குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

எல்லோரும் அறிந்த பொருளியல் ஆசான் நா.கிருசுணானந்தன் அவர்களின் நினைவு!

10.06.2019-“வெள்ளை நிற  உந்துறுளி (சுகூட்டர்) சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. கையில் கட்டியிருந்த மணிக் கூட்டில் நேரம் பார்த்தேன்.காலை 5.55 மணியைக் காட்டியது.யாழ் நகரின் சென் யோண்சு(ஸ்) கல்லூரியின் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக உள்ள நொதேண் பெசுற் இன்சுரிரியூட் எனும் தனியார் கல்வி நிலையத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களாக நிற்கிறோம்.

வீதியின் கரையோரம் நின்ற ஆண் மாணவர்களாகிய நாம் வகுப்புக்குள் நுழைந்தோம்.

கிருசுணானந்தன் சேர் தனது வசீகரக் கண்ணாடியைக் கழட்டியபடி வகுப்புக்குள் நுழைந்தார்.

அவரது சுருள் சுருளான தலைமுடிகள் அவருக்கு ஓரு தனித்துவமான அழகைக் கொடுக்கும்.

நன்றாக அயன் பண்ணிய நேர் சீரான உடுப்புக்கள் அவரது கனவான் தன்மையையும் அழகையும் கூட்டிக் காட்டும்.

வகுப்புக்கள் அவர் நுழைய 100 பேரளவிலான மாணவர்கள் நிசப்ப அமைதியில் ஆழ்ந்து விடுவார்கள்.

சேர் சோக்கைக் கையில் வைத்தபடி உயர்தர வகுப்புப் பொருளியலை ஓர் கணித பாடம் போலத் தான் கற்பிப்பார்.

அரச பணியில் இணையாமல் தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டும் கற்பித்து தர்மமாகப் பணம் உழைத்த பண்பாளர் அவர்.

சோக் கட்டியால் தான் விளங்கப்படுத்திய பொருளியல் பாடத்தை சொற்களாக அழகழகாக எழுதுவார். அளவான எழுத்துக்கள். அளவான தூரத்திலிருந்து பார்த்தால் யாவருக்கும் அவரது எழுத்துக்கள் தெரியும்.

“ நாட்டின் பொதுவிலைமட்டம் தொடர்ச்சியாகவே அதிகரித்துச் செல்லுதல் பணவீக்கம் எனலாம்.

மறுவளமாகக் கூறினால் குறைந்தளவு பொருள்களைக் கூடியளவு பணம் துரத்திச் செல்லும் முரண்பட்ட நிலையே பணவீக்கமெனலாம்.“

என்று கூறியபோது சாதாரண ஒரு பொதுமகனும் பொருளியலை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இப்படியே அவரது கற்பித்தல் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவரது அழகு அவரிடம் கற்பவர்களை கல்வியில் வசீகரித்து வைத்திருக்கும்.

நேர முகாமைத்துவம் அவரது கற்பித்தலில் இருக்கும்.

பாடத்திட்டத்தை மே மாதமளவில் நிறைவு செய்து விடுவார் . யூன் யூலை மாதங்களில் கடந்த கால வினாத்தாளகு்கான பேப்பர் கிளாஸ் நடக்கும். அதற்கெனப் பிரத்தியேகமாகக் காசு வாங்கும் படலம் இருக்காது.

நொதேண் பணிப்பாளர் பஞ்சரட்ணம் ஆசிரியர் (சேர்) தனியார் கல்வி நிலையத்தை ஒரு சேவை நிலையமாகத் தான் நடத்தினார்.

அவரோ அவரது ஆசிரிய ஆளணியினரோ ஒரு போதும் அறிவுப் பரத்தையர்களாக நடக்கவில்லை.

இன்று வகை வகையாக காசு பிடுங்கி 50 இலட்சம் ரூபா பெறுமதியான சிற்றுந்தில் (காரில்) வரும் ஆசிரியர்கள் போல அன்று இருந்தோர் மிக அரிது.

கிருசுணானந்தன்   ஆசிரியரிடம் (சேரிடம்) படித்த போது 1987 மே வட மராட்சி ஒப்பிரேசன் லிபரேசன் காலத்திலும் ,1987 ஒக்ரோபர் 10 புலிகள் இந்தியப் படைகள் போர் காலத்திலும் எமது ரியூட்டரி கல்வி தடைப்பட்டது.

இந்தியப் படைகள் புலிகள் போர் காலத்தில் கிருசுணானந்தன் அசுிரியர் (சேர்) எனது வீட்டிற்கு அண்மையில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒரு மாதம் வரையில் இருந்தார்.

