருப்பார்கள்.

தமிழர்களை பொறுத்தவரை அன்மைக்காலமாக அதிகரித்துவரும், இந்து கோயில்களை தகர்த்தல், தமிழர் மரபுவழி நிலத்தில் விகாரை அமைத்தல், கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி சிலை நிறுவுதல் என்பவை தொடர்பில் மிகவெறுப்புற்ற நிலையில் இருக்கிறார்கள்.

இது வடக்கிலிருந்து மலையகம் வரை பரவியுள்ளதை நாம் அறிவோம். இந்நிலை கோட்டா சனாதிபதியானால் இன்னும் அதிகரிக்கும் என்ற மனப்பதிவு பரவலாக இருப்பதையும் நாம் அறியலாம்.

மேலும், கோட்டாவும் மகிந்த அணியும் அதிகாரப்பரவலாக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதும், இலங்கையில் சிங்கள மக்கள்தான் முன்னுரிமையுடையவர்கள் மற்றவர்கள் தங்கி இருப்போரே என்ற கருதுகோளுடையவர்கள் என்பதால் வட - கிழக்கு தமிழர்கள் கோட்டாவை விரும்பவே விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறான காரணங்களை கோர்த்துப் பார்க்கும்போது;

கடந்த தேர்தலில் மகிந்தவிற்கு எதிராக அளிக்கப்பட்ட சிறுபான்மை வாக்குகள் கோட்டாவிற்கு ஆதரவாக அளிக்கப்படாத நிலையில்

கடந்த தேர்தலில் மகிந்தவிற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட சிங்கள வாக்குகள் சயித்திற்கும் பெருமளவில் பங்கிடப்படுகின்ற நிலையில்

சிங்கள கடுப்போக்குவாதிகள் சயித்தின் வருகையால் அமைதியாக்கப்படுகின்ற நிலையில்

கடந்த தேர்தலில் மகிந்த பெற்ற 58% சிங்கள வாக்குகளில் 10% (5,00,000) வீதத்தை மட்டும் சயித் உடைத்தாலும் கோட்டாவை மண்கவ்வ செய்யலாம் என்பது நிரூபனமாகிறது.

ஏன் 10% என இங்கு கூறப்படுகிறது எனில், கடந்த தேர்தலில் சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒரு 5,00,000 குறைந்தாலும் - அதனை ஈடுசெய்ய 10% சிங்கள வாக்குகளை உடைக்கும் இயலுமை சயித்திடமிருக்கின்றது என்பதை காட்டுவதற்கேயாகும்.

ஆனால் ???? சயித் வேட்பாளர் ஆக வேண்டுமே.

ஏ.எல். தவம்

மு.மா.ச.உ

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.