குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

ஈழ நாட்டியம் வேர்களிலிருந்து விரியும் நம் கலை அடையாளம்

05.03.2019-ஈழ நாட்டியம் இன்று உருப்பெற்று உலகப் பரப்பில் ஈழத் தமிழர்களின் கலைத்துவ தனித்துவ முகமாய் நம் ஆடல் வடிவமாய் அடையாள தெறிப்பாய் நம் வேர்களிலிருந்து விருட்சம் என வெடித்து கிளை விடும் நம் ஆடல் வகை.02.03.2019 பிரான்சின் ஒன்லி சுபா பிராந்திய தமிழ் சோலைப் பள்ளி ஆண்டு விழா அரங்கில் ஈழ நாட்டியம் அரங்கேறிய காட்சிகள்.

தங்களுக்கான கலையை தங்கள் கையில் எடுக்கிறோம் என்ற மகிழ்வும் ஆர்வமும் மேலிட ஆடல் பயிற்சிகளில் ஈடு பட்ட மாணவர்கள் ஒரு வரலாற்று திருப்பு முனைக்கான திறவுகோலின் ஒரு முனையாய் இயங்கும் மகோன்னத மனோ நிலையுடன் அரங்கு கண்டனர்.

அரங்கு நிறைந்த கூட்டம் நிகழ்வு தொடங்கும் போது ஆரவாரம் அடங்கி பார்வையாளர்களின் கடைசி இருக்கை கூட அரங்கை நோக்கிய கண்ணிமையா கவனத்துடன் இருக்க
ஈழ நாட்டியம் இருபது நிமிட அளிக்கையாய் எல்லோர் மனதிலும் எங்கள் நடனம் என்ற இருப்பை விதைத்து நின்றது.

ஆரவார கரகோசம் அரங்கை அதிர வைக்க பார்த்தவர்கள் பரவசப் பட்டு நின்றனர்.

ஒவ்வொருவரும் உணர்ச்சி மயமான அபிப்பிராயங்களை சொல்லிக் அளிக்கையாளர்களை ஆரத் தழுவிய காட்சிகள் ஈழ நாட்டியத்துக்கான அங்கிகாரமாய் மகிழ்வின் பிரவாகத்தை மனதில் பரவ விட்டு இன்னமும் இன்னமு நாம் செல்ல வேண்டிய பாதை நீண்டதும் பொறுப்பு மிகுந்ததும் என்பதை உணர்த்தி நின்றது.

எண்பது வயது முதியவர் ஒருவர் என் கையைப் பிடித்து முத்தமிட்டு சொன்னார் 
"என் மண்ணில் நிற்பது போல் உணர்கிறேன் "
என்றார்
மற்றொருவர் "எங்களுக்கான் வடிவம் என்ன உதவி வேணுமோ சொல்லுங்க " என்றார்.

கூத்து விடிய விடிய ஆடப் படுவது "ஈழ நாட்டியம் " ஒரு ஐந்து நிமிடம் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரை நீளக் கூடியது .

பேராசிரியர் வித்தியானந்தன் விடிய விடிய வட்டக் களரியில் ஆடிய கூத்தை ஆடிய கூத்தை மணிக் கணக்கில் சுருக்கி படச்சட்ட மேடைக்கு கொணர்ந்தார்.

நான் இன்றைய சர்வதேச அரங்க நியமங்கள் வழியில் பல நிமிடங்களில் ஆட்டக் கோலங்களாலான ஈழ நாட்டியத்தை அறிமுகப் படுத்தியுள்ளேன்

உடை ஒப்பனை என எல்லாவற்றிலும் ஒரு புதிய மொழியாய் ஈழ நாட்டியம் நம் மரபிலிருந்து இன்னமும் பெற வேண்டிய கூறுகள் உள்ளன .

ஈழ நாட்டியத்துக்கான இந்த உடையும் ஒரு அறிமுகமே மேலும் இது மெருகு பெற வேண்டும் குறுகிய காலத்தில் இவை தயாரிக்கப் பட்டன .

ஈழ நாட்டியம் இதை செய்ய பாலசுகுமார் யார் என்ற முணு முணுப்பு ஒரு சிலரின் வாய்களில் வந்து போகின்றமை நான் அறிவேன் .எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது என நான் துணிந்து கூறுவேன் .

