குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .

இந்தியா டில்லியிலும் மத்திய அரசசபையிலும் புறநானுாற்று பாடலை எடுத்துக்காட்டாகக்கொண்ட நிதி அமைச்சர்

நிர்மலா உலகிற்கே அறிவுசொன்னது தமிழ்தான். 06.07.2019-பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் கூறிய அறிவுரைப்பாடலை (புறம் : 184) மேற்கோள் காட்டி அம்மையார் நிர்மலா தம்முடைய நிதி நிலைஅறிக்கையில் பேசினார்.

 

அந்தப்புறநானூற்றுப் பாடலின் (புறம் : 184) திரண்ட கருத்து:

=ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அங்கு

விளைந்த நெல்லை கவளம் கவளமாக யானைக்கு

ஊட்டினால் அது பல நாட்கள் வரும் .

யானையும்பல நாட்கள் பசியடங்கி இன்பமடையும்.

அப்படி இல்லாமல் யானை தன் போக்கில் வயலில்

புகுந்து தின்றால் அது உண்ட நெல்லை விட

வீணாகும் நெல்லே அதிகமாகும்.

அது போல அறிவுடைய வேந்தன் அறமுறைப்படி

மக்களிடம் வரி முதலியவற்றை வசூல் செய்து

ஆட்சி புரிந்தால் நாடு செழிக்கும் செல்வம் குவியும் .

அதை விடுத்து அமைச்சர்களின் தவறான வழிகாட்டுதலின்படி வரைமுறையில்லாமல்

குடி மக்களிடமிருந்து வரி வசூல் செய்வானானால்

அது நாட்டிற்குக் கேட்டையே விளைவிக்கும் =

,,,,,,,,,