குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ் மொழியின் உலகத்தாய்மை! உல் மெல் என்ற வேர்ச் சொற்களே ஐரோப்பிய மொழிகளில்!!

உல் மென்மை கருத்து வேர்...இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மெல்ல மெல்ல மெல் Mel ஆகியது

ஊகாரச்சுட்டில் பல்வேறு கருத்துகள் ஆணி வேரிலிருந்தும் பக்க வேரிலிரும் சல்லி வேரிலிருந்தும் பிறக்கும்.

உல் எனும் வேரின் மூலக் கருத்துகளில் முதன்மையானது தோற்றம் பெற்று முற்படுவதாகும்.

தோற்றம் பெறுகின்ற ஒன்று புதியதாகவும் இளையதாகவும் இருக்கும். பிறந்த குழந்தையின் உடல் உறுதிபெற்று இறுக்கமாக இராமல் மென்மைபெற்று விளங்கும். எனவே உல் எனும் வேர் மென்மைப் பொருள் தரும் சொற்களையும் பிறப்பித்தது.

உல்>முல்>மெல்> மென்

மெல்> மெது

மெல்>மெது> மெத்து>மெத்தை.

 

மெல்>மென்> மென்மை

 

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் தமிழின் மெல் பொருள் மாறாமல் அப்படியே வழங்குகின்றது.

 

mel- (1)

 

Proto-Indo-European root meaning "soft," with derivatives referring to soft or softened materials.

It forms all or part of: amblyopia; bland; blandish; blenny; emollient; enamel; malacia; malaxation; malt; melt; mild; Mildred; milt; moil; mollify; Mollusca; mollusk; mulch; mullein; mutton; schmaltz; smelt (v.); smelt (n.).

 

Mel > soft; with derivatives refrring to or softened materials of various kind.

Extended from meld.

1. Melt, from Old English meltan, to melt, from Germanic meltan.

2. Possibly Germanic miltjam, milt Old English milte, spleen, and Middle Dutch milte, milt

3. Possibly German maltam, malt from Old English mealt, malt.

4. Suffixed variant from mled- sno. BLLENY , from Greek blennos , slime, also name for the blleny.

5. Suffixed zero - grade from mld- wi. MOIL, MOJITO, MOLLIFY, MOLLUSK, MOUILLE, EMOLLIENT, from Latin mollis, soft.

6. Possibly nasalized variant from mlad BLAND, BLANDISH, from Latin blandus, smooth, caressing, flattering, soft- spoken.

(American heritage dictionary of Indo European Roots page: 55)

 

தமிழில் வழங்கப்பட்ட தூய செந்தமிழாகிய மெது சமசுகிருதத்தில் மிருது எனத் திரியும்.

 

தமிழின் ,

 

படி> பிரதி என்றும் பவளம் பிரவாளம் என்றும், பெரு> பிருகு என்றும் மதங்கம் > மிருதங்கம் என்றும் வடமொழியில் திரிந்தது போல் மெதுவும் மிருதுவானது. ஆனால் வடமொழியாளர்கள் இதனை ஏற்பதில்லை. இன்றளவும் மேலை ஐரோப்பிய மொழிகளில் தமிழின் வேர் உள்ளது என்பதை மேலை உலகம் உணரவில்லை. மெய்ப்பிக்க முடியாத ஏரணமற்ற சமசுகிருதத்தைத் தாங்கிப் பிடிக்கும் கருதுகோளையே வெளிப்படுத்தியுள்ளனர்.

 

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit mrdh "to neglect," also "to be moist;" Greek malakos "soft," malthon "weakling;" Latin mollire "soften," mollis "soft;" Old Irish meldach "tender.

 

எப்படியாயினும் தமிழின் மெல் எனும் மென்மை பொருள் அருந்தமிழ்ச்சொல் மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் மெல் என்றே வழங்குவது

தமிழின் உலகத் தாய்மையைத் தெளிய உணர்த்துவது கண்டு நாம் பெருமையுறுகிறோம்.

 

இரா. திருமாவளவன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.