குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகின் பழமையான மொழிகள் மற்றும் மன்னர்கள் சீர்செய்த மாநகர், பேரூர், சிற்றூர் ஒரு கண்ணோட்டம்.

19.04.2019- உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு தருகிறேன்.  சமசுகிருதத்திலிருந்து  பிறமொழிகள்தோன்றின  என்ற ஏமாற்றை நம்பும் தமிழர்களுக்காக !1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)50000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்

Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் இலத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராச்சியத்தில், இலத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 ஆண்டளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இசுரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமசுகிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமசுகிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

50000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-wo…/

இந்த மெய்யான தகவலை பகிரவும்.

தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா

தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே மனிதனால் வெட்டப்பட்ட பெரிய ஏரி எது?

வீராணம் ஏரிதாங்க அது. ஆனால் இதைக்கூட நம் வரலாற்றாசிரியர்கள் உலகத்துக்கு சொல்லவில்லை

இதன் நீளம் 16 கிமீ .

ராயாதித்ய சோழனால் வெட்டப்பட்டது .கிபி 985

ஆனால் இப்போதும் வெள்ளைக்கார திருட்டு வரலாற்றாளர்கள் வெசுட்டர்ன்பராய் ஏரியை பெரிய ஏரி என்று சொல்கிறார்கள் இதன் நீளம் 8 கிமீ

என்ன கொடுமைத்தமிழா?

இத்தனை பெருமை வாய்ந்த வீராணம் ஏரி தமிழக சுற்றுலா வரைபடத்தில்கூட இல்லை என்பதுதான் வேதனை.

இந்த கொடுமையை உலகுக்கே பகிருங்கள கடலூர மாவட்டம் திருத்திணை நகர் சிவதலம் அருகிலுள்ள சோழர்கள் உருவாக்கிய வீரநாராயணன்ஏரி ஒரு கண்கொள்ளாகாட்சி.

பாண்டியர்கள் உருவாக்கிய மதுரை மாநகர், பல்லவர்கள், சோழர்கள உருவாக்கிய காஞ்சிமாநகர், திருத்திணை நகர், விழுப்புரம் அருகிலுள்ள திருவாமுத்தூர், இனியும் பேரூர்கள் சிற்றூர்கள் வாழ்வதற்கு வயல்வெளி, ஏரிகள் குளங்கள், எண்ணை எடுக்கும்செக்குகள், நெசவுத்தொழில், மண்பாண்டத்தொழில், பொற்கொல்லர்கள், இரும்பு வேலைசெய்பவர் இவையெல்லாம் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது..