குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

எது தமிழ்ப்பற்று? யார் காட்டுமிராண்டி?

எது தமிழ்ப்பற்று? யார் காட்டுமிராண்டி?

---------------------------------------------------------------------

தமிழரல்லாத

யி.யு.போப் அவர்கள் தான்

திருக்குறளை மொழிபெயர்த்து உலக பொதுமறையாக்கி, திருவள்ளுவரை உலகறியச் செய்தார்...

தமிழரல்லாத

யான் யோசப் பெசுகி அவர்கள் தான்

தமிழைக் கற்றுத் தேர்ந்து

தமிழுக்கு சதுர அகராதி படைத்து

தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்தார்...

 

தமிழரல்லாத

பெரியார் அவர்கள் தான்

"தமிழ்நாடு தமிழருக்கே"

என்று இறுதிமூச்சு வரை

தமிழருக்காகவும், தமிழர் நிலத்தை சிறைபடுத்திய இந்தியத்திற்கு எதிராகவும்

போராடினார்...

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளை

அதற்கு பின்னர் வந்த எந்த

தமிழ் மன்னர்களும்,

தமிழ் புலவர்களும்

உலகறியச் செய்யவில்லையே!

 

ஆனால்,

திருக்குறளை விமர்சனத்தோடு ஏற்றுக்கொண்டு

திருக்குறளை பரப்பியது

தமிழரல்லாத,

எங்கள் பெரியார் தானே!!!...

 

அப்படி இருக்கையில்,

சமற்கிருத கலப்புத் தமிழோடு

மூடநம்பிக்கை நிறைந்த புராண, இதிகாசங்களை உயர்த்திப் பிடித்த காட்டுமிராண்டி கூட்டத்தை, காட்டுமிராண்டி என்று

சொல்லாமல் வேறெப்படி சொல்லவேண்டும்..?

 

இன்றும் பல காட்டுமிராண்டி கூட்டங்கள்

நாட்டில் இருக்கத்தானே செய்கின்றன...!!

 

அன்று பெரியார் காட்டுமிராண்டி என சொல்லிவிட்டாரென்று இன்றுவரை கதறுகிறீர்களே..!!

 

இன்று ங்கோத்தா, ங்கொம்மா, சோத்தத்தான் திங்கிறியா? வேறெதையும் திங்கிறியா?

நாதாரிப்பய மக்களே!

இந்தப் பொழப்புக்கு நக்கிப் பிழைக்கலாம்னு சொல்லும்போது மட்டும் எல்லோருக்கும் இனிக்கிது அப்படித்தானே!!!

 

நல்லா இருக்குடா உங்க தமிழ்ப்பற்று!!!

 

விமர்சனத்திற்குட்படாத எந்த ஆளுமையும் இவ்வுலகில் வாழ்ந்ததாய் வரலாறே கிடையாது...

 

எனினும்

விமர்சனம் என்பது வேறு..

கொச்சைப்படுத்துவதென்பது வேறு...

 

நிகழ்கால காட்டுமிராண்டி கூட்டங்கள்

பெரியாரை விமர்சிக்கவில்லை,

மாறாக கொச்சைப்படுத்துகிறது..

 

உங்கள் அறிவுக்கண் திறக்கும் போது

அனைவருமே பெரியாரின் பேரன்களாய் தான் இருப்பீர்கள்,

இதில் அணுஅளவும் மாற்றுக்கருத்து இல்லை..

 

தோழமையுடன்- தோழர் சிலம்பரசன்✊