குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 4 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழரின் தாழ்ச்சிக்கு காரணம் என்ன?சமசுகிருதம் பேசப்படும் கிராமம்.

01.04.தமிழாண்டு-தி.ஆ.2050 14.04.2019- தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி என்பதை கவிதை நயமாக பேசி மகிழ்ச்சி தீயை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் நிலை தான் இன்றுள்ளது. இது அரசியல் வாதிகளுக்கும், தமிழ் பெயரை கூறி வாழுபவர்களுக்கும் உண்டு.

இது இன்றைய நிலை மட்டுமல்ல முன்பிருந்த அறிஞர்களும் இந்த நிலையில் தான் நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், சமசுகிருதத்திலிருந்து தான் தமிழ் பிறந்தது என்ற கூற்றை அடிப்படையாக கொண்டு தமிழ் பயிலவாரம்பித்தனர்.

பொதுவாக ஒரு சொல்லை சொல்லாராய்ச்சி மட்டுமின்றி, பொருள் ஆராய்ச்சி மற்றும் இன்றைய நாட்டு நடப்பில் பயன் பாட்டினை ஆராய்ந்தால் தான் சொல்லை ஆராய்ந்ததாக கருதப்படவேண்டும். அதே போன்று குறிப்பிட்ட சொல் வடமொழி சொல் என்று வட மொழி இலக்கணம் தெரியாதவர்கள் , அந்த சொல்லின் மூலச்சொல் போன்றவற்றை ஆராயாமல், யாரோ சொன்னார்கள், அந்த குறிப்பிட்ட சொல் வடமொழி நூல்களில் உள்ளது என்பதால் அந்தச்சொல் வடமொழிச்சொல் என்று கூறுபவர்களின் எண்ணிக்கையே மேலோங்கியுள்ளது, மேலும் தங்களுடைய புனித நூலை மறை என்று தமிழகத்தில் உள்ள மற்ற மதத்தினரரும் கூறிவருகின்றனர்!!!

பிற மண்ணினர்களுடைய தாசர்கள் செய்யும் தமிழ்க் கொலைகளுக்கு அளவே இல்லை. உதாரணமாக சில சொற்கள்:

1- வேதம் –> வேதித்தல் –> வேது பிடித்தல்

வேதம் என்றால் பக்குவமாக செய்யப்பட்டு அதை பயன்படுத்த தயாராக உள்ளது என்று பொருள். வேதம் என்னும் ஒரு ஆழ்ந்த பொருள் கொண்ட தமிழ் சொல்லை இந்த அறிஞர்கள் தமிழ் சொல்லாக ஏற்க மறுக்கின்றனர்.

ஆனால் தமிழ் அறிஞர்கள் வேதம் வடமொழி சொல், வேதம் என்பதற்கான தமிழ் சொல் மறை என்று பரப்புரை செய்தனர். மறை என்றால் மறைத்து வைப்பது-> மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பன போன்ற பொருளையே தரும், அப்படிபார்த்தால் வேதமானது பலரும் படித்து அச்சடித்து வழங்கும் போக்கே சமசுகிருத வேதத்தில் உள்ளது

2- பிறாமணரா? அல்லது பிராமணரா?

பிறாமணர் -> பிற மண்ணினர்

இச்சொல்லை பேசும் பொழுது வல்லின ‘ற’ பயன்படுத்தி உச்சரித்துவிட்டு எழுதும் பொழுது பிராமணர் என்று எழுதும் மரபு ஏன் என்று ஆராய்ந்தால் நம் குழப்பம் புரிந்துவிடும்.

3 – கஷ்டம் என்பது உண்மையில் கட்டம் என்றுதான் இருக்க வேண்டும். ஏனெனில், பட்டம் என்ற சொல் பஷ்டம் ஆக வில்லை! சட்டம் என்ற சொல் சஷ்டம் ஆக வில்லை! அப்பொழுது கட்டம் என்ற சொல் மட்டும் கஷ்டம் என்று ஆக வேண்டும்?  கட்டம் என்பது தடையைக் குறிக்கின்றது. ஏன் ஒரு செயலைச் செய்ய முடியவில்லை? ஒரு கட்டம் இடையில் இருக்கின்றது அதனால்தான். (உதாரணம்: “ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டோம்”) இதுவே கஷ்டம் என்று பிறமண்ணினர்களால் உச்சரிக்கப் பட்டுத் தமிழர்களால் பின்பற்றப் பட்டு விட்டது.

