குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வசமாக மாட்டிய பூநகரி பெண் அரச அதிகாரி

20.01.2019-இலங்கை பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கு இலஞ்சமான பணம் பெற்றுக்கொண் ட பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கையும் களவுமாக அதிகாரிகளால் மடக்கிப் பிடிக் கப்பட்டார்.பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அதிகாரியே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பூநகரி பிரதேசசெயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் ஒருவர், பயனாளிகளிற்கான வாழ்வாதார உதவிக்காக இலஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கான காசோலையை வழங்கும்போது, 15,000 ரூபா பணம் இலஞசமாக கோருகிறார் என பயனாளி ஒருவரால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தேநீர்கடையில் வைத்தே, அபிவிருத்தி உத்தியோகத்தர் பெற்றுக்கொள்வார் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், பொலிஸாரும் கொழும்பிலிருந்து வந்திருந்தனர்.

நேற்று இலஞ்சப்பணம் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேனீர்கடையில் சிவில் உடையில், தேநீர் பருகுபவர்களை போல அதிகாரிகள் இருந்தார்கள்.

குறிப்பிட்ட பயனாளி அங்கு காத்திருந்தார். அதிகாரி கடைக்கு வந்து இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதை இரகசியமாக படம் பிடித்துக் கொண்டார்கள்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் இலஞ்சம் வாங்கியதற்கான ஒளிப்பட ஆதாரத்தை அதிகாரிகள் பெற்றதால், ஊழியர் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்தப் பெண் உத்தியோகத்தர் நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். சில மாதங்களின் முன்பாகவே, பூநகரி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.