1988 ஓகசுட்டில் நாம் உயர்தரப் பரீட்சை எழுதினோம்.

அதற்குப் பின்பாக ஓரிரு வாரத்தின் பின்னர் கச்சேரி நல்லுர் வீதியிலுள்ள அவரது வீட்டில் விண்ணுந்து (விமான) எதிர்ப்பு ஏவுகணை இருந்ததாகக் கூறி இந்தியப் படையினர் கைது செய்து காங்கேசன்துறையில் ஓரிரு வாரங்கள் தடுத்து வைத்திருந்தனர்.

பின் அவரை விடுவித்த போது நானும் ஈரமேசும் டியோகிளீற்றசும் அவரை வீட்டில் போய்ப் பார்த்தோம். மெல்லிய புன்முறுவலுடன் வரவேற்றார்.

தனியார் கல்வித்துறையில் கனவான் ஆசிரியர் யார் எனக் கேட்டால் முதலாவதாக அவரைத் தான் கூறுவார்கள்.

அவ்வளவு அற்புதமான கண்ணியமான மனிதர்.குரும்பசிட்டி மண் தந்த வரம் அவர். இந்தியப் படைகள் கைது செய்து விடுவித்த பின்பு அவர் தனது மைத்துனர்களது அனுசரணையில் கனடா போயிருக்கலாம்.

தனக்கு ஒன்றும் வராதென அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

1988 நவெம்பரில் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது. யாழ் நகர் ஸ்ரான்லி வீதியிலுள்ள விக்னா கல்வி நிலையத்தில் சனி ஞாயிறு முழுவதும் பகல் நேர வகுப்புகள் நடக்கும்.

வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் இருந்து மட்டுமல்ல ஏனைய பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வருவார்கள்.

அங்கு அவர் கற்பித்துக் கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் சைக்கிளில் வந்து அவரை ஒரு விசாரணைக்கு வருமாறு கேட்டனர்.

சற்று நேரத்தில் விடுவதாக் கூறி ஒரு இளைஞன் ஒரு சைக்கிளில் அவரை ஏற்ற பின் முன்னாக ஆரியகுளம் சந்தி ஊடாக பருத்தித்துறை வீதி வழியாக வீரமாகாளி அம்மன் கோயில் பக்கமாக அழைத்துச் சென்றனர்.

அவரை இரு பெடியள் அழைத்துச் சென்றதை அறிந்த அவரது மாணவர்கள் உடனேயே அவரை அழைத்துச் சென்ற திசை நோக்கிச் சைக்கிளில் விரைந்தனர்.

அதற்கிடையில் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு முன்பாக கிருசுணானந்தன் சேரை சைக்கிள் இளைஞர்கள் இறக்கி விட்டு இடுப்பிலிருந்த பிசுரல் துப்பாக்கியை எடுத்தனர்.

எங்கள் சேர் தன்னைச் சுட வேண்டாமென்று கையெடுத்துக் கும்பிட கும்பிட அந்த மென்மையான கண்ணியமான ஆளுமைமிக்க கல்விமானைத் தமது துப்பாக்கி வேட்டுகளுக்கு இரையாக்கி விட்டு ஓடிவிட்டனர்.

அவரை ஆழமாக அன்பாக நேசித்த மாணவர்கள் வந்த போது அவரது உயிர் பிரிந்த உடலத்தையும் அதிலிருந்து வடிந்து காயாத இரத்தத்தையும் தான் பார்க்க முடிந்தது.

அவரது இரத்தம் அந்த மதகில் பல காலமாகவே இருந்தது.

அவரது சின்னம் சிறிய மகள் தனது தந்தையாரின் பிரிவுத் துயரை அறியாத நிலையில் மாணவர் பெரும் படையாக நிற்க அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது.

1989 இல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல் துறைத் தலைவர் பேராசிரியர் ராயினி திரணகம சுட்டுக் கொல்லப்பட்ட போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் நகரில் ஓர் சுவரொட்டி ஒட்டினார்கள்.

அதில் “ நிகழ்கால எயமானர்களே எதிர்காலத்திற்குப் பாலைவனத்தையா விட்டுவைக்கப் போகிறீர்கள் “ என இருந்தது.

அது போலத்தான் நீண்ட போராட்டம் விழுங்கிய பல புத்தியீவிகளில் எங்கள் பேராசான் கிருசுணானந்தன் ஆசிரியரும் (சேரும்) ஒருவராகி இன்றளவும் எம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

வேதநாயகம் தபேந்திரன் 02.12.2018

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.