குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழகத்தமிழர் வாயில் -Omelette ஆம்லெட்டா சார்...

27.06.2019-இரண்டாயிரத்தாம் ஆண்டு அளவில் மலேசியாவிலிருந்து தமிழ்ப்புனல் ஐயா மணிவெள்ளையனார் அவர்களின் தலைமையில் நானும் தமிழ்நெறிக் கழக மூத்த பொறுப்பாளர்களும் தமிழ் நாட்டிற்கு தமிழியல் நோக்கில் செலவு மேற்கொண்டிருந்தோம். அச்செல்கை தொடர்பாக இனிய அறிவார்ந்த நினைவலைகள் பலவற்றை வரலாறாய் எழுதலாம். தமிழ்நாட்டிற்கு அதுவே என் முதற்செலவாகும். சென்னையில் ஓர் உணவகத்தில் நண்பகல் உணவுக்காய்ச் சென்றமர்தந்தோம்.

கடையின் பணியாளர்கள் உணவு அளிப்பாணை எடுத்தனர். நான் சோறு சொல்லிவிட்டு மேங்கறியாக பொரித்த முட்டை வேண்டும் என்றேன். அளிப்பாணை எடுத்த பணிப்பையன்...விளங்காமல் திருதிருவென விழித்தான். பின்னர் அது இங்கே இல்லை எனக் கூறிவிட்டான். நானும் ஓ அப்படியா எனக் கேட்டு விட்டு அமைதி அடைந்து விட்டேன் .

சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவருக்கு நான் கேட்ட பொரித்த முட்டையை அப்பையன் எடுத்துச் சென்றதைக் பார்த்தேன். என்னிடத்து இல்லை என்றவன் இப்பொழுது யாருக்கோ கொண்டு செல்கிறானே என அதிர்ந்து அப்பையனை அழைத்து என்னபா பொரித்த முட்டையை இல்லை என்று கூறிவிட்டு இப்பொழுது யாருக்கோ எடுத்துச் செல்கிறாயே என்று கேட்டேன். அவன் உடனே ஓ.. ஆம்லட்டா சார் என்றான்... அதைக் கேட்டு... ஒரு பக்கம் மன்த்துன்பமும் மறுபக்கம் சீற்றமும் வந்தது.

 

தமிழகத்து மக்கள் பொரித்த முட்டையைக் ஆம்லட் என்று சொல்வார்கள் என்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன்..

 

... இச்சொல் இலத்தின் மொழியிலிருந்து பிரஞ்சுக்குச் சென்று பின்னர் ஆங்கிலத்தில் திரிந்தது.

 

Omelette

 

The word omelette, also spelled omelet, is quite the scrambled word. First served up in English in the early 1600s, omelette comes directly from the French omelette. The French omelette derives from an older form, amelette, whose L and M were flipped (in a process called metathesis) from alemette. Alemette, in turn, is from lemelle, meaning “little blade.”

 

The flat egg dish, so it goes, was thought to resemble the blade of a small knife or sword. And you thought you made a killer omelette.

 

French speakers probably mistook la lemelle, “the blade,” as l’alemelle, as if the word started with A as opposed to L. So, today, “the omelette” in French, or l’omelette, literally means “the the little blade.”

 

The French lemelle, in turn, comes from the Latin lamella, a diminutive of lamina, which named various things with thin, flat layers like “plate,” “blade,” or “money,” given the shape of coins. English rolled out lamina into the verb laminate, which meant “to beat into thin layers” in the 17th century before taking the 20th century synthesized its various modern meanings.

 

Lamella >lemele >alumele > alumette >amlette >omelette

 

என இச்சொல் ஆங்கிலத்தில் மருவியதாக குறிப்புகள் காட்டுகின்றன .

 

மேற்கண்ட விளக்கம் சிறு தகடு ( little blade) , மெல்லிய இழை என இதன் பொருளைத் தெளிவிக்கின்றது.

மெல் எனும் மென்மைப்பொருள் இதற்குப் பொருந்தும். சிறுத்தது மெல்லிதாகும். மெல்லடை சுருக்கச் சொல்லாகவும் இருக்கும்.

 

மலேசியாவில் மக்கள் வழக்கிலேயே பொரித்த முட்டை அல்லது

முட்டைப் பொரியல் என்பார்கள். இஃது இங்கு இயல்பு வழக்காகவே உள்ளது. ஆனால் தமிழகத்துத் தமிழன் வாய்...... ஆம்லட் என்கிறது ..

 

இரா. திருமாவளவன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.