குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

பூநகரியும் நீர்ப்பற்றாக்குறையும்.கைiலைநாதன்.அன்பரசன்

28.06.2019-பூநகரியில்  பத்தொன்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 24000 இற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு வாழும் மக்களின் பிரதான தொழிலாக நெற்ச்செய்கை காணப்படுகின்ற போதிலும் மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்களும் இங்கு உள்ளனர்.

பூநகரியை நில அமைப்பின் அடிப்படையில் வடக்குத் தெற்காக பிரித்து நோக்கினால் பூநகரி வடக்கு தெற்க்கைக் காட்டிலும் நன்நீர் இன்மையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பாக காணப்படுகின்றமையால் இங்குள்ள மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியிலும் வேறு கிராமங்களில் இருந்து உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்படும் நீரை விலைகொடுத்து வாங்கித்தான் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

பல்வேறுபட்ட சிறிய குளங்கள் காணப்படுகின்ற போதிலும் மாரிகாலங்களில் அவற்றில் தேக்கிவைக்கப் படுகின்ற நீர் வருடம் முழுவதும் இங்கு வாழும் மக்களின் குடிநீர் தேவை தவிர்ந்த இரத தேவைகளையும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதியதாக காணப்படவில்லை இதன் காரணமாக வருடத்தின் ஆடி ஆவணி புரட்டாதி போன்ற அதிக வெப்பம் நிலவுகின்ற காலங்களில் குடிநீர் தவிர்ந்த இரத தேவைகளுக்கான நீரையும் கால்நடைகளுக்கான குடிநீரையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுவது பூநகரி வடக்கு மக்களின் துர்ப்பாக்கியம் ஆகும்.

இரணை மடுவில் இருந்தான பூநகரிக்கான குடிதண்ணீர் வினியோகம் மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனினும் பூநகரி வடக்கின் ஒரு சில கிராமங்களில் நீர் வினியோகத்திற்கான குழாய் பொருத்தும் பணி இடம்பெறாமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் உண்டு பண்ணி இருப்பது கவலைக் குரிய விடயமாகும்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டியது துறை சார்ந்த அதிகாரிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தலையாய கடமையாகும் எனினும் குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இவை எல்லா வற்றையும் கடந்து இரணை மடுவில் இருந்தான நீர் வினியோகம் பூநகரி மக்களின் அன்றாட தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடமும் அனைத்து மக்களிடமும் உள்ளது.

கைiலைநாதன்.அன்பரசன் 28.06.2019

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.