குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண் சாய்ராம் யெயராமன் பிபிசி

18.06.2019-சுவீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது.சுகுவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார்.

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு அந்நாட்டில் பிறந்து, வளர்ந்த ஆர்த்தி நிதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கனவு நனவானது"

"கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான் இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இந்த தொடரில் அமெரிக்காவுக்காக பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுகால கனவை நிறைவேற்றியுள்ளது" என்று பெருமை பொங்க கூறுகிறார் ஆர்த்தி.

சமூக அழுத்தத்தையும், மனரீதியான தடையையும் மீறி தனது பெற்றோர் அளித்த ஊக்கமும், சர்வதேச போட்டிக்கு தயாரானதும் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் தக்க பயிற்சியை வழங்கிய நிர்வாகம் மற்றும் நண்பர்கள்தான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார் ஆர்த்தி.

அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகளின் கல்வியில் சாதனை புரிவது சாதாரணமாக மாறி வரும் வேளையில், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளது குறித்து பேசிய ஆர்த்தி, "இந்தியர்கள் என்றாலே கல்வியில் முதலிடம் என்ற மதிப்பு மிக்க நிலைக்கு புலம்பெயர்ந்த பெற்றோர்களே முக்கிய காரணம். ஆனால், கல்வியை போன்றே அமெரிக்காவின் விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியுமென்ற எண்ணம் வளர வேண்டியது அவசியம். கல்வி அதை தவிர்த்தால் நடனம் என்ற எண்ணத்திலிருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளிவர வேண்டும்" என்று கூறுகிறார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.