குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, புரட்டாசி(கன்னி) 22 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ் வாழ வாழ்வோரைத் }{ தமிழினம் வாழ்த்தும்!

05.07.2019-சென்னை 'தமிழ்மண் பதிப்பக' நிறுவநர்

கோ. இளவழகனார் 72ஆம் பிறந்தநாள் 07 , 3 ( 1948 )

தமிழ்மண் பதிப்பகத்தின் வழி , பழந்தமிழ்

இலக்கியச் செல்வங்களைத் தொடர்ந்து

வெளியிட்டுத் தமிழுக்கு வளம்சேர்த்து

வருபவர் கோ. இளவழகனார்.

தமிழ்அறிஞர்கள் நூல்கள் அனைத்தையும்

முழுமுழுத்தொகுப்பாகப் பெரும்பொருட்

செலவில் வெளிக்கொணர்ந்துள்ள

அரியசாதனை இவரின் தனித்தன்மை!

 

கடந்த ஆண்டு சென்னை கண்ட வெள்ளம்

இவர் பதிப்பித்த நூல்களை விழுங்கிப்

பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது.

 

மனவுறுதியே கைப்பொருளாக மீண்டும்

பதிப்புத்துறையில் இப்போது ஈடுபடத்

தொடங்கிவிட்டார்.

 

நூற்றாண்டு விழா காணும் அறிஞர்கள்

க.வெள்ளைவாரணனார்,

வ.சுப.மாணிக்கனார் நூல்கள்

அனைத்தையும் இப்போது வெளிக்

கொணர்ந்துள்ளார்.

 

தனித்தமிழியக்க நூற்றாண்டு விழாவை

யொட்டி , மறைமலையடிகளார் நூல்கள்

அனைத்தையும் தேடித்தேடி அலைந்து

அச்சேற்றி மலைக்க வைத்தவர் இவர்!

 

மொழிப்பேரறிஞர் தேவநேயப்பாவாணர்

நூற்றாண்டு விழா 2002இல் வந்தபோது

அவரின் அனைத்து நூல்களையும்

பெரும்புலவர் நக்கீரனார் பதிப்பு மேற்

பார்வையில் வெளியிட்ட சாதனை

கண்டு தமிழுலகம் கைகூப்பியது.

 

வாழும் பாவாணராகத் திகழும் மதுரைப்

பெரும்புலவர் இரா. இளங்குமரனார்

படைப்புகள் அனைத்தும் கிடைக்கும்

இடம் தமிழ்மண்பதிப்பகமே!

 

இளங்குமரனார், தி.வே.கோபாலய்யர்

இருவரும் இந்நூற்றாண்டின் தலை

சிறந்த இலக்கணப் பேரறிஞர்கள்.

 

அவ்விருவரின் பல்லாண்டு பட்டறிவுப்

பிழிவான நூல்கள் அனைத்தையும்

தமிழ்மண் பதிப்பகம் வழியாகத் திரு.

கோ.இளவழகனார் தந்துள்ளார். தமிழ்

அறிவுலகம் இந்தப் பெருந்தமிழ்ப்

பணிக்கு என்றும் நன்றி கூறும்!

 

தமிழக வரலாற்று நூல்கள், தமிழிலக்கண

நூல்கள், தமிழ்ப் பேரகராதி நூல்கள்,

தமிழ் அறிஞர்களின் நூல்கள் எனப்

பலவகையான நூல்களையும் கொத்துக்

கொத்தாக வெளியிட்டிருக்கும் பதிப்புச்

சாதனை , தமிழ்பெற்ற பெருவளம்!

 

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1917இல்

எழுதிய கருணாமிருதச் சாகரம் ,கருணா

மிருதச் சாகரத்திரட்டு முதலிய நூல்களை

'தமிழ் இசைக் களஞ்சியம்' என ஏழு

தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

 

பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்

அனைத்தையும் (அச்சேறாதவை உட்பட)

' பாவேந்தம் ' எனும்தலைப்பில் முனைவர்

பேரா.இரா. இளவரசு அவர்களின் பதிப்பு

மேற்பார்வையில் 25 தொகுதிகளாக

அழகிய பதிப்பாய் வெளியிட்டுள்ளதை

உலகமே கொண்டாடுகிறது.

 

தமிழ்நூற் காப்புப் பணியுடன் தமிழீழப்

போராட்டங்களிலும் தமிழினக் காப்புப்

பணிகளிலும் களப்பணியாளராகத்

தொடர்ந்து இயங்கி வருபவர் இவர்!

 

தஞ்சையில் நிறுவப்பட்டுள்ள முள்ளி

வாய்க்கால் நினைவு முற்றம் , இவர்

உழைப்பை என்றும் சொல்லும்! அங்கு

இடம் பெற்றுள்ள தமிழறிஞர்களின்

படவரிசை, இவர் தேடித்தேடித் தொகுத்த

பேருழைப்பின் பெரும்பயன்!

 

சென்னை வரும் உலகத்தமிழர்கள்

மறவாமல் வந்து செல்லும்

இடமாகி விட்டது தமிழ்மண்பதிப்பகம்.

