குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில்

11.06.2019-திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடலை ( Theme song) பெருமையுடன் வழங்குகிறார்கள் .

தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலுக்கு, டர்காம் சிம்பொனியுடன் இணைந்து, இசையில் உச்சம் தொட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ராசன் சோமசுந்தரம். யாதும் ஊரே பாடலின் முதல் வரிக்கேற்ப, பல நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து, பல இசை வடிவங்களையும் ஒன்றாய்க் கோர்த்து தமிழ்த்தாய் பெருமைகொள்ளும் அற்புதமான இசைமாலையாய் உருவாகி இருக்கிறது இப்பாடல்.

ஆப்பிரிக்க குரலிசையில் தொடங்கும் பாடல்,இராக் இசைக்கு தாவி, பின் இராப், பாப் என்று பயணித்து, பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரலில் யாதும் ஊரே என்று தொடங்கும்போது ஒரே நிமிடத்தில் உலகைச்சுற்றி நம் ஊருக்கு வந்து சேர்ந்த உணர்வு ஏற்படுகிறது! நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்திய தீவுகளின் காலிப்சோ, சாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நம் நாட்டுப்புற இசை உற்சாகமாக இணையும் போது, எப்படி இத்தனை இசைவகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கிறது! கணியன் பூங்குன்றனாரின் சாகா வரம்பெற்ற வரிகளில் 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னுமிடத்தில் இசை முழுமை அடைந்து நம் இதயத்தையும், கண்களையும் நிறைக்கிறது.

பிரபல இசை நடத்துனரும், அமெரிக்காவின் 40 பெரிய சிம்பொனி குழுக்களை வழி நடத்தியவருமான மேசுட்ரோ வில்லியம் கென்றி கர்ரி வழிகாட்டலில், டர்காம் சிம்பொனி வழங்கியிருக்கும் மேற்கத்திய இசை, தடையற்ற அருவியாய் நம்மேல் பொழிந்து, இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்திச் செல்கிறது.

கம்பீரமும், பெருமையும் கலந்து அபாரமாகப் பாடியிருக்கிறார் கார்த்திக். பாடகி பாம்பே யெயசிறி புது உற்சாகம் பாய்ச்சி இருக்கிறார். தமிழ் தெரியாத இத்தாலிய பாப் பாடகி சார்லட் கார்டினாலே, லண்டனைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்சு இருவரும் தமிழ் வார்த்தைகளைக் கற்று பாடியிருக்கிறார்கள். உக்ரேனைக் சேர்ந்த கிதார் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின் ராக் கிதாருடன், இராயேச் வைத்யாவின் கர்னாடக வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம் சிலிர்ப்பூட்டுகிறது.

இசையில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பல வகை நடனங்களையும் கலந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் வீடியோவில். இசை வடிவங்களுக்கேற்ப பாலே, யா ஸ், டேப், கிப்கொப் , யிப்சி ,பரதநாட்டியம், அமெரிக்கர்கள் ஆடும் நம் நாட்டுப்புற நடனம் என்று அலையலையாய் வந்துகொண்டே இருக்கின்றன. மேலும், தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் பல நாடுகள் பின்னணியில் வந்து செல்வது, பல இனத்தை சேர்ந்த மக்களும் ஒன்றாக நம் உணவை சாப்பிடுவது, ஒன்றாக நடனம் ஆடுவது என்று பாடலின் வரிகளுக்கேற்ப யோசித்து செய்திருக்கிறார்கள்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.