குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

சி4 குண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆணிகள் பாவிக்கப்பட்டுள்ளது- 24 முசுலீம்கள் கைது…

22.04.2019-நேற்றையநாள் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக சுமார் 24 முசுலீம்களை கா.து  கைதுசெய்துள்ளார்கள். ‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக் களப்பு தற்கொலை தாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் ! தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலை தாரிகள் பயன்படுத்திய சிறியரகஊர்தி  மீட்கப்பட்டு ள்ளது. இவர்கள் அனைவருமே காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறம் இருக்க. வெடி குண்டுக்கு பாவிக்கப் பட்ட வெடி பொருள் சி4 எனவும். பல நூறு போரைக் கொலை செய்ய, இவர்கள் அந்த வெடிமருந்தில் பல ஆயிரம் ஆணிகளை சேர்த்துள்ளார்கள் என்றும்  கா.து தெரிவித்துள்ளார்கள்.

எனவே குண்டு வெடிக்கும் வேளைகளில், இந்த ஆணிகள் சிதறி மக்களை தாக்கும். இதனால் பலர் இறப்பார்கள்.

விடுதலைப் புலிகள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தும் வேளையில் கூட இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆணிகளை பாவிப்பது இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொலிசார் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களே மக்களை அதிகம் கொல்லவேண்டும் என்பதற்காகவே இந்த குண்டை தயாரித்துள்ளார்கள் என்று அவர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை 6 தற்கொலையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு. 290 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க, தற்போது சிறப்பு அதிரடிப்படையினர் காத்தான் குடியை சல்லடை போட்டு தேட அங்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் கசிந்துள்ளது. முசுலீம் அரசியல் தலைவர்கள், தமிழர்கள் திரண்டு தமக்கு தனி நாடு வேண்டும் என்று போராடவில்லையா ? அதுபோல சில முஸ்லீம்களை சிலர் இவ்வாறு மூளைச் சலவை செய்து அனுப்பிவிட்டார்கள் என்று சிங்கள தலைமைக்கு சொல்லி அவர்களை சாந்தப்படுத்தி வருகிறார்கள் என்ற செய்தியும் கூடவே கசிந்துள்ளது.

‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக் களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் !

22.04.2019-“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று மனித வெடிகுண்டாக வெடித்த பயங்கரவாதியை நேரில் கண்டு, அவரில் முதன்முதலாக சந்தேகமடைந்த தேவாலய ஊழியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இவை.

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் இன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 100 பேர் வரையில் காயமடைந்தனர். இதில் துயரமாக விடயம்- உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவ பிஞ்சுகள்.

தேவாலயங்களில் நடைபெறும் ஞாயிறு வகுப்பின் பின்னர் விளையாடிக் கொண்டிருந்தவர்களே உயிரிழந்தனர்.

இன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் பெரும்பாலானவை மனித வெடிகுண்டு தாக்குதல்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் ஒரு தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்தார்.

அவர் குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்னரே அவரில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை வாசலிலேயே நிறுத்தியதால்தான் உயிரிழப்பு குறைவாக ஏற்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரியில் முதன்முதலாக சந்தேகமடைந்த தேவாலய பணியாளர் ஒருவர், தமிழ்பக்கத்திடம் நடந்த சம்பவத்தை விபரித்தார்.

“காலை 8.40 அளவில் இருக்கும். தேவாலயத்தின் வாசல்பக்கமாக ஒருவர் நின்று கொண்டிருந்தது எனது கவனத்தை ஈர்த்தது. அவர் நீண்டநேரமாக நிற்கிறார். அவரிடம் சென்று, உள்ளே வாருங்கள் என அழைத்தேன். அவர் நாசூக்காக மறுத்தார். அவர் புதியவர். வழக்கமாக தேவாலயத்திற்கு வருபவர் அல்ல. என்றாலும், தேவாலயத்திற்கு வருபவர்கள் வெளியில் நிற்காமல், உள்ளே கூட்டிச்சென்று அமர வைப்போம். இன்றும் அதற்குத்தான் முயன்றோம்“ என்றார்.

எனினும்,  அந்த பணியாளரின் அழைப்பை, அந்த புதியவர் ஏற்கவில்லை.

