குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

'தமிழ்த் தேசியப் போராளி' அண்ணல் தங்கோ நினைவு நாள்-4.1.1974

04.01.2019-2049-தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித்தமிழில் பெயர் சூட்டும் படி செய்தது. அது பேராயக் கட்சியை சார்ந்த ஒருவரையும் ஈர்க்கும் படி செய்தது. அவர் வேறு யாருமல்ல; 'தூய தமிழ்க்காவலர்' என்று அனழக்கப்படும் அண்ணல் தங்கோ அவர்கள் தான். இவர் பெற்றோர் சூட்டிய இராமநாதன் என்ற பெயரை விடுத்து அண்ணல் தங்கோ என்று பெயரிட்டுக் கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் கண்டவராயன் பட்டியில் இல.முருகப்பனார்- மாணிக்கம்மாள் இணையருக்கு முதல் மகனாக 12.4.1904ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்த காரணத்தால் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமையின் பிடிக்குள் குடும்பம் சிக்கியதால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார்.

இளமைக்காலத்தில் பள்ளி செல்லாவிட்டாலும் தமிழ்மொழி உணர்வும் தமிழினப்பற்றும் அரும்பியவராக வளர்ந்தார். 1918ஆம் ஆண்டு இவருடைய தந்தையாரின் நண்பர் கருத்தான் செட்டியார் என்பவர் மூலம் இரங்கூனுக்குச் சென்று பொருளீட்டும் வாய்ப்பு அண்ணலுக்கு கிடைத்தது. அவற்றை உதறித்தள்ளிவிட்டு இந்திய விடுதலைக்கு போராடி வந்த பேராயக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1923ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வக்கீல் புதுத் தெருவில் குடியிருந்த மறியல் அணித் தலைவர் வழக்கறிஞர் அ.வைத்தியநாத ஐயர், சிதம்பர நாதன் ஆகியோர்களோடு இணைந்து கள்ளுக்கடை மறியலுக்கு தலைமை ஏற்றார். மூன்று மாத சிறைத் தண்டனை பெற்று வெளியே வந்த போதும் போராட்டத்தை கைவிட மறுத்தார். மீண்டும் மறியல் செய்து மூன்று மாத கடுந்தண்டனை பெற்றார்.

அதே ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற பேராயக்கட்சி மாநாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்கள் பிரித்தானியர் தடையை மீறி கொடியேந்தி அணி வகுத்தனர். கொடியேந்திப் போராட்டம் நடத்த குழுக்கள் உருவாக்கப்பட்டன. அப்போது தொண்டர்படைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணலும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு கொடியேந்தி பிரித்தானிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

1925ஆம் ஆண்டுவாக்கில் பெரியாரின் "குடியரசு" ஏடு தொடங்கப்பட்டு காந்தியாரின் கொள்கைகளைப் பரப்பி வந்தது. அதன் வெளியீட்டாளர் தங்கப் பெருமாள் பிள்ளை உதவியோடு "குடியரசு "ஏட்டின் துணையாசிரியராக பணிபுரிந்தார். அப்போது சைமன்குழு எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றதால் அண்ணல் தங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் "குடியரசு "ஏட்டில் அவரால் தொடர்ந்து பணியாற்ற இயல வில்லை.

அண்ணல் காங்கிரசில் இருந்த போதே 1927ஆம் ஆண்டு புரோகிதம் மறுத்து சிவமணியம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தில் திருக்குறள் ஓதி இவரே தலைமையேற்று நடத்திய முதல் புரட்சி திருமணமும் இது தான். சிவமணியம்மையாரின் தந்தையார் முருகப்பர் என்பவர் குடியேற்றம் (வேலூர்-குடியாத்தம்) பகுதியில் திருக்குறள் நெறி பரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்த ஆண்டில்தான் அண்ணல் தங்கோ நடத்திய கொடுங்கோலன் நீலன் சிலை உடைப்புப் போராட்டம் மிக முக்கியமானது. இப்போராட்டம் காரணமாக சென்னை அண்ணாசாலையில் இருந்த நீலன் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு எழும்பூர் தொல்பொருள் காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனையும் கிடைத்தது.

1934இல் காந்தியாரை சந்தித்து தீண்டாமைக்கு எதிராக நிதி திரட்டி தருவதாக உறுதியளித்தார். அதன்படி குடியேற்றம் (வேலூர்- குடியாத்தம்) பகுதிக்கு நிதி பெறுவதற்காக 18.2.1934இல் காந்தியார் வருகை தந்தார். அவருடன் பிராமணர்களாகிய இராசாசி, டி.எஸ்.எஸ் . இராசன் ஆகியோர் வந்திருந்தனர். ஏற்கெனவே அண்ணல் தங்கோ பிராமண எதிர்ப்புக் கொள்கை உடையவர் என்பதை அறிந்திருந்தனர். அண்ணல் அவர்கள் காந்தியாரோடு நெருக்கம் கொள்வதை இருவரும் விரும்ப வில்லை. மக்கள் கூட்டம் காந்தியின் பேச்சை கேட்க அலைமோதியது.