ஐரோப்பாவில் நாடக ம்பவான் ஒருவர் 
"ஈழ நாட்டியம் அதுக்கு பல்கலைக் கழக அங்கிகாரம் தேவை மெளனகு குரு தொடங்கிப் போட்டு விட்டிற்றார் இவர் எப்படிச் செய்யப் போறார்"
என்று சொல்லியிருக்கிறார்

ஒரு கலை வடிவம் அதன் உருவாக்கமும் மக்களிடமிருந்தே பிறக்கின்றன பல்கலைக் கழகம் அங்கிகரிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.பேராசிரியர் மெளனகுரு ஈழ நாட்டியம் என்ற சொள்ளாடலை பயன்படுத்தவே இல்லை .ஆனால் ஈழ நாடியத்துக்கான அடிப்படைகள் அவர் ஆற்றுகைகளில் வெளிப் பட்டன.அவரே என் ஈழ நாட்டிய கருத்துருவாக்கத்துக்கான உந்துதல்.

ஈழ நாட்டியம் என்ற கருத்துருவாக்கத்துக்கான் ஆரம்ப முயற்சி 2009ஆம் ஆண்டு ஜனவரியில் கருக் கொண்டது தோழர் கி.பி அரவிந்தன் ,தோழர் முகிலன்(முகுந்தன்) இந்த முயற்சிக்கான முதல் கல்லாய் இருந்தனர் சிலம்பு வருடம் தோறும் நடத்தும் பொங்கல் விழாவில் அரங்காற்றுகைக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன பாரிசில் நீண்ட காலம் பரத நாட்டிய வகுப்புகளை நடத்தி வரும் தனிசா அவர்களின் மாணவர்கள் கலந்து கொண்டனர் ஆனால் அன்றைய அரசியல் சூழல் அந்த நிகழ்வை நடத்த முடியாமல் போயிற்று .

இன்று பத்து வருடம் கழித்து அன்று போட்ட முதல் புள்ளி இன்று நனவாகியிருக்கு.பாரிசில் தங்கள் அர்ப்பணிப்பால் ஈழத் தமிழர் கலை செயல் பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் நல்லையா வாசுகி தம்பதிகள் ஈழ நாட்டிய ஆற்றுகை வெற்றிக்கு உறு துணையாய் இருந்தனர்.ஒன்லி தமிழ்சோலைப் பள்ளி அதன் நிர்வாகிகள் இங்கு முக்கியம் பெறுகின்றனர்.

ஈழ நாட்டிய நிகழ்வில் தங்கள் பிள்ளைகளை ஈடு படுத்திய பெற்றோருக்கு என் பாராட்டுகள்..

பங்கு கொண்ட பதினொரு மாணவர்கள் ஒரி வரலாற்று பாச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

என் சிறு வயதில் சாலையூரில் "வள்ளிக் கூத்தை" பார்த்து வளர்ந்தவன் வளர நானே ஆடகனாய் அறிமுகமாகிய அரங்க்குகள் பல நூறு.

பேராசிரியர்கள் கைலாசபதி,சிவத்தம்பி,வித்தியானந்தன் ,சண்முகதாஸ் ஆகியோரிடம் அறிவார்ந்த அறிதலும் பேராசிரியர் மெளனகுருவிடம் ஆற்றுகையும் அறிவும் இணைந்த அறிதல் என்னை நெறிப் படுத்தி செம்மையிட்டது.

இந்தியாவின் தலை சிறந்த அரங்கவியலாளர்களிடம் அரங்க கலையயை கற்றுக் கொண்டதும் புரசை கண்ணப்பத் தம்பிரானிடமும் பேராசிரியர்.ஆறுமுகத்திடமும் தெருக்கூத்து பயின்றதும் அனுபவ வழிப் பட்ட பயணம்.

ஈழ நாட்டியம் அதை முன் மொழிவதற்கான தகுதியை இவர்களிடமிருந்து மட்டுமல்ல என் முப்பாட்டன் வழி வந்த பரம்பரை புலவர் கலை மரபும் துணைவர ஈழ நாட்டியமாய் எங்கள் அடையாளமாய் உங்களோடு நான்.

ஈழ நாட்டிய அரங்காற்றுகையில் கலந்து கொண்ட அனைவருமே பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்கள் தாம் வாழும் சூழலில் நடை முறை கேள்வியாய் மற்ற சமூகத்தினர் உங்கள் பாரம்பரிய நடனம் எது என்ற கேள்விக்கு கருத்தியல் தளத்திலும் ஆற்றுகை தளத்திலும் பதில் சொல்லும் திறன் படைத்தவர்களாய் இன்று

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.