குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .

"கி.மு 3-ம் நூற்றாண்டில் தமிழர் வாழ்ந்ததற்கான சான்று!" - நாங்கூர் தொல்லியல் ஆய்வில் தகவல்

மு.இராகவன் மு.இராகவன்  பா.பிரசன்ன வெங்கடேச் 22.06.2019-தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை சார்பில், நாங்கூரில், நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கி.மு.3 -ம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் சான்றுகள்

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள நாங்கூரில், தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார், தலைமையில் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் நிதி உதவியுடன் அகழ்வாராய்ச்சி கடந்த மே 17-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு

இது குறித்து முனைவர் செல்வக்குமார் கூறுகையில், ``நாங்கூர் ஒரு சங்ககால வாழ்விடமாகும். பட்டினப்பாலையிலும் பொருநராற்றுப்படையிலும் இவ்வூர் பெயர் இடம் பெற்றுள்ளது. கரிகாற்சோழன் நாங்கூர் வேளிற் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செய்தியும் உள்ளது. தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் கல்வெட்டு, நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதன் மூலம், அவர் நாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், நாங்கூரைச் சுற்றி 11 வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு, பல சிவன் கோயில்களும் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகளும் உள்ளன. அகழ்வாராய்ச்சியில் கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு பானை வகைகளும், மீன் உருவம் பொறித்த பானையோட்டுக் கீறல் குறியீடுகள், இரும்புப் பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறைகள், கூறை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், திருமால் உருவம் பொறித்த முத்திரைப் பதிவுகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் போன்றவை கிடைத்துள்ளன. நாங்கூர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககால ஊர் என்பது உறுதியாகியுள்ளது. பிற்காலத்தில் திவ்யதேசங்களாகவும் தேவாரத்திருத்தலங்களாகவும் அறிய முடிகிறது" என்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன், தரங்கம்பாடி டேனிச் வரலாற்றை ஆராயும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் கௌசெர் ஆகியோர் நாங்கூர் அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டனர். மேலும், பல முக்கிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.