குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கியவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள்.பெரியளவில் கொண்டாடுவோம்.வேதநாயகம்

தபேந்திரன் 17.06.2019 -கிளிநொச்சி மாவட்டம் தனது பிறப்பின் வெள்ளிவிழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாட வேண்டிய 2009 ஆம் ஆண்டில் சுடுகாடாக இருந்தது.இன்று இந்த மாவட்டத்தை உருவாக்கிய தந்தையின் வீ.ஆனந்தசங்கரி ஐயாவின் 86 வது பிறந்த நாள்.அதனால் சில நினைவலைகள் எழுகின்றது. த அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தசங்கரி ஐயா பூநகரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய போதே கிளிநொச்சி தனி மாவட்டமாக வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

மூன்றாம் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வந்த போது 1984 இல் கிளிநொச்சி மாவட்டத்தை  உருவாக்கினார்.

வெல்லுகின்ற பக்கம் பாய்ந்து தாமும் வெல்லும் அரசியல்வாதிகள் நிறைந்த இக்காலத்தில் தனது கொள்கைக்காக எதையும் விட்டுக் கொடுக்காத அவரது பிடிவாதம் தனித்துவமானது.

1999 இல் யெயசிக்குறு எதிர்ச்சமர் மூலமாக கருணா அம்மானின் படைகள் பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தன.

2000 ஏப்பிரலில் ஆனையிறவையும் வென்று யாழ்நகரின் எல்லையில் நின்றார்கள்.

அப்போது வீரர்களாகப் போற்றப்பட்ட அவர்கள் 2004 மார்ச்சில் வெருகலில் துரோகிகளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அது போன்ற மாறுபட்ட நிலையில் ஆனந்தசங்கரி ஐயா நிற்கவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து தனது மனதில் பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவரைப் போட்டுக் கொடுத்து மேல்நிலையை அடைந்த அதே அரசியல்வாதிகள் தான் 2009 சனவரி மாதத்திற்குப் பின்பாக தமது கைத்தொலைபேசிகளை நிறுத்தி வைத்திருந்து  தமது தமிழரை்கள் மீதானவிடுதலைப்புலிகள் மீதான விசுவாசத்தைக் காட்டினார்கள்.

ஆனால் அது போன்ற துரோகத்தை ஆனந்தசங்கரி ஐயா செய்யவில்லை.

யாழ்ப்பாண மாநகர மேயராக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையாவை அவர் நியமித்த போதே அவருக்கு எதிரான அரசியல் சதிராட்டங்கள் ஆரம்பித்து விட்டது.

அவருக்கு எதிரான துரோகிப் பட்டத்தின் ஆணிவேரே அது தான்.

அண்மையில் யாழ் பொதுசன நூலகத் திறப்பு விழா குறித்தான கல்வெட்டும் அகற்றப்பட்டு விட்டது.ஆனந்தசங்கரி ஐயாவின் புகழ்பாட இப்பதிவை இடவில்லை.

அரசியல் நீரோட்டத்தில் நடிக்கத் தெரியாத மனிதராக அவர் எனக்குத் தெரிகின்றார்.

புதிய அரசியலமைப்பை வரையத் தொடங்கிய போதே சொன்னார் சிங்களவர்கள் இதற்கு விடமாட்டார்கள்.

இது காலத்தை வீணாக்கும் செயல்.

ஆகவே நீங்கள் ஏற்கனவே இருக்கின்ற அரசியலமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்குரிய உரிமைகளை வெல்லுங்கள் என்றார்.

அது தான் இன்றுள்ள நிலைமையும் கூட. ஏக்கிய ராச்சிய வரைவிலக்கணங்களைக் கூறியோர் மௌனமாகி விட்டனர்.

ஆனந்தசங்கரி ஐயா கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்புக்கும் அதன் அபிவிருத்திக்கும் அடித்தளமிட்ட ஒருவர்.

இவ் வருடத்துடன் இம் மாவட்டம் பிறந்து 35 வருடங்கள்.

அவரை வாழும் போதே வாழ்த்தும் வண்ணம் நன்றியுடையவர்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்துக் கௌரவித்தல் வேண்டும்.

இறந்த பின்பு மனிதர்களைப் புகழ்வது வீணான செயல் .

வரலாறு என்பது வெற்றி பெற்ற மனிதரால் எழுதப்படுவது. தோல்வியடைந்த மனிதர்களை இருட்டடிப்புச் செய்தல் அறமல்ல.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.