மக்களிடம் அண்ணலுக்கு இருக்கும் செல்வாக்கை காந்தியார் வியந்து பேசக் கூடும் என்பதை அறிந்த இருவரும் காந்தியை பேச விடாமல் தடுத்து ஆம்பூருக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்டு அண்ணல் கொதித்தெழுந்தார். பேராயக் கட்சி இனியும் நீடித்தால் தமிழ் நாட்டில் பிராமண ஆதிக்கத்தை வேரறுக்க முடியாது என்பதை உணர்ந்து அக்கட்சியை விட்டு வெளியேறினார்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையை தொடங்கி, உலகத் தமிழ் மக்களே! ஒன்று சேருங்கள்! தமிழ்த் தாயைத் தனியரசாள வையுங்கள்! என்று முழக்கம் செய்தார். அவ்வாண்டிலே தை முதல்நாளில் 'தமிழர் திருநாள் விழா' பெயரில் தமிழ்ச்சான்றோர்களை சிறப்பித்து பாராட்டுரை வழங்கினார். தமிழர் திருநாள் விழாவை அறிமுகம் செய்து வைத்த தமிழறிஞர் கா.நமச்சிவாயம் வழியில் இந்நிகழ்வை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அண்ணல் தங்கோ ஒரு சிறந்த பாவலரும் கூட. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் அவர் எழுதிய

"நேற்று பிறந்த மொழி! முத்தம்மா! நீட்டி அளக்குதடி! ஆற்றல் நிறைந்த தமிழ்! முத்தம்மா! ஆட்டங் கொடுக்குதடி!"

பாடல் தமிழரை தட்டியெழுப்பிய பாடலாகும்.

பராசக்தி திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் வரும்

"எல்லோரும் வாழ வேண்டும் -உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்"

பாடல் இவர் எழுதியதே!

முதல் இந்தி எதிர்ப்புப் போரில் 15.1.1939இல் முதல் களப்பலியானவர் நடராசன். அவரின் கல்லறையில் நின்று கொண்டு

"நடராசன் அவர் குடிக்கு ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான், திருமணம் செய்வோம் என பெற்றோர் எண்ணியிருந்தனர். மணக்கோலத்தில் போக இருந்தவர் இப்படி பிணக்கோலத்தில் சென்று விட்டாரே" என்று அண்ணல் தங்கோ உருக்கமாக உரையாற்றிய போது கண் கலங்காதவர்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

ஈ.வெ.ராமசாமி பெரியாரோடும் அவர் நீதிக்கட்சியில் பணி புரிந்தார். 1940இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தென்னகத்தில் வாழும் மக்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், கொங்கணர், ஒரியர் , மராட்டியர், குசராத்தியர் யாவரும் தங்களைத் "தமிழ் மக்கள் "என்றும், தமிழ் நாட்டினர் தம்மைத் "தமிழர்கள்" என்றும் பதிவு செய்தல் வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதனைப் பொருள் ஆய்வுக்குழுவில் கொண்டு வராமல் பெரியாரும், அண்ணாவும் கூடிப்பேசி தமிழர் உட்பட அனைவரும் தங்களை "திராவிடர் "என்று பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றினர். அத்தீர்மானத்தை அண்ணல் தங்கோ வாயால் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதனை ஒப்புக் கொள்ளாத அண்ணல் தங்கோ தமிழரல்லாதவர்கள் எந்தப்பெயரையும் பதிவு செய்து கொள்ளட்டும், ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர் அனைவரும் தமிழர் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நீதிக்கட்சி நடத்திய ஏடுகளெல்லாம் தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா, ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்றும் பெயர் வைத்து தமிழரின் இன அடையாளத்தை மறுத்து வந்தன. இதைப் புரிந்து கொண்ட அண்ணல் தங்கோ 1942இல் 'தமிழ் நிலம்' எனும் ஏட்டைத் தொடங்கினார். அதில் தமிழர் நிலத்திற்கு வேலி இல்லாததை நினைத்து,

"வீட்டுக் கரண் வைத்தனை! -வயலுக்கும் வேலி அரண் வைத்தனை, நாட்டுக் கரண் வைத்திலை! தமிழா! இல்லையே???"

என்று பாடல் தீட்டினார்.

1944இல் நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் தன் கருத்தை பதிவிட அண்ணல் தங்கோ தயங்க வில்லை. கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியன், தங்கவேலு ஆகியோரோடு இணைந்து 'தமிழர் கழகம்' பெயரை சூட்டிமாறு வாதாடினார். வழக்கம் போல் ஈ.வெ.ரா. பெரியாரும் திராவிடப் பித்து தலைக்கேறி 'திராவிடர் கழகம்' என்றே பெயர் சூட்டிட இதை ஏற்க அண்ணல் தங்கோவின் மனம் இடம் தரவில்லை. உடனடியாக அக்கட்சியை விட்டு விலகினார்.

