குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 19 ம் திகதி சனிக் கிழமை .

பேராசிரியர் வித்தியானந்தன்

26.06.2019-சு. வித்தியானந்தன் (மே 8, 1924 - சனவரி 21, 1989) ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நண்பர்களாலும் அவரது மாணவர்களாலும் 'வித்தி' என அழைக்கப்பட்ட பேராசிரியர், யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியத்தின் மகனாகப் பிறந்தார். தாயார் பெயர் முத்தம்மா. வீமன்காமம் அவரை வளர்த்தெடுத்த ஊர். அவரது குடும்ப முன்னோடிகள் ஆறுமுக நாவலரின் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களையும் நிறுவியுள்ளார்கள்.

வித்தியானந்தனின் பேரன் சின்னத்தம்பியால் தொடங்கப்பட்டு தந்தையால் வளர்ந்த வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியைக் கற்றார். பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர் வித்தி. இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். இங்கு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தி. தனது 26வது வயதில் இலண்டனில் முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டப் பேற்றுக்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்தவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் , "தமிழர் சால்பு' எனும் தலை சிறந்த தமிழ் நூலாக மறுவரைவு செய்து தந்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய வித்தியானந்தன் தனது மாணவியாக அறிமுகமான நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாகலிங்கம் மீது காதல் கொண்டு 1957 இல் மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்பன இவரின் பிள்ளைகளின் பெயர்கள். மனைவி கமலாதேவி அவர் நோயுற்று 1977 இல் மறைந்தார்.

துணைவேந்தர்

ஆகசுட் 1977 இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். அதன் பின்னர் ஜனவரி 1979 இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார். தன்னால் இயன்றளவில் யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றினை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தார். பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக அவ்வவ்போது எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாயின. கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழாராய்ச்சி மாநாடு

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் யீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார். இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பேராசிரியர் வித்தியானந்தன் கலந்து கொண்டார். 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன்.

நாட்டார் இலக்கியம்

ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தலானார். தனது குருவான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகச் செயற்பாடுகளின் பரிணமிப்பாக நாட்டுக் கூத்துகளை நவீன வாழ்முறைக்கு உகந்த வகையில் நவீனப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றி, பல நாட்டுக்கூத்துப் பிரதிகளை அச்சேற்றினார்

இறுதி நாட்கள்

யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரணுறும் துயரையும் சந்தித்தார்[1]. இது அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். அந்த மனச்சுமையோடு 1989 இல் அவர் மறைந்தார்.

நினைவு வெளியீடுகள்

அவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது. இலங்கைத் அஞ்சல் திணைக்களம் 1997 நவம்பர் 11 அன்று வித்தியானந்தனின் அஞ்சல் தலையை வெளியிட்டது.a

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.