4- வேஷ்டி என்பது வேட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், பேட்டி என்ற சொல் பேஷ்டி ஆக வில்லை! போட்டி என்ற சொல் போஷ்டி ஆக வில்லை! பாட்டி என்ற சொல் பாஷ்டி ஆக வில்லை! நெய்த ஒரு துணியை வெட்டி எடுத்து உருவாக்குவதுதான் வேட்டி. இதையே பிற மண்ணினர்கள் வேஷ்டி என்று உச்சரித்து தமிழர்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வைத்து விட்டார்கள்.

5- இதே போலத்தான் குஷ்டம் என்பதற்கு சரியான மூலச் சொல் குட்டம்.

இது போலத் தமிழில் உள்ள பல சமசுகிருதம் கலந்த சொற்கள் போலத் தெரியும் சொற்கள் தவறான உச்சரிப்பினால் திரிக்கப் பட்ட நல்ல பொருள் உள்ள தமிழ்ச் சொற்களே என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளலாம்.

இனி மேலுமாவது தமிழ் விருப்பாளர்கள் தமிழால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்

1- தமிழே சமசுகிருத மொழிக்கு முன்னோடி என்ற சிந்தனையோடு செயல்படல் தமிழுக்கு சிறப்பை தரும்

2- தமிழுக்கு சமசுகிருதம் தான் ஆதாரம் என்று நம் அறிவை நிலைநிருத்தி தமிழ் ஆராய்ச்சி செய்யாதிருத்தல்

3- ஒரு சொல்லை வடபுலத்தவர்களோ அல்லது பிறமண்ணினரோ குறிப்பிட்ட சொல் வடமொழியிலிருந்து தான் தமிழுக்கு வந்தது என்றால் அதை அப்படியே ஏற்காமல் ஆராய்வதே தமிழுக்கு செய்யும் மாபெரும் தொண்டாகும்.

சமசுகிருதம் பேசப்படும் கிராமம்

பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் சமசுகிருதம் மொழிவாரிய வரைப்படத்தில் இல்லை

காற்றை நுகர்ந்து பசியை ஆற்றலாம் , என்ற கற்பனை வாதம் போன்றுதான் சமசுகிருதம் என்ற மொழியின் கற்பனை வாதம்.  இருந்தும் இன்றுள்ள அரசு மட்டுமல்ல இதற்கு முன்னிருந்த அரசுகளும், இனி வரவிருக்கும் அரசானாலும் சரி சமசுகிருத திணிப்பை நிறுத்தப்போவதில்லை என்பது நிதர்சனம். இந்த சமசுகிருத மாயையை தமிழரால்தான் ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும் என்பதால் பதிவின் நோக்கத்தோடு செல்வோம்

அதாவது மரப்பாச்சி பொம்மையை எவ்வளவுதான் சிங்காரித்தாலும் அதனை குடும்ப வாழ்விற்கு பயன்படுத்த முடியாது என்ற உண்மை தெரிந்தும் பிணமான சமசுகிருதத்தை பாடை கட்டி எரிக்காமல் அதற்கு அலங்காரம் செய்து உயிர்த்தெழ வைக்க முனைகிறது ஆரிய கூத்தாடிகள்.

சமசுகிருத மொழிக்கு பலகோடிகள் அள்ளித்தருவதை பற்றி தமிழ் மொழியினரை தவிர வேறு ஒருவரும் மறுக்கவோ விமர்சிக்கவோ போவதில்லை, அவைகள் திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டாலும் அவர்கள் தமிழிலிருந்து பிறந்த மொழி என்பதனை விட சமசுகிருத கலப்பு கொண்ட மொழி என்பதனையே விரும்புகின்றனர். அதே போன்று சமசுகிருதத்தை தூக்கிப்பிடிக்கும் பிறாமணர்களோ அல்லது பிறாமண அடிவருடிகளோ சமசுகிருதத்தில் என்ன உள்ளது என்று சொல்ல ஒருவரும் இல்லை ஆனால் சமசுகிருத மொழியில் இல்லாதது இல்லை என்று சொல்லும் மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா இந்த கற்பணையை உடைப்பது எப்படி என்று அறிவார்ந்த சமூகம் சிந்திக்க கூடிய சூழலை தமிழ் சமுதாயமே உருவாக்க வேண்டும்.

