குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

விசயநகர நாயக்கர் காலமும் இலக்கியங்களும் பண்புகளும்.

சுருக்க குறிப்புக்கள்

14 -18ம் நூற்றாண்டுவரையான காலம்

விஜய நகர மன்னரும், நாயக்கர் மன்னரும் ஆட்சி செய்தமையால் நாயக்கர் காலம் எனப்படுகின்றது.

இலக்கிய வடிவங்கள்

புராணங்கள்

1. புராணம்

2. காவியங்கள்

3. சிற்றிலக்கியங்கள்

4. தனிப்பாடல்

5. சித்தர் பாடல்

6. பொது மக்கள் இலக்கியங்கள்

7. இலக்கணநூல்கள்

8. பொது மக்கள சார் நூல்கள்

9. ஏனைய நூல்கள்

 

புராணங்கள்

1. திருவிளையாடல் புராணம்

2. கூர்மபுராணம்

3. காசிகாண்டம்

4. சேதுபுராணம்

5. திருப்பரங்கபுராணம்

 

காவியங்கள்

1. வில்லிபாரதம்

2. நைடதம்

3. பிரபுலிங்கலீலை

 

சிற்றிலக்கியங்கள்

• உலா - திருவாருலா, திருவாணைக்கா, ஏகாம்பரநாதர், மதுரை சொக்கநாதர், திருகைலாய நாதர்

• கலம்பகம் - காசி, தில்லை, கச்சி, திருவாபத்தூர், புல்லிருக்கும் வேலூர்,

 

திருவரங்க கலம்பகம்

• பிள்ளைத்தமிழ் - மீனாட்சி அம்மன், முத்துகுமார

• பரணி – மேகவதை, அஞ்ஞைவதை, பாசைவதை

• நாண்மணிமாலை – நால்வர், திருவாரூர்

• மும்மணிக்கோவை – பண்டார, சிதம்பர, நம்பெருமாள்

• தூது – சிவஞானபாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது

• சதகம் - தொண்டைமண்டல சதகம்

• அந்தாதி – நீரோட்டயமாக, திருவரங்க

 

தனிப்பாடல்

• தயுமானவர், தந்துவராயர், காலமேகர், இரட்டையர் போன்றோரின் வசைகவி, சிலேடைக்கவி என்பன தனிப்பாடல்களில் உள்ளடங்கும்.

சித்தர் பாடல்கள் - பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

 

பொதுமக்கள் சார் இலக்கியங்கள்

 

• முக்கூடற்பளள்ளு

• திருக்குற்றாள குறவஞ்சி

• நொண்டி நாடகம்

 

இலக்கண நூல்கள்

• மாரகபொருள் மாரணலங்காரம்

• சிதம்பர பட்டியல்

 

• இலக்கண விளக்கம்

 

உரை நூல்கள்

1. தொல்காப்பியம்

2. பத்துபாட்டு

3. கலித்தொகை

4. குறுற்தொகை

5. சீவக சிந்தாமனி

6. சிலப்பதிகாம்

7. திருக்குறள்

8. திருவாய் மொழி உரை

9. திருவாய் மொழி

10. திருபள்ளி எழுச்சி

11. திருவந்தாதி

12. திருமொழி

13. 4000 திவ்ய பிரபந்தம்

14. திருவாய் மொழி

15. திருபாவை

16. அமலன் அதிபிரான்

17. கண்ணிநூண்சிறுதாம்புரை

18. கடவுள் நிர்ணயம்

19. ஆத்ம நிர்ணயம்

20. தத்துவக் கண்ணாடி

21. இயேசுநாதர் சரித்திரம்

 

ஏனைய நூல்கள்

1. திருபுகழ்

2. கந்தரழங்காரம்

3. கந்தரனுபூதி

4. வேல்விருத்தம்

5. மயில்விருத்தம்

6. திருவகுப்பு

7. நீதி விளக்கம்

8. சகலகலாவள்ளிமாலை

9. அட்டபிரபந்தம்

 

நாயக்கர்கால இலக்கிய பண்புகள்

 

1. பழமை போற்றுதல்

2. சமய சார்புடையவை

3. தத்துவ சார்புடையவை

4. சிற்றிலக்கியங்கள் தோற்றம்

5. தமிழ் உரைநடை வளர்ச்சி

6. வித்துவச்செருக்கு பாடல்கள்

7. இலக்கிய திறனாய்வின் முன்னோடி

8. சமய எதிர்ப்பு பாடல்கள்

9. ஒரு பொருளை பாடும் மரபு

10. இறையடியாரை போற்றி பாடும் மரபு

11. உலகியல் வெறுப்பு தலைதூக்கியக் காலம்

12. சிலேடை பாடல்கள் தோன்றிய காலம்

13. வடமொழி செல்வாக்கு

14. சந்தத்தை போற்றும் பாடல்கள்

15. எவ்வித பொருளும் இல்லாத பாடல்கள்

16. செய்யுள் மரபு

17. பொதுமக்கள் சார் இலக்கியங்கள்

18. நிந்தஸ்தூதிய பாடல்கள்

19. புராணங்கள் இயற்றப்பட்டமை

 