1950ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அண்ணல் தங்கோ அதில் பங்கேற்று "திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதிலே நாராசம் ஊற்றியது போல் இருக்கிறது" என்றும் இம்மாநாட்டில் மூவேந்தர் சின்னமான புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியை ஏன் ஏற்ற வில்லை? என்றும் சினத்தோடு வினா எழுப்பினார்.

அதற்கு அண்ணா பதிலளிக்கையில், பொது மேடைகளில் பேசி வேற்றுமை களை அதிகப்படுத்தக் கூடாது என்றும், திராவிடம் பற்றி என்னிடம் நேரில் தெரிவித்திருக்கலாம் என்றும் குறைபட்டுக் கொண்டார். அதை விட திராவிடத்திற்கு அவர் அளித்த விளக்கம் நகைச்சுவையூட்டக் கூடியதாக இருந்தது. அண்ணா கூறியது பின்வருமாறு: "மாம்பழச்சாறுக்கும், கருப்பஞ்சாறுக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் தான் தமிழுக்கும், திராவிடத்திற்கும் உள்ளது. மாம்பழத்தின் சாறுக்கும், கரும்பின் சாறுக்கும் நாங்கள் வித்தியாசம் காண்பதில்லை. திராவிடம் என்ற சொல்லும், தமிழ் என்ற சொல்லும் இரண்டறக் கலந்திருக்கிறது. திராவிடம் என்ற ஒரு சொல் வித்தியாசத்துக்காக நண்பர் அண்ணல் தங்கோ நம்மை விட்டுப் பிரிந்திருக்கத் தேவையில்லை " என்றார் .

1953இல் ஆந்திரர்கள் தனிமாநிலம் கேட்டதோடு தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிக்க முயன்றனர். அப்போது அதனை எதிர்த்து வேலூரில் தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தி தமிழர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தார்.

தமிழில் பிறருக்கு பெயர் சூட்டி அழைப்பதிலும் இவருக்கு ஈடு இணை யாருமில்லை என்று தான் கூற வேண்டும். கலைஞர் கருணாநிதி- அருட்செல்வம், சின்னராசு- சி.பி.சிற்றரசு, காந்திமதி- அரசியல் மணி

(ஈ.வெ.ரா.பெரியார் துணைவியார் மணியம்மை), தார்ப்பிட்டோ சனார்த்தனம்- மன்பதைக்கன்பன், காமராசர்- காரழகனார், சோமசுந்தர பாரதியார்- நிலவழகனார் ஆதித்தனார்- பகலவனார், சீவானந்தம்- உயிரின்பன், மா.இராசமாணிக்கனார்- இறைமணிச்செல்வர், தருமாம்பாள்- அறச்செல்வியார், இராமநாதன்- தமிழ்வாணன் (கல்கண்டு ஆசிரியர்) என்று நேரில் பேசும் போதும், மடல் தீட்டும் போதும் தமிழ்ப்பெயரிட்டு துணிச்சலாக அழைத்தவர் இவர் ஒருவரே! கருணாநிதியை அருட்செல்வம் என்று அண்ணல் அழைத்த போது, " அது துறவியை குறிப்பது போல் இருக்குமென்றும், அண்ணாவே அதை விரும்ப வில்லை" என்றும் கூறி கருணாநிதி அப்பெயர் மாற்றத்தை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்வாழ்நாளின் இறுதிவரை "எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!" என்று முழங்கி வந்த அண்ணல் தங்கோ அவர்கள் குடல் ஓட்டையால் பாதிக்கப்பட்டு வேலூர் கிருத்துவ மருத்துவ மனையில் 4.1.1974இல் மறைந்தார்.

அப்போது நேரில் வந்து மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓவென தலையிலடித்து அழுதார். "தமிழ்மொழி ஒரு தன்னலமற்ற தொண்டனை இழந்து விட்டதே" என்ற படி கதறித் துடித்தார்.

அண்ணல் தங்கோ நினைவு நாளான இந்நாளில் அவர் தொடுத்த 'திராவிட' இனத்திரிபுவாத எதிர்ப்புப் போரை தொடர்ந்து முன்னெடுப்போம்! நம் மொழி தமிழ்மொழி... நம் இனம் தமிழினம்... நம் தேசம் தமிழ்த் தேசம்... என்றே எங்கும் எப்பொழுதும் முழங்கிடுவோம்!

நன்றி:

1. "தமிழ்த்தேசிய அரிமா' அண்ணல் தங்கோ - செ.அருள் செல்வன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீடு.

2. மறுமலர்ச்சி- மறுமலர்ச்சி நூல் நிலையம் வெளியீடு.

நன்றி:

Tamilthesiyan.wordpress.com

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.