“எனக்கு சில தொலைபேசி அழைப்புக்கள் வரும். நான் அவற்றை பேசிவிட்டு, புறப்பட்டு விடுவேன். அதற்கு முன்னர் ஆராதனை நடந்தால் கலந்து கொள்ளலாம். எத்தனை மணிக்கு ஆராதனையை தொடங்குவீர்கள்? என்றார்.

9 மணிக்கு ஆராதனை தொடங்குமென்று கூறி, மீண்டும் உள்ளே வருமாறு அழைத்தேன். அவர் மறுத்தார்“ என குறிப்பிட்ட அந்த பணியாளர், அவரது மறுப்பு தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

“35 வயதிற்குட்பட்ட நபர். செந்தழிப்பான தோற்றமுடையவர். சிரித்த முகத்துடனேயே இருந்தார். ஓரளவு உடம்பானவர். திடகாத்திரமானவர். அவரது நடத்தையில் சந்தேகம் இருந்தது. ஆனால் இப்படியொரு காரியம் செய்வார் என நான் நினைக்கவில்லை.

பெயரை கேட்டேன். ஓட்டமாவடியில் இருந்து வருவதாகவும், பெயர் உமர் என்றும் சொன்னார். “

அந்த புதிய நபர், வந்து நின்ற இடம்- தேவாலய வழிபாட்டு மண்டபத்தின் நடுப்பகுதிக்குள் நுழைய வசதியான வாசல்ப்பக்கம். அந்த வாசலால் நுழைந்தால், தேவாலயத்தின் நடுவிற்கு செல்லலாம். வழிபாட்டிற்கு வருபவர்கள் குழுமிய பின்னர், தேவாலயத்தின் நடுப்பகுதியில் குண்டை வெடிக்க வைக்கப்பதுதான் அவரது திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

“அவர் ஒரு பயணப்பையொன்றை பக்கவாட்டாக கொழுவியிருந்தார். இன்னொரு சிறிய பையொன்றை முன்பக்கமாக கொழுவியிருந்தார்“ என அந்த பணியாளர் குறிப்பிட்டார்.

தான் அழைத்தும், அந்த நபர் உள்ளே நுழையாததையடுத்து, ஆலயத்தின் இளம் மத போதகர்கள் சிலர் வந்து அவரை விசாரித்ததாக தெரிவித்தார். இந்த சமயத்தில் குறிப்பிட்ட பணியாளர் அந்த இடத்தை விட்டு தேவாலயத்தின் உள்பக்கமாக சென்றார்.

அதன்பின் நடந்தவற்றை அவரால் தெளிவாக காணவில்லை. ஆனால், அந்த துறவிகளும், புதிய மனிதரும் தள்ளுமுள்ளு பட்டிருக்கலாமென்றும், துறவிகளை சமாளித்து தேவாலயத்திற்குள் நுழைய முடியாது என்பதை தெரிந்த பின்னரே, அந்த இடத்தில் குண்டை வெடிக்க வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். சுமார் 8.45 அளவில் குண்டு வெடித்திருக்க வேண்டும் என்றார்.

அவர் குண்டை வெடிக்க வைத்த இடம், தேவாலயத்தின் பக்கவாட்டு வாயிலிற்கு வெளிப்புறம். அதற்கு அருகில், ஞாயிறு சமய வகுப்புக்கள் முடிந்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். குண்டுவெடிப்பில் அவர்களே அதிகம் சிக்கினர்.

குறிப்பிட்ட நபரில் சந்தேகம் ஏற்படாமல் இருந்திருந்தால், அவர் 9 மணிக்கு ஆராதனை தொடங்கியதும், மண்டபத்தின் நடுப்பகுக்குள் நுழைந்து குண்டை வெடிக்க வைத்திருப்பார். அது மிகப்பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மட்டக்களப்பு தேவாலய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 27 பேர். அதில் 26 பேர் அடையாளம் காணப்பட்டு விட்டனர். அடையாளம் காணப்படாத ஒரு சோடி கால்கள் மட்டுமே இப்போது மிச்சமாக உள்ளன. அது அந்த தற்கொலை குண்டுதாரியுடையதாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய சிறியரகஊர்தி  மீட்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் சிறியரகஊர்தி ஒன்று கா.து  சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொள்ளப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறியரகஊர்தி  ஒன்று கா.து  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வேன் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் கா.து  கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கா.து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.