குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஈழமக்கள் மொழிக்காக தமிழ்ப்பண்பாட்டிற்கான கொள்கைக்காக உயிர்விட்ட நிலம் அதனை உயிர் போலக்காப்போம்!

20.03.2019 - முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தல் தொடர்பானது.-குறித்த ஒரு நகரின் / பிரதேசத்தின் ஆரம்ப கட்டுமானம் என்பது, அந்த பிரதேசத்தின் நீர்நிலைகளை ( Water Sources of land) கருத்தில் கொண்டும் - நீர் ஆதாரங்கள் சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் மூலமே சாத்தியமாகிறது.

நீர் ஆதாரங்கள் சீரழிந்து போகாதவாறு அடிப்படை நில ஒழுங்கு படுத்தல்களை( காடு மற்றும் சூழல் கெடாத வகையில் மிக கவனமாக கையாள வேண்டும்) மிக கட்டாயமாக செய்து முடித்த பின்னர் தான்,

நகர கட்டுமானம் அல்லது அபிவிருத்தி பக்கம் போக வேண்டும்.

இதை கடைபிடித்த அல்லது மிக கவனமாக சூழலை கையாண்டு குறிப்பிட்ட சில நகரங்கள் உலகத்தில்

மிக குறிப்பிட்ட நாடுகளில் உருவாக்க பட்டிருக்கின்றன.

இயற்கை அழிவுகள் மற்றும் பேரிடர் காலங்களில் இந்த நகரங்கள் மட்டுமே, அங்கு வாழும் மக்களுடன் தப்பி பிழைக்கின்றன !

[சில உதாரணங்கள் _ நெதர்லாந்து நாட்டின் Amsterdam நகரம்,

பிலிப்பைன்சு நாட்டில் உள்ள இயற்கை நீர்நிலை கால்வாய்கள், Japan நாட்டின் Tokyo நகர  வடிகால் கட்டமைப்பு கட்டுமானம். ]உலகில் உள்ள 90 வீதமான நகரங்கள்,

'நீர் ஆதாரங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு முறைமைகள் ' ( Water sources and environmental protection systems) என்கிற அடிப்படை காரணியை கொண்டு உருவாக்க படாத காரணத்தால் தான், சிறிய அளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது கூட பாதிப்பு அடைகின்றன.

இன்றளவும் மூன்றாம் தர வளரும் நாடுகளில் இத்தகைய மூல - வள அபிவிருத்தி என்பது பல்வேறு வகையான காரணிகளால் சாத்தியமே இல்லாத விடயமாக உள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தம் காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில்,

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்

தங்களது முயற்சிக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பிலான நன்றிகளும் - பரிந்துரைகளும்.

1. சுண்டிக்குளம் தொடங்கி கொக்கிளாய் கடல் நீரேரி வரையான கடல் கரை மற்றும் சதுப்பு நிலங்களை

' தூர் வார்ந்து/ சீரமைத்து - நீரேரி மற்றும் நீர்நிலைகளின் இணைப்புக்களை மீள ஒழுங்கு படுத்துவதன் மூலம்'

சுற்றுலா துறைக்கான அடிப்படை கட்டமைப்பை ' நீண்டகால நோக்கில்'

ஏற்படுத்தல்.

2. எங்களின் முதலாவது பரிந்துரையின் பேரில்,

நீண்ட கால நோக்கில் அப்படி சீரமைக்கப்படும் சுண்டிக்குளம் தொடக்கம் கொக்கிளாய் வரையான நந்திக்கடலின் இனம் காணப்பட்ட அழகிய இடங்களில்

படகு சவாரி - நதியோர நடைபாதை - புல்வெளி பரப்புக்கள் -

கட்டண துவிச்சக்கரவண்டி சேவை முனையங்கள் - சிறுவர் பூங்காக்கள் அமைத்தல். ( உதாரணமாக, வட்டுவாகல் தொடங்கி சிலாவத்தை வரையான அழகிய நந்திக்கடல் கரையோரத்தில் இனங்கானப்படும் 'இறங்கு- ஏறு படகு துறைகளில் சுற்றுலா முனையங்களை நிறுவுதல்)

3. முல்லைத்தீவு பெருநில மக்களின்

நீர்நிலைகளை மீள ஒழுங்கு படுத்தும் அடிப்படை வேண்டுதல் நிறைவேற்றப்படுமானால், எங்களது பணிவான மூன்றாம் பரிந்துரை,

" நந்திக்கடல் மற்றும் சூழ உள்ள நீர்நிலைகளில் படகு சவாரி மற்றும் படகு போக்குவரத்தை ஆரம்பித்தல்."

4. கொக்கிளாய் பறவைகள் சரணாலயம், சுண்டிக்குளம் தேசிய பறவைகள் சரணாலயம், தமிழரின் அடையாளமான குருந்தூர் மலை, பழந்தமிழர் வன்னி தலைநகர் வாவெட்டி பிரதேசம், மாத்தளன் நீச்சல் குள - கடல் தடாகங்கள் , செம்மலை கடற்கரை

போன்ற முல்லைத்தீவின் குறிப்பிடத்தக்க அழகிய அடையாளங்களில் சுற்றுலா முனையங்கள் அமைத்தல். கூடவே முல்லைத்தீவு பிரதேச உள்ளூர் உற்பத்திகளை சுற்றுலா பயணிகள் நுகர கூடிய விதத்தில் விற்பனை முனையங்கள் அமைத்தல்.

5. முல்லைத்தீவு நகர பகுதியில்,

தமிழர் - முல்லைத்தீவு நில பெருமைகளை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாகவும்

நீண்ட நோக்கில் நமது அடையாளம் நிலைக்கும் விதமாகவும்

' அருங்காட்சியகம் அமைத்தல்.'

முல்லைத்தீவு மக்களாகிய நாங்கள் அனைவரும் பரிந்துரை செய்யும் இவ் ஐந்து பரிந்துரைகளில் முதலாவது / அடிப்படை பரிந்துரையான,

' சுண்டிக்குளம் தொடங்கி கொக்கிளாய் வரையான கடல் மற்றும் நீர்நிலைகளை ஒழுங்கு படுத்தி இணைத்தல்' மூலமே அடுத்து வரும் அத்தனையையும் சாத்தியமாகி சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாயை மக்களுக்கானதாக்க இயலும்.

எனவே எங்களது நிலமும் - நீரும் மாசுபடாது எங்கள் வாழ்வாதாரம் சுற்றுலா துறை மூலம் பெருக,

தாங்கள் உதவுவதுடன் தங்களது இந்த சேவைக்கு முல்லைத்தீவு மக்களும் உறுதுணையாக இருப்போம் என அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.