முன்பெல்லாம் சமசுகிருதம் பேசப்பட்டது இப்போது தான் யாரும் பேசுவதில்லை என்கிறவர்களுக்கு

சமசுகிருத மந்தரம் கூறினால் நாக்கு அறுக்கப்படும் , சமசுகிருதம் படித்தால் கண்கள் நோண்டப்படும் , சமசுகிருத மந்தரம் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும் என்ற நிலை பேசப்பட்ட ஒரு மொழிக்கு இருந்திருக்குமா???

தாய் மொழியாக இருந்திருந்தால் மற்றவரை பேசாதே என்று சொல்லியிருப்பார்களா????

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் பேசப்படும் ஒரு மொழி சங்கேதி, இந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட மக்கள்  இப்போது மரணிக்கும் தருவாயில்  உள்ள சங்கேத்தியை தாய் மொழியாக கொண்ட முனைகிறார்கள் அப்படி சமசுகிருத மொழியை தாய்மொழியாக பேசும் கும்பலை யாரேனும் கண்டதுண்டா???

உலகிலேயே சமசுகிருத பேசப்படும் ஒரே ஒரு கிராமம் உள்ளது என்பார்கள்

கர்நாடகத்தில் உள்ள சிமோகா என்ற மாவட்டத்தில் உள்ள மத்தூர் என்ற ஊரில் மக்கள் சமசுகிருதம் பேசுகிறார்கள் என்றனர், பரவாயில்லையே ஒரு குறிப்பிட்ட மக்கள் தன் தாய் மொழியாக சமசுகிருதம் பேசுகிறார்களே என்று நம்பிக்கை இல்லாமல் ஆராய்ந்தால்,  மத்தூரில் யாருக்கும் சமசுகிருதம் தாய் மொழியில்லை மாறாக அங்குள்ள மக்களின் மொழி சங்கேத்தி , இந்த சங்கேத்தி மொழி திராவிட மொழிகளில் ஒன்று, எழுத்துரு அற்ற ஒரு மொழி இது, இம்மொழியை அழித்து சமசுகிருதத்தை மக்களிடம் பேச வைத்தனர்.

மத்தூரில் சமசுகிருத வேத பாடசாலையும்,சமசுகிருதம் பயில ஒரு சமசுகிருத பாடசாலையும் உண்டு. இப்படியாக சமசுகிருதம் பேசப்படுவதாக ஒரு மாயையையும் அதற்கான விளம்பரங்களையும் இந்திய அரசு  செய்தது ( இது பாஜக மட்டுமல்ல இதுவரை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் இதற்கு உடந்தை). சமீபமாக என்னுடம் பணி செய்யும் ஒரு பெண், அவர் அந்த ஊரை சேர்ந்தவரென்றார். நானும் இப்போதும் சமசுகிருதம் பேசப்படுகிறதா என்று கேட்டபோது இல்லை இப்போது மக்கள் சங்கேதியைதான் அதிகம் பேசுகின்றனர் முன்பு போல் சமசுகிருதம் பேசுவதில்லை என்றார். அப்போது நன்றாக புரிந்தது சமசுகிருதம் எனும் பிணத்தை எழுப்ப பல கோடி செலவழிப்படுகிறது என்றாலும் சமசுகிருதத்தில் எல்லாம் இருக்கிறது அல்லது ஏதோ இருக்கிறது என்று ஒரு புரளியை நம்பி இந்திய மக்களும் வெளிநாட்டினரும் தன் பணம் நேரம் உழைப்பு அனைத்தையும் வீணாக்குகின்றனர்.

