குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 15 ம் திகதி புதன் கிழமை .

பூநகரியின் பொருளாதாரத்தை பாதிக்கும் நீராதாரம். ஒதுக்கப்பட்ட700 மில்லியன் ரூபா நிதி எங்கே போனது..?

30.06.2019-பூநகரி மக்களை பொறுத்த வரையில் அவர்களின் பிரதான தொழிலாக நெற்செய்கை காணப்படுகிறது இந்த நெற்செய்கையின் மூலம் ஆட்டக்காறி, மொட்டைக் கறுப்பன், பச்சைப் பெருமாள் போன்ற பிரபல்யமான நெல்லினங்களும் இதைவிட இன்னும் பல நெல்லினங்களும் இங்கு விளைவிக்கப் படுகின்றன.

இப்பேர்ப்பட்ட சிறப்பான நெல்லினங்களை விளைவிக்கக் கூடிய பூநகரி மண்ணில் வருடத்தில் இரண்டு போகங்களும் நெற்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் இருப்பது கவலைக் குரிய விடயமாகும்.

பூநகரி வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் காலபோகச் செய்கை சிறப்பாக செய்கை பண்ணப் படுகின்ற போதிலும் சிறுபோகச் செய்கை என்பது பூநகரி வடக்கு மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது அதற்கு காரணம் பூநகரி வடக்கில் நீரை தேக்கி வைக்கக் கூடிய பாரிய நீர் ஆதாரம் ஒன்று இல்லாமையே ஆகும்.

பூநகரி வடக்கு மக்களின் சிறுபோகச் செய்கைக்கான நெடு நாள் கனவை நனவாக்கும் நோக்குடன் 2012 ஆம் ஆண்டு மாளாப்பு, கொக்குடையான் போன்ற பத்து சிறிய குளங்களை இணைத்து பாரிய நீர் ஆதாரம் ஒன்றை உருவாக்கும் திட்டம் கமக்கார அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைய முன் வைக்கப்பட்டாலும் 2016 ஆம் ஆண்டு தான் அதற்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்தும் முகமாக இந்திய நிபுணர் குழுவினால் 15 மில்லியன் ரூபா செலவில் திட்ட மதிப்பீடு ஒன்று செய்யப் பட்டது இந்த முயற்சி தங்களின் கனவை நனவாக்கும் இரண்டாவது முயற்சியாகும் என்று மக்கள் நம்பினார்களே தவிர அத்தோடு அவர்களின் கனவு கலைந்துவிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டு இந்த வருடத்துடன் நான்கு வருடங்கள் ஆகின்றது எனினும் குறித்த திட்டம் இன்று வரை கிடப்பில் இருக்கின்றதா..?

இல்லை கைவிடப்பட்டுள்ளதா...? அவ்வாறு கிடப்பில் இருக்கும் ஆயின் அதை முன்னெடுத்துச் செல்ல என்ன காரணி தடையாக இருக்கின்றது என்பதையும் 15 மில்லியன் ரூபா செலவில் திட்ட மதிப்பீடு செய்யப் பட்ட பின் இடைநிறுத்தப் பட்டிருக்குமாயின் அதற்கான காரணத்தையும் அறிய பூநகரி வடக்கு மக்கள் ஆவலாக உள்ளனர்.

பல தடைகளையும் தாண்டி இந்தப் பெருங்குளமான பூநகரிக் குளம் அமைக்கப் படும் ஆயின் பூநகரி வடக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் சடுதியாக உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பூநகரிக்_குளம்

கைiலநாதன்.அன்பரசன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.