குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

திருக்குறளும் ஆரிய சூழ்ச்சியும் குத்தூசி ஆரிய மாயை

16.03.2019-இந்தியா முழுவதும் ஒரு தனித்துவம் கொண்ட ஒரு இனம்/ மொழி உண்டென்றால்  அது தமிழினமும் தமிழ் மொழி மட்டுமே.இலக்கியமானாலும் சரி , சமயமானாலும் சரி, பகுத்தறிவானாலும் சரி தமிழினிம் தனித்து இந்திய மொழிகளில் (இறந்த மொழியும் சேர்த்தே) முன்னே நிற்கும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையிருந்தும் தமிழினம் தன் பெருமையை உணர மறுக்கிறது.

தமிழில் உள்ள இலக்கியங்களில் பெயரளவில் அறிந்தவர்கள் மிக மிகச் சிலரே, ஆனால் தமிழனாக பிறந்தவர் ஒரு குறளேனும் தன் வாழ்நாளில் படிக்காமல் இருந்திருக்க மாட்டார். தமிழினத்துக்கு என்ற தனி அடையாளமான திருக்குறளை திருடவும் தன்னகப்படுத்தவும் துடிக்கிறது பல கூட்டம். ஒவ்வொரு கூட்டமும் தனக்கென ஒரு வழியையும் வாதத்தையும் முன்னிருத்தி தன்னகப்படுத்தவே நினைக்கிறது. திருக்குறளை திருட நினைக்கும் கூட்டத்தில் ஆரிய கூத்தாடிகளில் சூழ்ச்சியை இப்பதிவில் காண்போம்

1950களில் திருக்குறளை சமசுகிருத மொழியாக்கம் செய்து அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளை பிறாமணர் என்று மாற்றியது குள்ளநரி கூட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களவை உறுப்பினர் தருண் வியய் திருவள்ளுவரை பற்றியும் , திருக்குறளை பற்றியும் மாநிலங்களவையிலும் பொது இடங்களிலும் பேசினார். அதோடு நிற்காமல் திருவள்ளுவருக்கு சிலை அரித்துவாரில் திருவள்ளுவருக்கு பெருத்த அவமானத்திற்கு பிறகு நிறுவப்பட்டது.

தருண் வியயின் தமிழ் பற்றையோ திருவள்ளவரின் மீது உள்ள பற்றை சந்தேகிக்கும் வண்ணமாக 2018 சனவரியில் நாகசாமி , திருக்குறள் சமசுகிருத வேதத்தின் சாரம் என்ற ஆங்கில புத்தகத்தை காஞ்சி மட இன்றைய மடாதிபதியான வியயேந்திரனின் முன்னிலையில் வெளியிட்டனர்.

நாகசாமியின் புத்தகம் வெளிவந்த சில மாதங்களில் (ஆகத்து மாதம் 10 நாள்) முன்னாள் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி மார்கண்டே கட்யு , திருவள்ளுவர் ஒரு பிறாமணர், பிறாமணரால் மட்டுமே இவ்வளவு சமசுகிருத சொல்லை (அகர ஆதி பகவன் போன்ற தமிழ் சொற்களை தனதாக்க நினைக்கிறது ஆரியம்) பயன்படுத்த முடியும் என்றும் அதன் பிறகு சிலப்பதிகாரம், மணிமேகலை, திருப்பாவை, கம்ப இராமாயணம், போன்றவை பிறாமணர்களால் எழுதப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். மேலும் பிறாமணர்களை தவிர படித்தவர்கள் முன்பு இருந்ததில்லை என்று காரணத்தையும் கொடுத்திருக்கிறார்.

அதாவது தருண் வியய் திருவள்ளுவரை தமிழரல்லாதவருக்கு அறிமுகப்படுத்த முயன்றவுடன், நாகசாமி திருவள்ளுவர் எழுதியது சமசுகிருத சாரத்தை என்றார், மார்கண்டேய கட்யு திருக்குறள் மட்டும் சமசுக்கிருத சாரமில்லை எழுதிய திருவள்ளுவரே பிறாமணர்தான் ஏனென்றால் பிறாமணர்கள் மட்டுமே படித்தவர்கள் என்று கூறியுள்ளார்.

 

இப்போது தமிழரல்லாதவரிடம் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் கேட்டால், ஆம் திருவள்ளுவர் பிறாமணர்தான் திருக்குறள் சமசுகிருத வேதத்தின் சாரம்தான் என்று தெளிவாக சொல்லுவார்கள்.

 

மேற்கூறியவற்றை சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் இதுதான் ஆரிய சூழ்ச்சி.

 

தன் இனத்தில் தோன்றிடாவிடினும் தன் இனத்தாராக மேற்கூறிய வழிமுறைகளை கொண்டு சேர்த்திடுவர். உதாரணமாக ஆதி சங்கரன், நால்வரில் திருஞான சம்பந்தர்.

தன் மொழியில் இல்லாவிடினும் தன் வர்ணத்தாந்தான் எழுதினான், தாய் வழியாகவோ அல்லது தந்தை வழியாகவோ பிறாமணர் தொடர்பு ஏற்பட்டதால்தான் அவரால் எழுத முடிந்தது என்பர்- உதாரணமாக திருவள்ளுவர்.

தன் இனத்தாராக இல்லாமல் ஒரு அருளாளர் இருந்தால் அவரை மறைக்கவோ ( வள்ளலார்) , அருவெறுப்பான கதைகள் கட்டியோ , ஆபாச கதைகள் கட்டியோ தாழ்த்திடுவர் (அருணகிரிநாதர் )