குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள்…. ! ஈழத் தமிழ் ஆதிக் குடிகளின் பிரமிக்க வைக்கும் தொல்பொருட்சான்ற

12.04.2019-தமிழர் தாயகத்தின் தென் தமிழீழம் அல்லது இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ஆதித் தமிழ்க் குடிகளான பெரும் கற்கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சின்னங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களது புராதன சின்னம் என்பதனால் சிறிலங்கா அரசின் தொல்பொருள் திணைக்களம் இதனைப் பாதுகாப்பதிலிருந்து தவறிவருவதாக பிரதேச மக்கள் அங்கலாய்த்துள்ளனர்.

ஈழத் தமிழரின் ஆதிக் குடிகள் எனப்படும் நாகர்கள் பெருங் கற்கால மனிதர்களாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடியிருப்புக்கள் விரவிக் காணப்பட்டதாக கூறப்படும் அம்பாறையின் காட்டுப் பகுதி ஒன்றில் இந்த தொல்பொருள் சின்னங்கள் சிதைவடையும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையின் சங்கமன்கந்தை எனப்படும் பிரதேசத்திலிருந்து மேற்கே காட்டுப்புறமாக இந்த பழம்பெரும் சின்னங்கள் காணப்படுவதுடன், இவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தையும் பிற்பட்ட காலத்தையும் குறித்து நிற்பதாக நம்பப்படுகிறது.

குறித்த பகுதி மலைப்பாங்கான இடமாக இருப்பதுடன், அங்கு அடிக்கடி சட்டவிரோதமான புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் இதனால், புராதன சின்னக்கள் அழிவடையும் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்களால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அந்த பிரதேசத்தினை தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்தபோதிலும் இதுவரை அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இறங்காதது ஏன் என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

பெரும் கற்கால மனிதர்களால் பாவனைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாறையில் குடைந்த நேர்த்தியான தொட்டிகள் மற்றும் குழிகள் என்பன இந்த பகுதியில் காணப்படுகின்றன.மேலும் கல்லறைகள், நடுகல் அடையாளங்கள், பாறைத் தூண்கள், கல்வெட்டுக்கள் என்பனவும் ஆங்காங்கே காணப்படுகின்றன.முக்கியமாக இந்தப் பகுதியில் காணப்படும் நடுகல் சின்னங்களானது புராதன தமிழ் மொழியினைப் பேசிய மக்களின் இருப்புக்கு மிகப்பெரிய சான்றாதாரமாக விளங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் பத்மநாதன் குறிபிடுகின்றார்.

நடுகல் பண்பாடானது இரும்புக் காலம் எனப்படும் பெரும் கற்கால மனிதர்களுக்குரியதென கூறும் அவர், இலங்கையில் பூர்வ குடிகள் எனப்படும் நாகர்களே இந்த முறைமையினைப் பின்பற்றிவந்ததாக சான்றுபகர்கிறார்.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், பானை ஓடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக் காணபட்டதாகவும் இதனை தென்னிந்திய ஆய்வாளர்கள் உறுதி செய்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிப்படையில் இலங்கையில் சிங்களவர்களின் புராதன சின்னங்களைப் பாதுகாக்கும் அதே ஆர்வத்தினை தமிழரின் புராதன சின்னங்களையும் பாதுகாப்பதற்கு இலங்கையின் தொல்பொருட்கள் திணைக்களம் செலுத்தவேண்டும் என பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். செய்வார்களா என்பதைக் காலம்தான் பதில்சொல்லும்….

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.