சமசுகிருதம்  என்ற இறந்த மொழி இன்றுவரை எரிக்கப்படாமல் இருக்க ஒரே காரணம் அதற்கு பின்னால் புணையப்பட்டுள்ள கற்பனை கதைகள் குறிப்பாக தேவ பாஷை என்பது ஒன்று.  சமசுகிருத நூல்களில் உள்ள செய்திகளின் மூலம் என்ன (யார் எழுதியது), எழுதப்பட்ட காலம் காலக்கணீட்டு உண்மை, அல்லது எழுதியவர் வரலாறு என்று ஒன்றும் கிடையாது அப்படியே சொல்லப்பட்டிருந்தாலும் அவை கற்பனையாக புணையப்பட்டிகிறது என்பது உள்ளங்கை நெல்லிகனியாக இருந்திடும். உதாரணமாக சமசுகிருத வேதம் எப்பொழுது எழுதியது என்றே தெரியாமல் அது காற்றில் வந்தது கப்பலில் வந்தது என்பர், மற்றுமொரு உதாரணமாக சமசுகிருத காயத்ரீ இன்று இருநூற்றிக்கும் மேலான காயத்ரீ உள்ளது யார் எழுதியது எப்போது எழுதியது என்ற செய்தியை யாரும் கேட்பதுமில்லை கேட்டாலும் பதிலில்லை

சமயவாதிகளின் சிந்தனைக்கு

இமயம் முதல் குமரி வரை உள்ள பல்வேறு மாநிலங்களில் எந்த மாநிலத்திலுமே

ஆட்சிமொழியாகவோ அல்லது பேச்சு மொழியாகவோ இல்லாத ஒரு மொழியான சமசுக்கிருத மொழி எப்படி? ஏன்? எதற்காக? எவ்வாறு? எப்பொழுதிருந்து? இந்துமதத்தின் ஆட்சிமொழி ஆக்கப் பட்டது? இந்து மதத்தின் பூசைமொழி ஆக்கப்பட்டது? இந்துமதத்தின் சடங்கியல் மொழியாக்கப் பட்டது? இந்துமதத்தின் வேத மொழியாக்கப் பட்டது?

“அருளுலகில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்” — குருபாரம்பரிய வாசகம்.

விளக்கம்:- ‘அருளுலகில்’ என்றால் தனிமனித அன்றாட வழிபாடுகள், கோயில் வழிபாடுகள், கூட்டு வழிபாடுகள், கோயில் குடமுழுக்குப் பூசைகள், வீட்டில் செய்யப்படும் அமாவாசைக்கான முன்னோர் வழிபாடுகள், பிறப்பு—திருமணம் –இறப்பு, … ஆகியவற்றிற்கான சடங்குகள், வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் நடத்தப்படும் சிறப்புப் பூசைகள், … … போன்றவற்றைக் குறிக்கும்.

சமசுகிருதம் இதுவரை யாருக்கும் தாய்மொழியாக இருந்ததில்லை , இப்போதுமில்லை , இனி எப்போதும் இருக்காது என்பது மட்டும் உறுதி

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா?

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சி ஆரிய சூழ்ச்சி என்று பிறாமணர்களை கரித்து கொண்டே இருப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். சரி நாம்தான் வீணாக பழி போடுகிறோமா அல்லது முந்தைய தலைமுறையினர் கூறியவற்றை கேட்டு ஆராயாமல் சிறுபான்மையான பிறாமணர்களை விமர்சிக்கின்றோமா என்று சந்தேகம் வர தொடங்கியது.

அதுவும் தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று பிறாமணர்களை கேள்வி கேட்பவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லையா என்ற பேதமில்லாமல் அனைவரையும் பிறாமண துவேசி என்றும் பெரியாரிய வாதிகள் என்றும் நாத்திகர் என்றும் கேள்வியை திசை திருப்பிவிடுவர்.

இன்றைய நிலையில் இந்தியா முழுவதுமுள்ள பிறாமணர்களையும் குறிப்பாக தமிழகத்து பிறாமணர்களின் தமிழ் பற்றையும் தமிழர் நலம்  கருதுவதையும் ஆராய்வோம். அதாவது நம் கண்ணுக்கு தெரிந்த சமசுகிருத பிறாமண சூழ்ச்சிகள் ஆராய்வோம்

