குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

தமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள் பிரமிளா கிருச்ணன் பிபிசி தமிழ்

16.06.2019-கீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார்.கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளார் இளங்கோ.

நண்பர்களான லோகேச் இளையபெருமாள் மற்றும் பாலாயி பாசுகரன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். அனைவருமே, திரைத்துறை மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே ஆவணப்படத்திற்காக பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

இசையமைப்பாளர் கிப்காப் தமிழாவின் தயாரிப்பில், 'தமிழி' என்ற பெயரில் வெளியிடப்படவுள்ள ஆவணப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் இளங்கோ.

''கீழடியில் அகழ்வாய்வில் கிடைத்த குறியீடுகள் பற்றிய தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஆதியில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? தமிழ் மொழியின் தொன்மை எத்தனை காலங்களுக்கு முற்பட்டது என சாதாரண மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணினேன். ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் மொழியின் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கவோ அல்லது பழைய கல்வெட்டுகள் உள்ள இடங்களை தேடிச் சென்று பார்ப்பதோ பலரால் இயலாது. அதற்கு ஆவணப்படம் பெரிதும் உதவும் என நண்பர்களோடு சேர்ந்து முடிவுசெய்தேன்,'' என ஆவணப்படம் உருவான கதையை நம்மிடம் சொல்கிறார்.

நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை பார்த்த பின்னர், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தமிழ் மொழியின் சுவடுகள் தென்படுவதை ஆவணப்படத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறுகிறார் இளங்கோ.

''இந்த படத்திற்காக சுமார் 18,000 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் நான்கு முறை சுற்றிவந்துவிட்டோம். ஆந்திரா, கர்நாடகா, குயராத் என பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளை கண்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில மலைக்கிராமங்களில் கல்வெட்டுகளை தேடி அலைந்து அங்கேயே தூங்கியதும் உண்டு,'' என்கிறார் அவர்.

'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'

5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம்

''தற்போது எழுதப்படும் தமிழ் எழுத்துகளைப் போன்றவை முந்தைய காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்கள், தமிழில் கிடைத்த பழமையான எழுத்து குறியீடுகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. கரப்பாவில் கிடைத்த எழுத்து அமைப்புகள் திருநெல்வேலியில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழ்வாய்வில் கிடைத்தன என பல வரலாற்று விசயங்களை தெரிந்துகொண்டோம். தமிழ் எழுத்துகளின் பரிணாமத்தை சொல்லும் ஓர் வரலாற்றுப் பயணம்தான் இந்தப்படம்,'' என விளக்குகிறார் இளங்கோ.

தமிழி படத்தில் முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ள வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராயவேலுவின் வாதம் நம்மை பிரமிக்கவைக்கிறது.

''தமிழ் மொழியின் எழுத்துகளை சமணர்கள் உருவாக்கினார்கள் என்ற கருத்தை பலர் சொல்கிறார்கள். ஆனால் தமிழக பகுதிகளில் உருவான எழுத்து வடிவத்தைதான் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் வணிகர்கள் வட இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பதை உணர்த்த அறிவியல் ரீதியாக குறிப்புக்கள் உள்ளன. சமீபமாக பொருந்தல் (தேனி) பகுதியில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சுமார் கி.மு. 500ம் ஆண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது. இந்தியாவில் உள்ள பழமையான அசோகன் பிராமி கல்வெட்டு கிமு. 300ம் ஆண்டை சேர்ந்தது,''என்கிறார் இராயவேலு.

குயராத்தில் உள்ள அசோகன் பிராமி கல்வெட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில், விழுப்புரத்தில் திருநாதர் குன்றில் உள்ள கல்வெட்டு, மதுரை மாங்குளத்தில் கிடைத்தவை, ஆந்திராவில் ஏர்ராகுடி, கர்நாடகாவில் பெல்லாரியில் உள்ள சான்றுகள் என பல கல்வெட்டுகளை தமிழி படக்குழு ஆவணப்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக உருவாக்கிய காட்சிகளை எட்டு மணிநேரமாக தொகுத்துள்ள தமிழி படக்குழு, விரைவில் ஒரு வெப் தொடராக படத்தை வெளியிட உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.