குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

தைப்பொங்கலின் அடிப்படையும் இன்று தமிழ்ப்புத்தாண்டும்.

09.07.2019-தமிழரின் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய உரையாடல் மிகத்தேவையானது. அது தமிழர்களின் தைப்பொங்கலை அடிப்படையாகக்கொண்டது. தைப்பொங்ல் எல்லா வீடுகளிலும் நிகழும். சித்திரை ப்பொங்கல் எல்லாராலும் பொங்கப்படு வதில்லை ஆனால் கோயில்களில் கட்டாயம் பொங்குவார்கள். எடுத்துக்காட்டு எங்கள் வீட்ல் சித்திரைப் பொங்கல் இல்லை.குலதெய்வமான எங்கள் அம்மன் கோயிலில் பொங்கல் வைப்போம்.

தைப் பொங்கலானது விளைபொருளின் மகிழ்வுடனும் தொடர்புடையது அதனால் விளையக்காரணமான கருவிகளுக்கு நன்றி செலுத்தும் உணர்வும் இதில் அடிப்படையானது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் நோக்கம் உள்ளது இதிலும் அடிப்படை நன்றியுணர்வு. இது தமிழர்பண்பாட்டில் முக்கியமான ஒன்று.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு கதிரவனுக்கு நன்றி செலுத்தல் தமிழரின் நடுகல்படையலுக்கமைய பொங்கல் படையல் பின் கூடி மகிழந்துண்ணல் என்பன நிகழ்ந்துள்ளன நிகழ்கின்றதது தொடர்கின்றது.

தைப்பொங்கல் எல்லாவித உற்பத்தி செய்வோரும் பொங்குவர் மீனவர்களும் கடற்கரையில் தோணிகளுக்கு முன்னால் தொணிக்கும் கடலுக்கு மாக ப்பொங்குவர்கள்.

மற்றதுதமிழர்களின் தைப்பொங்கலுக்கு பிற்காலத்தில் தான் பானைக்கும் அடுப்பிற்கும்குறி பொட்டு வைத்து சமயமாக்கப்பட்டது. உழவர்நிகழ்வாகசாதியமாக்கபபட்டது. கம்மாலையிலும்பொங்குவர் மரக்கலையிலும்பொங்குவர் கடையிலும் பொங்குவர் அப்படியென்றால் எல்லாத் தொழிலாளர்களும் பொங்குவர் எனவே தமிழரரில் உயர்ந்தவர்கள் தமதாக்கியமை பின் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு சான்றுகளும் நடைமுறையில் தெரிகிறது.

இந்த தமிழ்ப்புத்தாண்டு பற்றிய தமிழரல்லாதரின் உரையாடல்களையும் தமிழர்களின் உரையாடல்களையும் பார்த்தேன். தமிழர்களில் பலமதங்களைக்கைகொண்டாலும் மொழி ஒன்று ஆண்களும் பெண்களும்உடைமுறைகளும் பெரும்பாலும் ஓராளவு ஒருமைப்பாடுஉண்டு. பிராமண ஆண்களும் பெண்களும் ஐரோப்பாவில் புலம்பெயரந்தாலும் தமது உடைமுறையில் உடுக்கின்றார்கள் அவர்ள் தமிழை விட சமசுகிருத மொழியயை கடவுளுக்கு நிகராக நேசிப்பவர்கள் அவர்கள்வழியினர் தமிழ்ப்புத்தாண்டுபற்றி பேசுவது சிரிப்பாக இருகின்றது.

சிறு தெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாடு பற்றிய உரையாடல் நன்று. எல்லாரும் அதை வைத்து எண்ணினால் எல்லாம் எல்லாம் புரியும்.

தமிழர்நிலங்களுக்குள் வாழ வந்தவர்களால் அப்படி ஆனது.அந்த ஐயா எழுந்தமானங்களைப்பேசுகின்றார்.

 

நான் இந்து நாகரீகபாடம் யாழ் இந்துக்கல்லுரியில் கற்றவன். கைலாசநாதக்குருக்களால் பாடத்திட்டங்கள் தொகுக்கப்பட்ட கல்விமுறையில் உருவானது அதில் திருமதிப்பிற்குரிய வித்துவான் சொக்கன் அவர்களிடமும் பிரபல ஆசிரியர் சிவராமலிங்கம் போன்றவர்கள் இத்தலைப்புகளை கற்பித்துள்ளார்கள் சிறுதெய்வவழிபாடு -பெரும்தெய்வவழிபாடு என்று வேறு வேறுதலைப்பில்தான் எனவே ஆரியவழிவந்தவர்களால் பிரித்து வைக்கப்ட்டது அதை இரண்டாம் நிலையாக்கியதும் பெரும்தெய் வங்களென்றாக்கியதும் பிராமணியம் தான் தமிழர்கள்ஏமாந்து ஏற்றுநிற்கின்றார்கள். தமிழர்கள் சமயத்தைப்பிரிக்காமல்பார்ப்பது தவறில்லை அடுத்தவர் மதமுறைகளை தமதுமுறையென நம்பி தலைமேல் துாக்கிப்பிடிப்பது பெரும்தவறு.

வருசம் என்ற சொல்லே தமிழ் இல்லை வருச என்ற வடசொல்லைத் தமிழாக்க வருடம் என்றாக்கினார்கள் அப்படியென்றால் வை இ ஆர் இயரரும் தமிழ்தான் என்று வாதம் வைக்கலாமா என ஐயாவிற்கு வாதம் வைக்கலாம். தைப்பொங்கலின் அடிப்படை நன்றி உணர்வு அடுத்து கூடிக்கொண்டாடுதல் 25 வருமசம் வெள்ளி என்று எவரும் கற்கவில்லை 50 வருடம் பொன்விழா என்று எவரும்கற்க வில்லை ஆண்டு ஆண்டு என்றே கற்றோம் எனவே புதிய + ஆண்டு = புத்தாண்டு இதுதான் தமிழ் வருடம் தமிழ் இல்லை வருச என்ற சமசுகிருத அடியில்வந்தது.

கலை+ ஆச்சாரம் = இதைத்தமிழ் என்ற முக்கி முக்கி கலச்சாரம் கலாச்சாரம் என்று தமிழ்ப்பற்றாளர்கள் அதிகம். தவறாக இறுகியகற்கள் தவறாகவே இருக்கும் இறக்கும் வரை இருக்கும். அவர்களுக்கு எங்கள் வலுவை இழத்தல் வீண் புதியவர்களுக்கு சரியானதைச் சொல்லி பதியவைத்து பயனடைவோம்.