குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

சங்க இலக்கியங்களின் பண்புகள்

சங்க கால மக்களுடைய வாழ்க்கையைப் பொருளாக்க் கொண்டவையே சங்ககால இலக்கியங்களாகும். சங்க கால மக்களுடைய வாழ்வு அக வாழ்வு, புறவாழ்வு என இருவகையில் அமைந்தமையால் சங்ககால இலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என இரு வகையில் அமைந்து காணப்பட்டன. இயற்கையோடு ஒட்டிய சங்ககால மக்களது வாழ்க்கையைப் பொருளாக்க் கொண்ட சங்ககால இலக்கியங்களின் பண்புகளை இங்கே அவதானிக்கலாம்.

சங்ககால இலக்கியங்களின் பிரதானமானதொரு பண்பு அகம், புறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்க கால மக்களுடைய வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இரு நிலைகளில் காணப்பட்டது. ஆதலினாலே சங்ககால மக்களுடைய வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்களும், அகத்திணை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என இருவகையில் அமைந்திருந்தது. அகத்திணைப் பொருள்மரபிலே புணர்தல், பிரிதல், ஊடல், இருத்தல், இரங்கல், கைக்கிளை. பெருந்திணை ஆகிய ஏழும் புறத்திணைப் பொருள் மரபிலே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சித்திணை, பாடாண்திணை ஆகிய ஏழும் காணப்பட்டன. இவ்வாறு அகத்தையும், புறத்தையும் பொருளாகக் கொண்டிருப்பது சங்ககால இலக்கியங்களின் பண்பாகும்.

சங்ககால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு அகத்திணைப்பாடல்கள் பெயர்சுட்டாமை ஆகும். அதாவது சங்ககாலத்திலே தூய காதலை வெளிப்படுத்த பெயர்சுட்டுவதில்லை. அதாவது தலைவன்,தலைவி அகத்திணைப்பாடல்களில் சுட்டப்படுவதில்லை. குறுந்தொகையிலே வருகின்ற ” யாயும் ஞாயும் யாராகியரோ………………….” என்கின்ற பாடலை எடுத்துக்காட்டாகக் காட்டலாம். இவ்வாறாக அகத்திணைப்பாடல்கள் பெறர்சுட்டப்படாமல் காணப்பஃடவதும் சங்ககால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.

சங்ககால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு அகத்திணைப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றுக்களாக காணப்பட, புறத்திணைப்பாடல்கள் புலவர்களின் கூற்றுக்களாக காணப்படுவதால் அதாவது சங்ககால அகத்திணைப்பாடல்கள் தலைவன், தலைவி, தோழி முதலிய பாத்திரங்களின் கூற்றுக்களாக காணப்படுகின்றன ஆனால் புறத்திணைப்பாடல்களோ புலவர்களின் கூற்றுக்களிலேயே அமைந்திருக்கின்றன. இதுவும் சங்ககால இலக்கியங்களின் பிரதானமானாதொரு பண்பாக கொள்ளப்படுகின்றது.

சங்ககால இலக்கியங்களிலே முதல், கரு, உரி ஆகிய மூன்று பொருட்களையும் வைத்து செய்யுள் ஆக்குவதுவும் ஒரு பண்பாக காணப்படுகிறது. முதல் எனப்பட்டது நிலமும், பொழுதும் ஆகும். கரு எனப்பட்டது பறவை, விலங்கு, மரம் முதலியவை ஆகும். உரி என்பது அந்த நிலங்களிலே காணப்படும் ஒழுக்கங்களாகும். உரியைப் பாட வந்த புலவர்கள் முதலையும், கருவையும் துணையாக்கிக்கொண்டார்கள். சங்க கால செய்யுள்களில் முதல், கரு, உரி ஆகிய மூன்று பொருட்கள் அமைத்துப் பாடுவதும் ஒரு பண்பாக அமைகிறது.

சங்க கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு உருபுகள் தொக்குநிற்றல் (மறைந்து நிற்றல்) ஆகும். அதாவது சங்க காலத்திலே சொற்களை சுருக்கி எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனாலே சங்க கால புலவர்கள் உவமை, வேற்றுமை முதலிய உருபுகளை மறைத்து எழுதினார்கள். இதனாலே சங்ககால செய்யுட்கள் சொற்சுருக்கமும், பொருள் செறிவும் மிக்கவையாக காணப்படுகின்றன. உருபுகள் மறைந்து நிற்பதுவும் சங்க கால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.

சங்க கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு குறைந்த எண்ணிக்கையுடைய எழுத்துக்களால் கொண்ட சொற்களைக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்க கால செய்யுட்கள் மூன்று, நான்கு எழுத்துக்களுக்கு மேற்படாத சொற்களையே அதிகம் கொண்டிருக்கின்றன. இவ்வாறு குறைந்த எண்ணிக்கை உடைய எழுத்துக்களைக் கொண்ட சொற்களைக் கொண்டிருப்பதுவும் சங்க கால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.

இக் கால தமிழ் இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு சிறந்த யாப்புக்களைக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்க கால செய்யுட்கள் அகவல், வஞ்சி யாப்புக்களினால் அமைந்திருக்கின்றன. இவ்வாறு சங்ககால இலக்கியங்கள் அகவல், வஞ்சி யாப்புக்களினால் அமைந்திருப்பதுவும் சங்க கால இலக்கியங்களின் ஒரு பண்பாகக் காணப்படுகின்றது.

சங்க கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு துய தமிழில் செய்யுள்கள் அமைந்து காணப்படுவதாகும். அதாவது சங்க காலப் பகுதியிலே வட நாட்டார் வருகை காணப்படவில்லை. ஆதலினால் வடமொழி இக் காலத்தில் கலந்திருக்கவில்லை. எனவே, இக் காலப்பகுதியில் பிறமொழி கலப்பு இன்றிய தாய தமிழிலேயே செய்யுள்கள் தோன்றின. இவ்வாறு தாய தமிழில் செய்யுள்கள் அமைந்திருப்பதுவும் சங்ககால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.

சங்க கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு தனி நிலைச்செய்யுட்கள் ஆக்க்காணப்படுவதாகும். அதாவது ஒருதிணைப்பொருளை ஒருபாடலில் காட்டுவதாக அமைந்திருக்கும். சங்ககாலத்தில் தோன்றிய செய்யுட்களில் தனிநிலைச்அசய்யுட்களாக அமைந்திருந்தன. இவ்வாறாக தனிநிலைச்செய்யுள் அமைப்பில் காணப்படுவதும் சங்க்கால இலக்கியங்களின் பண்பாகக் காணப்படுகிறது.

சங்க கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் ஆகியவற்றைக்கையாள்வதாகும். வெளிப்படையாக கூறமுடியாத ஒன்றை குறிப்பிலால் உணர்த்துவதாக இது அமைந்திருக்கும் சங்ககாலஇலக்கியங்கள் சாதாரண உவமை அணி, உருவக அணி மட்டுமன்றி உள்ளுறை இறைச்சிப்பொருள் ஆகியவற்றை புலவர்கள் அதிகம் கையாண்டார்கள். இவ்வாறாக உள்ளுறை இறைச்சப்பொருளை அதிகம் கையாள்வதும் சங்சங்க கால இலக்கியங்களின் பண்பாகும்.