(2 ,சிங்காரவேலர் தெரு, தியாகராயநகர்,

சென்னை 17. தொடர்பு எண்கள்:

044 2433 9030, 94444 10654 )

 

எழுபத்திரண்டாம் பிறந்தநாள் (3.7.2017)காணும்

' தமிழ்மண்பதிப்பகம்' கோ. இளவழகனார்

தமிழ்வாழ்வு தழைக்க வாழ்த்துவோம்!.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 

கோ. இளவழகன் (சூலை 3, 1948) தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர். இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறைக்குச் சென்றவர். தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர். சங்கத்தமிழ் நூல்கள், வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதி நூல்கள் எனப் பலவகையான நூல்களை தனது தமிழ்மண் பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்தும் வெளியிட்டும் வருகிறார்.

 

பிறப்பும் இளமையும்

 

இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள உறந்தைராயன் குடிக்காடு என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி, தாயார் அமிர்தம் அம்மாள். கல்லூரியில் புகுமுக வகுப்புவரை பயின்றதும் மின்வாரியத்தில் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் அரசுப் பணி ஆற்றினார்.

 

பொதுப் பணிகள்

 

பள்ளி மாணவராக இருந்தபோது 1965 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியில் பங்கேற்று 48 நாள்கள் சிறையில் இருந்தார். தாம் பிறந்த ஊரான உறந்தைராயன் குடிக்காட்டில் 'ஊர் நலன் வளர்ச்சிக் கழகம்' என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். அண்மை நகரான உரத்தநாட்டில் 'தமிழர் உரிமைக் கழகம்' என்னும் இயக்கத்தைத் தொடங்கி மொழி உயர்வுக்கும் இன மேம்பாட்டுக்கும் வினையாற்றினார். தேவநேயப் பாவாணரின் பெயரில் மன்றம் ஒன்றை நிறுவினார். நாடு முழுவதும் மது அருந்தி மக்கள் சீரழிந்த நிலையில் இவருடைய ஊரில் மக்கள் அனைவரும் மது அருந்துவோரைக் கட்டுப்பாடாக இருந்து புறக்கணித்தனர். எனவே அந்தக் காலகட்டத்தில் உரத்தநாடு திட்டம் என்று சட்டமன்றத்தில் பெரிதாகப் பாராட்டிப் பேசப்பட்டது.

 

பதிப்பகப் பணி

 

மின்வாரியப் பணியிலிருந்து ஒய்வு பெற்றதும் தமிழ்மண் பதிப்பகம் என்னும் பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களையும் புதிய படைப்பு இலக்கியங்களையும் பதிப்பித்தார். பல தமிழ் அறிஞர்களின் நூல்களை பென்னம் பெரிய அளவில் தொகுப்புகளாக வெளியிட்டார்.

 

இசைத் தமிழ் நூல்

 

1917 ஆம் ஆண்டில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் அரிய இசைத் தமிழ் நூலை 1995 ஆம் ஆண்டில் தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் வெளியிட்டார். ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் இரண்டாம் நூல், கருணாமிர்த சாகரத் திரட்டு ஆகிய நூல்களையும் சேர்த்து தமிழ் இசைக் களஞ்சியம் என்னும் பெயரில் 7 தொகுதிகளாக வெளியிட்டார். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு அரசின் கல்வித்துறையின் கீழைக்கலை ஆய்வு நிறுவனத்துடன் இவருடைய தமிழ்மண் பதிப்பகம் இணைந்து சங்க இலக்கியங்கள் செம்பதிப்பு வரிசையில் நற்றிணை (3 தொகுதிகள்) குறுந்தொகை (3 தொகுதிகள்) ஆகியவற்றை வெளியிட்டது.

 

குறிப்பிடத்தக்க தொகுப்பு நூல்கள் தொகு

 

தேவநேயப் பாவாணர் --53 நூல்கள் முழுமையும்

கா.அப்பாத்துரை -- 40 க்கும் மேல்

ந.சி கந்தையா --66 நூல்கள்

வெ.சாமிநாத சர்மா --78 நுல்கள்

திரு வி.க -- 54 நுல்கள்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் --24 தொகுதிகள்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் --10 தொகுதிகள்

கவிஞர் முடியரசன் --13 தொகுதிகள்

கவிஞர் பாரதிதாசன் --25 தொகுதிகள்

அவ்வை துரைசாமிப் பிள்ளை --28 தொகுதிகள்

சோமசுந்தர பாரதியார் --5 தொகுதிகள்

இரா.இளங்குமரன் --75 நூல்கள்

புலவர் குழந்தை --15 தொகுதிகள்

இவையன்றி தமிழர் மருத்துவக் களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம், வரலாற்று நூல்கள் ஆகியவற்றைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தி.வே.கோபாலையர் தொகுத்தளித்த தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதிகளாகவும் 165 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி என்னும் மானிப்பாய் அகராதியை இரண்டு தொகுதிகளாகவும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளிவிழாத் தமிழ்ப்பேரகராதியை மூன்று தொகுதிகளாகவும் இளவழகன் பதிப்பித்து வெளியிட்டார்.

 

பிற பணிகள் தொகு

 

மொழிக் காப்புப் பணியுடன் தமிழீழப் போராட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிறுவும் பணியில் முன்னின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

* * * நன்றி : திரு.செந்தலை கவுதமன் * * *

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.