பொதுமக்கள் சார் இலக்கியங்களின் பண்பு

 

சாதாரன அடிநிலை மக்களின் வாழ்க்கை கோலங்கள், விருப்பு வெருப்புகள் முதலிய உணர்வுகளை சித்தரிப்பதாக உள்ளது.

இக்கால பொதுமக்கள் சார் இலக்கியங்களாக முக்கூடற்பள்ளு, குற்றால குறவஞ்சி, நொண்டி நாடகம், சித்தர் பாடல்கள் என்பனவாகும்.

இசைப்பண்பு, நாடகப்பாங்கு, சமய நம்பிக்கைகள், நாட்டார் பாடல்தன்மை, அதீத காமச்சுமை நகைச்சுவை, சிறுங்காரச்சுவை முதலியவற்றை உள்ளடக்கியது.

சாதாரன மொழிநடை, சிலேடை அணி பயன்பாடு, சொற் சாதூரியம் கொண்டது.

இக்கால புலவர்களை மக்கள் ஆதரித்தனர் எனவே தம்மை ஆதரித்த மக்களை புலவர்கள் புகழ்ந்து பாடத் தொடங்கினர்.

இக்காலப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது எனவே நாட்டை காக்க வேண்டியவர்கள் விவசாயிகளாக இருந்தமையால் அவர்களின் புகழ் பாடக்கூடிய இலக்கியங்கள் தோன்றலாயின.

பொது மக்கள் சார் இலக்கியங்களில் கவிச்சிறப்பு இல்லாமல் வரட்சியே காணப்பட்டது.

விருத்தப்பா கட்டளைகளித்துறை, சிந்து, கண்ணி என்பன பொதுமக்கள் சார் இலக்கியங்களை படைக்க பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக குறவஞ்சி, பள்ளு இவ் இலக்கியங்கள் சாதி சமத்துவத்தை வற்புறுத்துவதாக அமைகின்றது.

 

• குறவஞ்சி - இறைவன் உலா போகும் அவனைக் கண்ட பெண் ஒருத்தி மயக்கமடைகின்றாள். அவளுக்கு குறத்தி ஒருத்தி குறி சொல்லும் செய்தியை இது விளக்குகின்றது.

குற்றால குறவஞ்சி – ஆதீத காமச்சுவை, எளிமை, சிறுகாரம், சொல்லழங்காரம் உயர்வு நவிற்சி அணி முதலியன பயன்படுத்தப்பட்டுள்ளது.

• சித்தர் பாடல்கள் -

 சமூக எதிர்ப்பை வெளிக்காட்டுவன. “ நட்டக்கல்லை தெய்வமென்று நாளு புஸ்பம் சாத்தியே சுற்றி வந்து மாடமொட என்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டக்கல்லும் பேசுமோ”

 

 எளிமை மிக்கது “ பரச்சி யாவது ஏதடா, பணர்த்தி யாவது ஏதடா இறைச்சி தோல் எழும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோடா?

 இராமசந்திர கவிராயர் - “ கல்லாத ஒருவனை கற்றான் என்றேன், காடாலும் மரபனை நாடாளும் என்றேன், போர் முகத்தை அறியானை நான் புலியன் என்றேன், மல்லாரும் புயம் என்றேன் ஆம்பல் தோலை, வழங்காத கஞ்சனை நான் வல்லன் என்றேன்”

 

நாயக்கர் காலம் வரண்டகாலம்

 

» இக்காலத்தில் அரசியல், பொருளாதார சமூக ஸ்த்தீர தன்மை அற்றநிலை காணப்பட்டமை

» நாயக்கர் காலத்தில் பேரரசுகள் வீழ்ச்சிகண்டு சிற்றரசுகள் தோற்றம் பெற்றமை

» தமிழர் ஆட்சி இல்லாமல் போய் அந்நியரின் ஆட்சி ஏற்படல்

» கலை, இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு இல்லாது போனமை

» புலவர்கள் ஆதரிக்கப்படாமை

» நாட்டில் பஞ்சம் தலைதூக்கியமை

» கருவரட்சி, சொல்வரட்சி, கற்கனை வரட்சி, முதலியன நாயக்கர் காலம் ஒரு வரண்ட காலம் என்பதனை தெளிவுருத்துகின்றது.