இந்த நூற்றாண்டில் நமக்கு தெரிந்து திருக்குறளை சமசுகிருத மொழிக்கு மொழிபெயர்த்தனர். மொழிபெயர்ப்பில் அந்தணர் என்ற சொல்லுக்கு பிறாமணர் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அந்தணர் என்ற சொல்லுக்கு வள்ளுவர் கூறுவது எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்று அப்படியென்றால் புல் பூண்டு முதல் மனிதன் வரை எந்த  உயிரானாலும்  அன்பு காட்டுதலாகும். ஆனால் பிறாமணர்களின் மக்களை நான்காக பிரித்து மனிதனை மனிதனாகக்கூட பார்க்காத விதத்திலேயே அந்தணர் என்றால் பிறாமணரில்லை என்பது புரிந்துவிடும். சமசுகிருத திருக்குறள் –> Tirukkural_sanskrit (1)

திருக்குறளை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்த சிறிராம தேசிகன்  பத்துப்பாட்டு எட்டுத்தொகை, திருப்பாவை , கம்பராமாயணம்,நாலடியார், மற்றும் சிலப்பதிகாரம் என்று சமசுகிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழரின் பெரிய புராணத்தை மொழி பெயர்த்து அதனை மகா தேவ விஜயம் என்று பெயரிட்டு தமிழகத்திலேயே கதா காலட்சேபம் செய்து சமசுகிருதத்தில் படித்து அதற்கு தமிழில் பொருள் தந்த கொடுமை நிகழ்கிறது.

ஆண்டாளின் திருப்பாவையை வடமொழியில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள். ர.பரதன் என்பார் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ளார். http://www.sangatham.com/bookreviews/tiruppavai-in-sanskrit.html

சமீபமாக2018ல்  திருக்குறள் சமசுகிருத வேத சாசுதிர வர்ணா சிரம தர்மத்தின் சாரம் என்று நாகசாமி என்பவர் புத்தகம் வெளியிட்டார் . இந்த புத்தகத்தை  எழுதியவர் நாகசாமி என்ற பிறாமணர், இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு தலைமை தாங்கியவர் காஞ்சி மடத்து வியயேந்திரன்.  குறிப்பு:– தமிழ்தாய் வாழ்த்திற்கு தியானம் செய்கிறேன் என்று அவமதித்த வியயேந்திரனிடம் தமிழுக்கும் தமிழருக்கும் துரோகமான நிகழ்ச்சி என்றால் கலந்து கொள்வான் போல.

செவி வழிச்செய்தியாக மகா பெரியவா என்ற காஞ்சி மடத்து பெரியவா பூசையின் போது தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் ஆகையால் குளிக்க வேண்டும் என்றாராம், தமிழ் நீச பாஷை என்றாராம்.

திருப்பாவையில் வரும் தீக்குறளை சென்றோதோம் (தீய சொல்லை கூற மாட்டோம் அல்லது கோள் பேசமாட்டோம்) என்ற சொல்லை மார்கழி மாதத்தில் திருக்குறளை படிக்க மாட்டோம் என்று தமிழுக்கு எதிராக தமிழிலக்கியத்தை திசை திருப்பிய தமிழின விரோதி இந்த காஞ்சி மடத்து பெரியவா.

தமிழும் சமசுகிருதமும் சிவனின் உடுக்கையிலிருந்து வந்தது என்று ஏமாற்றும் இவர்கள் இன்று வரை தமிழகத்து கோயில்களில் தமிழில் பூசை செய்ய மக்கள் போராடும் நிலையே உள்ளது.

இப்படி இன்றுவரை தமிழுக்கு எதிரான பல  செயல்களை செய்யும் இவர்களை நம் முன்னோர்கள் குறைக்கூறியது போன்று இன்று நாம் குறைக்கூறுவது தவறே இல்லை… அன்று முதல் இன்று வரை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களாக பிறாமணர்கள் கொஞ்சம் கூட மாறாமல் இருப்பது வியப்பு என்றாலும் , பிற + மண்ணினர் = பிராமணர் என்ற பெயருக்கான இயல்பே அவர்களின் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான போக்கு

தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு (குறிப்பாக பேசக்கூடிய) மொழிப்பெயர்ப்பு செய்வதில் தவறேதுமில்லை ஆனால் சமசுகிருதம் என்பது பிணத்திற்கு சமம் என்பது அனைவரும் தெரிந்ததே அப்படிப்பட்ட மொழியில் மாற்றப்பட்ட இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளுக்கு பின் சமசுகிருத இலக்கியங்களே தமிழில் வந்தது என்று வழக்கம் போல் கூறிடுவர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.