குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நாம் இறக்கமுன் பறக்கலாமா? 2025 க்கு முன் நிகழவுள்ளது ஆய்வு வெற்றி யேர்மனியில்!

17.05. 2019-ஐந்து இருக்கைகளை கொண்ட பறக்கும் சிற்றுந்து – யெர்மனியில் சோதனை வெற்றி..!!வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் ஊர்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை(பறக்கும் சிற்றுந்துகளை) உருவாக்கி குறுகிய தூர விண்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,யெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

லில்லியம்யெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் சிற்றுந்து(கார்) கை இயக்கி(‘ரிமோர்ட் கண்ட்ரோல்’) மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மின்கல பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பகற்பனையில்  பறக்கின்றோம் நாம் இறக்கமுன் வந்திடும்போல எங்களுக்கு இளையவர்களை  முதியவர்கள்  ஆக்காமல் இருந்தால் சரி. நாம் இறக்கமுன் பறக்க ஆசைப்படுகின்றோம். விலை யை-யும் எங்கள் போன்ற பணக்காரநாட்டு ஏழைகள் வாங்கக்கூடியதாக  இருந்தால் நன்றுதானே!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.